Monday, April 4, 2011

நானும் காற்றாடி போல்தான்!

கடற்க்கரை சாலை ஓரம்

காலாற நடந்த நேரம்

காற்றாடி ஒன்றை கண்டேன்

அது காற்றில் ஆடி ஆடி

நல்ல முகம் அதற்கு

பல முக்கோணம் வரைவதற்கு

கண்கள் இரண்டு வரைந்தது

ஆனால் தறிகெட்டு திரிந்தது

காற்றில் படபடக்கும் சத்தம்

சுதந்திரம் கேட்கும் அர்த்தம்

எங்கிருந்தோ அதை இழுக்க

அங்கே அது தவிக்க

விரல்களோ இன்னும் சொடுக்க

அங்குமிங்கும் அலைந்து துடிக்க

அதிகமாய் போராடியதால்தான்

பட்டென அறுந்தது நூல்தான்

விருட்டென சென்றது வான்தான்

நானும் காற்றாடி போல்தான்

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய