Saturday, October 29, 2011

தமிழின துரோகி பத்திரிகை இந்த தின(மலம்)மலர்

நாட்டுக்காக நல்லது செய்யவும் உண்மையை எடுத்துக் கூறவுமே இந்த பத்திரிகை, ஆனால் பத்திரிகை தர்மம், நீதி, நியாயம் என்று வரைமுறையும் இல்லாமல் ஒரு பத்திரிகை இருக்கிறது புளுகுமூட்டை பத்திரிகை என்றால் அது இந்த தின(மலம்)மலர் தான்.

யார் இந்த ஜெயின்? இந்திய அணுமின் கழகத் தலைவர்தானே, அவர் ஒன்றும் உளவுத்துறை தலைவரோ, உள்துறை மந்திரியோ அல்லவே? அவர் சொல்லிவிட்டாராம் கூடங்குள பிரச்சனையில் வெளிநாட்டின் உதவி இருக்கிறது என்று, அது உண்மையா இல்லை பொய்யா என்றுகூட பாராமல் தலையங்கமாய் சதி? என்று பதித்திர்க்கும் இந்த தின(மலம்)மலரைப் பற்றி சொன்னால் மட்டும் வக்காலத்து வாங்க வந்துவிடும் இரு கூட்டம்

ஒன்று பார்ப்பன கும்பல், இன்னொன்று சுயநலம் பிடித்து சொந்த நாட்டு மக்களையே பணயம் வைக்கும் கும்பல்

அணுமின் கழக தலைவரே சொல்லி இருக்கிறார், "ஹாட் ரன்" எனப்படும் தொழில்நுட்ப பணி முடிந்துவிட்டால், குளிரூட்டும் பணி தொடர்ந்து நடக்க வேண்டும் இல்லை என்றால் அதில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்ப்படும் என்று, சாதாரண அடிப்படை பணிகள் பாதிக்கப் பட்டாலே இவ்வளவு ஆபத்து என்றால் சுனாமி போன்ற இயற்க்கை சீற்ற காலங்களில் இந்த பணிகள் பாதிக்கபடதா என்ன? இன்னும் எவ்வளவு பாதிப்புகள் வரக்கூடும்?

அணுமின் கழக தலைவர் என்றால் அதற்கு என்ன பாதுகாப்பு தருகிறோம், உத்திரவாதம் தருகிறோம் என்றுதான் சொல்லவேண்டுமே தவிர, மக்கள் போராட்டத்தில் வெளிநாடுகளின் தொடர்பு இருக்க இல்லை என்பதெல்லாம் உளவுத்துறைதான் சொல்லவேண்டும், இல்லை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். உங்கள் வேலையை மட்டும் நீங்கள் பாருங்கள் இந்த திரிப்பு வேலைகளை எல்லாம் உங்களுக்கு வேண்டாம்.

அதுபோல் அங்கு அமைதியாக போராட்டம்
நடைபெற்றுக் கொண்டிருக்க, வீண் புரட்டு செய்தியாகவும், புளுகு மூட்டையகவும் இருக்கும் தமிழின துரோகி பார்ப்பன பத்திரிகை தின(மலம்)மலர் அங்கு பெரிய அளவில் சாலை மறியல்கள் நடக்கிறது என்றும், அதனால் மத்திய படையும், கடற்படையும் அங்கு தீவிர கண்காணிப்பில் இருக்கிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது,

இதுநாள் வரையில் தமிழர் மீனவர் பிரச்சனையில் எவ்வளவு போராட்டம் நடத்தி இருப்போம் எதாவது ஒன்றுக்காவது இந்த தினமலர் இப்படி செய்தி வெளியிட்டது உண்டா? மத்திய அரசு இந்த அளவிற்கு கவனத்தில் கொண்டதுண்டா?

தமிழ் நாட்டு மக்களின் உயிரைப் பணயம் வைத்து உங்களுக்கு மின்சாரம் வேண்டும், ஆனால் எங்களது கோரிக்கையை, வேண்டுகோளை நீங்கள் காதில் வாங்கிக்கொள்ள மாட்டீர்கள்? எங்களை யார் அசிங்கப் படுத்தி பேசினாலும் கண்டனம் தெரிவிக்க மாட்டீர்கள்? உங்கள் அரசியல் உள்நோக்கத்துக்காக எங்கள் இனத்தை பலியிடுவீர்கள்? எங்கள் மாநிலத்திற்கு நன்மை செய்வதென்றால் உங்களுக்கு கசப்பாய் தோன்றும் ?

இப்படி பலகேள்விகள் கேட்கலாம், எவ்வளவு கேள்வி கேட்டாலும் இந்த பார்ப்பானும், பார்ப்பன பத்திரிக்கையும் அதற்க்கு வக்காலத்து வாங்குபவர்களும் திருந்தப் போவதில்லை.

அதுசரி வீட்டில் மின்னசாரம் இல்லை என்று நமது மக்களின் உயிரை பணயம் வைப்பது தவறில்லை என்று தமிழனே சுயநலமாய் சிந்திக்கும்போது, இந்த தின(மலம்)மலர் தமிழ் போராட்டம் வெற்றி பெற்று விடக் கூடாது என்னும் பார்ப்பன புத்தியில்தானே செய்கிறது, அவர்களுக்கும் இந்த தின(மலம்)மலருக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.

தமிழ் மொழிபோல் சிறப்பாய் எங்கும் காணோம்

உலகில் இன்று பெரும் பிரச்சனை மதம், இந்த மதம் சில இடங்களில் நன்மை விளைவித்தாலும் பல இடங்களில் தீமையையே விதைக்கிறது. கால ஓட்டத்திற்கு தகுந்தார்ப்போல் மதத்தின் ஈடுபடும், பெரும்பான்மையும் மாறிக்கொண்டே இருக்கும் இப்படி பட்ட மதத்திற்கு இருக்கும் மதிப்பு இனத்திற்கு இல்லாமல் போவது ஏன்?

கலாச்சாரம், பண்பாடு, மதம், தெய்வம் என்று அனைத்திற்கும் அடிப்படை இந்த மொழியே, மொழியின் அடிப்படியில் இருக்கும் இன உணர்வின் வெளிப்பாடுதான் நாகரிக வாழ்க்கை, ஆனால் அப்படிப்பட்ட மொழிக்கு, இனத்திற்கு இன்று மரியாதை இருக்கிறதா? என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

காசு பார்க்க முடியவில்லை என்னும் ஒரே காரணத்திற்காக இன்று மொழிப்பற்றும், அதனை அடிப்படையாக கொண்ட இனப் பற்றும் குறைந்து கொண்டே வருகிறது.

பிற மொழிகளை கற்றுக்கொள்வது என்றுமே தவறில்லை, ஆனால் காசு கிடைக்கிறது என்பதற்காக அவற்றை பெருமையாக நினைப்பது என்பதைப்போல ஒரு கேவலமான செயல் உலகில் இல்லை.

பிற மொழிகளில் குழந்தை புலமை பெற வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்களே தாய் மொழியை தவிர்த்து பிற மொழியை திணிப்பது என்பது தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்காமல் தவிர்ப்பதற்கு சமமாகவே நினைக்கிறேன்.

மொழிகளைப் பொறுத்த வரையில் இல்லாத ஒரு சில வார்த்தைகளை பிற மொழிகளில் இருந்து எடுத்துக்கொள்வது என்பது இயல்பே, உதாரணமாக ஆங்கிலத்தில் லத்தீனும், பிரன்ச்சும், கலந்திருப்பதுபோல் தமிழும் கலந்திருக்கிறது

(கட்டுமரான், வெட்டிவேர்)

http://en.wikipedia.org/wiki/Catamaran

http://en.wikipedia.org/wiki/Chrysopogon_zizanioides


நன்றி விக்கிபீடியா


இல்லாத வார்த்தைகளாய் இருந்தால், பெயர்களாய் இருந்தால் தூய தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தவிட்டாலும், அம்மா என்பதற்கு பதிலாக மம்மி என்று பழக்கப் படுத்துவது இதைவிடக் கொடுமை உலகில் எதுவுமே இல்லை இதுவே தமிழ் மொழி துரோகமே.

தமிழின் சிறப்பே ஒவ்வொரு பொருளின் பெயருக்கும் காரண பொருளைக் கொண்டும், அதன் தன்மையை பொருத்தும் பெயரிட இயலும், ஆனால் இது அனைத்து மொழிகளில் இயலுமா என்பது கேள்விக் குறியே

இப்படி ஒரு தனிச்சிறப்பான மொழியை தவிர்த்து காசு உள்ள நாட்டின் மொழி, அல்லது இந்த மொழியால் அதிக காசு கிடைக்கிறது என்பதற்காக தமிழை இழிவாய் நினைத்து பிற மொழிகளை பெருமையாய் நினைத்து புழங்குவதென்பது எப்படி பட்ட வாழ்க்கை என்பதை நீங்களே தீர் மாநித்துக் கொள்ளுங்கள், இல்லை மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அது சொல்வதை நீங்களே கேட்டுப் பாருங்கள்.

வளர்க தமிழ்
வாழ்க தமிழினம்

Friday, October 28, 2011

பிரபா…

“ஏய்...பிரபா எங்க போய் தொலஞ்ச....முண்டம்?" என்று

கத்திக்கொண்டே வந்தாள் பங்கஜம்மாள். கோபம் தலைக்கேற வார்த்தையில் கொட்டினாள். "பத்திர பண்டம் கழுவல.... எங்க போய் தொலஞ்ச எரும..." என்று வசை பாடினாள்.

"அம்மா?.... ஏம்மா சும்மா கத்துற? நான் தான் பிரபாவ மெடிக்கல் வரைக்கும் போ சொன்னேன்" என்றாள் சுவேதா.

சுவேதா பங்கஜம்மாளின் ஒரே மகள் செல்ல மகள். கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கிறாள். சுவேதாவுக்கு பிரபா என்றாள் கொள்ளை பிரியம். பிரபா வெகுநாட்களாக அவர்கள் வீட்டில் வேலை செய்வதால் மட்டுமல்லாமல், சுவேதாவின் அப்பா வெளிநாட்டில் இருக்கிறார் வருசத்துக்கு ஒருமுறைதான் வருவர், ஒருமாதம் கூட தங்கமாட்டார், அம்மாவோ மூட்டுவலியால் பாதி நேரம் படுக்கைல்தான், உடன்பிறந்தவர்களும் கிடையாது.

அவள் அதிகநேரம் செலவிடுவது பிரபாவுடன்தான், அதனால் பிரபாவின் மேல் அவளுக்கு ஒரு தனி பிரியம்.

"வீட்டபாரு ஒரே தூசி.... ஒரு வேலைய ஒழுங்க செய்ரதில்லை மாசாமாசம் சம்பலம் மட்டும் முழுசா 900 ரூபா.... தெண்ட செலவு"
என்று பங்கஜம்மாள் கரித்துக் கொட்டும் பொழுதே வேர்க்க விருவிருக்க ஓடி வந்த பிரபாவை பார்த்து

"எவ்வளவு நேரம்? ஆடி அசஞ்சி வர......?" என்றாள்.

"இல்ல பெரியம்மா நம்ப தெரு மெடிக்கல் தொரக்கல, அதன் மெயின் ரோட்டு கடைக்கு போய் மருந்து வாங்கியாந்தேன்..... சின்னமாதான் எங்க இருந்தாலும் வாங்கியார சொன்னாங்க...." என்று பிரபா முடிப்பதற்குள்

"சரி..சரி... விட்டா கதையளப்ப போ போ போய் வேலைய பாரு...." என்றாள்.

பிரபா பதிலேதும் சொல்லாமல் சென்றபின் சுவேதா

"ஏம்மா? பிரபா பாவமில்ல இப்டி எரிஞ்சி எரிஞ்சி விழுற" என்றவளிடம்

"நீ சும்மா இருடி, யார்யார எப்டி வைக்கனும்னு எனக்கு தெரியும். வேலக்காரங்கள இப்டித்தான் வைக்கனும் இல்லனா நம்ப தலைல ஏறி உக்காந்துக்குவாங்க" என்று சொல்லிக்கொண்டே சென்ற பங்கஜம்மாளை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள் சுவேதா.

"என்னதான் இருந்தாலும் எல்லோருக்கும் மனசு என்று ஒன்று இருக்குமே?, வலி அனைவருக்கும் ஒன்று தானே? என்னை ஒத்த வயததுதான் பிரபாவும், பாவம்!!. கொடிது கொடிது வறுமை கொடிது அதனிலும் கொடிது இளமையில் வறுமை, என்பது எவ்வளவு உண்மை"

என்று தனக்குத்தானே வருந்திக் கொண்டாள்.

“என்னடி ரொம்ப பாவப் படுறியோ?" என்று பங்கஜம்மாள் கேட்க

தன் சிந்தனையிலிருந்து திடீர் என்று விடுபட்டவள்

"இல்லமா, நேத்துக்கூட சுடுதண்ணிய கால்ல ஊத்திக்கிகிட்டு காலெல்லாம் ஒரே காயம், பாவம்மா பிரபா." என்றால் ஒரு குழந்தை போல

"சூடான பத்தரத்த எறக்கி வக்கிம்போது துணிய வச்சிதான் ஏறக்கனும், இந்த அறிவுகூட இல்லமா வேல செஞ்சா இப்டிதான் ஆகும்"
என்று புத்தகத்தை பார்த்தபடி கூறியவள், ஒரு ராட்சசி போல் தெரிந்தால் சுவேதாவின் கண்களுக்கு.

இது எதைப் பற்றியும் கவலைபடாமல், காலால் இட்ட பணிகளை தலையால் முடித்துவிட்டு பிரபா கிளம்பும் போது மணி 6.15 ஆகிவிட்டது.

"பெரியம்மா…? நான்…. கெளம்பட்டுமா....?" என்று தயங்கிய பிரபாவின் முகத்தைக்கூட பார்க்காமல்

"இம்.., இம்.., நாளைக்கு காலைல அஞ்சு மணிக்கு வந்துடு" என்றவளிடம் சரி என்று தலையாட்டிவிட்டு வந்த பிரபா வாசலை தாண்டும் பொழுது

"பிரபா ஒருநிமிஷம் நில்லு" என்றாள் சுவேதா

"என்ன சின்னம்மா ஏதாவது வாங்கியாரனுமா?"

"அதெல்லாம் ஒன்னும் வேணாம், இந்தா இத பிடி" என்று ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை பிரபாவின் கையில் திணித்தாள்.

"இல்லமா வேண்டாம், பெரியம்மாவுக்கு தெரிஞ்ச திட்டுவாங்க"
என்று நெளிந்த பிரபாவின் கையை விடாமல் பணத்தை திணித்தபடி

"அதெல்லாம் ஒன்னும் தெரியாது, அப்படி கேட்டாலும் நான் சொல்லிக்கிறேன், நீ காலுக்கு நல்ல மருந்தா வாங்கிப்போடு... " என்றாள்.

சுவேதாவின் பிடிவாதத்தால் பணத்தை வாங்கிக்கொண்ட பிரபா
"சரி நான் கெளம்பறேன் சின்னம்மா" என்று பிரபா நகர முயல

"பிரபா நான் சொன்னத யோசிச்சுப் பாத்தியா?" என்றாள் தலையை குனிந்து கொண்டே.

"சின்னம்மா நான் அன்னைக்கு சொன்னதான் இப்பவும் சொல்றேன், தயவு செஞ்சி புரிஞ்சுக்குங்க. நீங்க பணக்காரங்க நான் ஒரு ஏழ அதுவும் வயசுக்குவந்த தங்கச்சிக்கு ஒரு நல்ல துணி எடுத்துக் குடுக்ககூட வக்கில்லாத ஏழ, உங்களுக்கும் எனக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாது. எம்மேல உங்களுக்கு இருக்குறது காதலில்ல கருண, கருணையும் காதலையும் போட்டுக் கொழப்பிக்காதீங்க, அதுவுமில்லாம என்னால உண்ட வீட்டுக்கு துரோகம் பண்ண முடியாது. என்ன மன்னிச்சிடுங்க." என்று கையெடுத்து கும்பிட்டபடி திரும்பி நடந்தான் ஏழை பிரபாகரன்.

கலங்கிய கண்களுடன் பிரபாகரனை பார்த்தப்படியே சிலையாய் நின்றாள் சுவேதா.

Thursday, October 27, 2011

தமிழ் வரலாற்றுப் படங்களுக்கு வரவேற்ப்பு கொடுப்போம் (மீள் பதிவு)

இன்றைய தமிழனின் வாழ்க்கையில் திரைப்படம் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது என்று சொன்னால் மிகையாகாது. அடிப்படையில் தமிழன் கலை ரசனையில் தமிழ் திரைப்படங்கள் அசுர வளர்ச்சி பெற்று விளங்கினாலும் அதனை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்கிறோமா? என்பது ஒரு பெரியக் கேள்விக் குறியாக நிற்கிறது.

அடிப்படைக் கல்வியில் இல்லாத பல விடயங்கள் பாமர மக்களையும் சென்று அடைவதற்கு ஊடகங்களே முதன்மை பங்கு வகிக்கின்றன. அத்தகைய ஊடங்களில் திரைப்படம் முதன்மையாக விளங்குகிறது. வெறும் பொழுது போக்கு அம்சமாகவும் வக்கிரங்களுக்கு தீனிபோடும் மசாலாகவும் மட்டும் இல்லாமல், நல்ல கருத்துக்களையும் வரலாற்று சிறப்புகளையும் எளிதில் மக்களிடம் எடுத்துசெல்லும் ஒரு சிறந்த ஆயுதமாக திரைப்படங்களை பயன்படுத்தலாம்.

மக்களிடம் கருத்துக்களை மிக விரைவில் கொண்டுசெல்ல மிகச் சிறந்த ஒரு ஊடகமாக திரைப்படம் இருக்கும் பொழுது, அதை ஏன் தமிழின வளர்ச்சிக்காக பயன்படுத்தக்கூடாது? என்னும் சிந்தனை எழுந்துகொண்டே இருக்கிறது.

மறைக்கப்பட்ட மற்றும் அழிக்கப்பட்ட தமிழனின் பெருமை இன்று தமிழர் பலர் அறியமாட்டார். எவன் ஒருவன் தன்னை குறைத்து மதிப்பிடுகிறானோ அவனால் என்றுமே சிறந்து விளங்க இயலாது என்பது உலகம் இதுவரை உணர்த்திய உண்மை. அதற்காக மிகைப்படுத்தி சொல்லப்பட வேண்டிய அவசியமில்லை, ஆனால் சொல்லப்படவேண்டிய உண்மைகளுக்கான சான்றுகள் பல நம்மிடம் இன்றும் உள்ளன.

ஒரு குறிப்பிட்ட கூட்டத்தால் அழிக்கப்பட்ட, அழிந்துகொண்டிருக்கிற தமிழனின் பெருமையையும், சிறப்பையும் வெளிக்கொணர்ந்து தமிழன் தன்னை யார் என்று உணர்துகொள்ள, இழந்த பெருமையையும், சிறப்பையும் மீட்டெடுக்க சரியான ஊடகம் இந்த திரைத்துறை என்பது சிறிதும் ஐயமில்லை.

வெறும் ஐநூறு, அறுநூறு ஆண்டுகள் வரலாற்றை கொண்ட நாடுகளே சிறந்த வரலாற்றுப் படங்களை கொடுக்கும் பொழுது, ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் வரலாற்றால் முடியாத என்ன?

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் வெளிவந்த தமிழ் வரலாற்றுப் படமாகிய "ஆயிரத்தில் ஒருவன்" எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும் அந்த முயற்ச்சியை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும் என்பது ஒவ்வொரு தமிழனின் தலையாயக் கடமை என்றே நினைக்கிறேன்.


தொழில்நுட்ப குறைகள் இருந்தாலும் முதல் படி சிறப்பாக அமைவது என்பது அனைவருக்கும் அனைத்து விடயத்திலும் இயலாத விடயம். என்னைப்பொறுத்தவரை "ஆயிரத்தில் ஒருவன்" என்னை திருப்திபட வைத்தது என்றே சொல்வேன்.

ஆயிரம் விடயங்கள் குறை சொன்னாலும் அது ஒரு தமிழனால் எடுக்கப்பட்ட தமிழனைப் பற்றிய வரலாற்றை தொட்டு செல்லும் கதை என்பதில் நான் பெருமை அடைகிறேன். என்னதான் சிறந்த கதையம்சங்களும், நடிப்புத் திறமையும் இருந்தாலும் நம்மிடம் தொழில்நுட்ப வசதி மேற்கத்திய நாடுகளை விட குறைவுதான். பிறகு நாம் அவர்களின் படங்களுக்கு இணையாக எடுத்த எடுப்பிலேயே எதிர் பார்ப்பது எந்த வகையில் ஞாயம்?.


இதுபோன்ற முதன்மை முயற்ச்சிகளை ஊக்குவிக்கும் போதே சிறப்பான வளர்ச்சியை நாம் அடைய முடியும் என்பதை அனைவரும் தெரிந்திருக்கும் பொழுது ஊக்குவிக்காமல் இருப்பது என்பது நம் வளர்ச்சிக்கு நாமே முட்டுக்கட்டை போடுவதுபோலாகுமே?.

இருமுறை எடுக்கமுயன்று கைவிடப் பட்ட "பொன்னியின் செல்வன்" கதை இன்றைய அளவிலும் கேள்வியாகவே உள்ளது. காரணம் அத்துனை செலவு செய்து படத்தினை மக்களிடம் வெற்றி பெற வைக்க முடியுமா? என்ற சந்தேகமே முக்கிய காரணம். இங்கு திரைத்துறை வர்த்தகரீதியாகவும் பார்க்கப்பட வேண்டியது என்பது ஒரு முக்கிய கண்ணோட்டமாகும்.

இப்பொழுதும் அதிக எதிர்பார்ப்போடு வரவிருக்கும் "7ம் அறிவு" "கரிகாலன்" போன்ற திரைப்படங்களின் வெற்றியைப் பொறுத்தே எதிர்கால தமிழ் வரலற்று படங்களின் வளர்ச்சி அமையும் என்பது துளியும் ஐய்யமில்லை. அத்தகைய படங்களை அதிகப் படியாக புகழ வேண்டாம் ஆனால் நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.
எந்த ஒரு விடயத்திலும் நாம் நம்மவரை விட்டுக்கொடுக்க வேண்டாம். அதற்காக இல்லாத ஒன்றினை தேவையில்லாமல் உயர்த்தி புகழவும் வேண்டாம் என்பதே எனது தனிப்பட்டக் கருத்து.

பதிவர்களாகிய நாமும் சரி, மக்களும் சரி நமது பெருமை பறைசாற்றும் இதுபோன்ற வரலாற்றுப் படங்கள் வந்தால் நிச்சயம் ஊக்குவிக்க வேண்டியது நமது தலையைக் கடமை என்று எண்ணி செயல்படுவோம்.

Wednesday, October 26, 2011

தமிழா....! உணர்வுகொள்....! ஒன்றுபடு.....!

வாழ்ந்து, வளர்ந்து, ஆண்ட ஒரு இனம் இன்னும் அடிமைப் பட்டுக்கிடப்பதேன்? சாதி, மதம், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் இன்னும் எப்படியெல்லாம் சிதைந்துபோக காத்திருக்கிறாய் தமிழா?

தன்மானம் என்பதை உயிர்மூச்சை கொண்டவன், வீரத்தில் சிறந்தவன், பண்பிலே திகழ்ந்தவன், கலைகளில் வித்தகன், அரசியலில் ஆழ்ந்தவன், உழைப்பில் உயந்தவன் என்று இன்னும் எத்தனை எத்தனை பெருமைகளை இழக்கப் போகிறாய் தமிழா?

சேர, சோழ, பாண்டிய, பல்லவனாய் இருந்தபோது ஒற்றுமை இல்லை ஆனால் உலகில் சிறந்து விளங்கினாய், இன்று சோழ, சேர, பாண்டிய, பல்லவ நாடு இல்லை, ஒற்றுமையும் இல்லை, சிறப்பும் இல்லை ஏன்? தனியாய் இருந்தபோது இருந்த தன்மை ஒன்றாய் ஆகியதும் சிறந்திருக்க வேண்டும் அல்லவா? அது இன்று இல்லையே ஏன்? ஒரு வேலை தமிழனுக்கு தமிழனே எதிரியாய் இருந்தால்தான் உன்னால் வீரம் காண முடியுமோ? இல்லை உன்னை யாரென்று நீ உணர முடியுமோ?

தன்மானம் இழந்து, நமது உரிமையை காக்க, நமது இனத்தை காக்க எவன் எவனையெல்லாம் நம்பிக் கிடக்கப் போகிறாய், கண்டவனிடம் கையேந்தும் நிலைமை ஏன்? சிந்திப்பாயா தமிழா?

பல்லவன் முதல், பிரபாகரன் வரை யாரும் நாடு பிடிக்கும் ஆசையில் போர் தொடங்க வில்லை, தமிழனுக்கு எங்கெல்லாம் அநீதி இழைக்கப்பட்டத்தோ அங்குதான் படைஎடுத்தான் பாடம் புகட்டினான். ஆங்கிலேயன் போல் தமிழன் கொள்ளையடிக்க ஆசைப் பட்டிருந்தால் இன்று உலகப் பொதுமொழி ஆங்கிலமாய் இருந்திருக்காது, தமிழாய்த்தான் இருந்திருக்கும்.

தன்னம்பிக்கை இல்லையா? தன்மானம் இல்லையா? இன்று ஈழத்தை அழித்தவன் நாளை தமிழகத்தை அழிக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்? குடிக்க தண்ணீர் தராதவன், நிம்மதியாய் வாழ வழி செய்யாதவன், சொந்த நாட்டு மக்களின் கோரிக்கையை உதாசீனப் படுத்துபவனிடம் இன்னும் எத்தனை எத்தனை நாள் அடிமையாய் இருக்கப் போகிறாய்? தமிழ்நாடு தனிமைபட்டுவிடுமோ என்றுதான் நினைத்து ஈழம் அழித்தானோ? இல்லை தமிழன் தன்மானத்தை தொலைத்துவிட்டான் என்று நம்பி அழித்தொழித்தனோ? முற்றிலுமாய் சிதைத்துவிட்டான் என்பதுமட்டும் உண்மை, நம் சொந்தங்கள் அழிந்துவிட்டன என்பது உண்மையிலும் உண்மை.

கதறினோம் கூப்பாடு போட்டோம், எழுதினோம், போராடினோம் இப்பொழுது தீபாவளி கொண்டாடுகிறோம், திரையரங்கில் பொழுதை கழிக்கிறோம். எந்த தைரியத்தில் நமக்கு இந்த அலச்சியம்? பெரிய தேசத்துடன் அண்டிப் பிழைக்கிறோம் என்றா? இல்லை நமக்கு எதுவும் நடக்காது என்றா?

இந்தியாவில் இரண்டு அணுஉலைகளை கொண்ட ஒரே மாநிலம்,

மூன்று முக்கிய நதிகளில் தண்ணீருக்காக மூன்று மாநிலத்திடம் பிச்சை எடுக்கும் மாநிலம்

சொந்த பகுதியில் குடிநீர்த் திட்டம் தொடங்க அடுத்த மாநிலத்தவன் செய்யும் பிரச்னைக்கு பயந்து திட்டத்தை கைவிட்ட மாநிலம்

சொந்த நாட்டு மீனவர்களின் சாவின் எண்ணிக்கையை உக்காந்து எண்ணிக் கொண்டிருக்கும் மாநிலம்

ஆகா எத்தனை எத்தனை பெருமை உலகின் தலைசிறந்த இந்த தமிழனுக்கு?

நாம் இறந்தாலும் தமிழ் நாட்டில் நம் இனம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் ஒரு ஈழத்தமிழனாவது, மகிழ்ச்சியாய் உயிரை விட்டிருப்பான், இங்கு அவ்வாறு நடந்தால் நாம் யாரை நினைத்து மகிழப் போகிறோம்? புலம் பெயர்ந்த தமிழர்களை நினைத்தா?


தமிழா இதற்குமேலும் நீ சிந்திக்காவிடில், லெமூரிய கண்டம் போல் ஆகிவிடும் தமிழ்நாடு, தமிழினம் என்று ஒன்று இருந்தது என்பது கல்வெட்டுகளில் மட்டும் இடம்பெறும்.

உணர்ந்துகொள், விழித்தெழு, மாயைகளை உடைத்தெறி, வீறுகொள், ஒற்றுமையாய் இரு, அடிமையாய் இராதே, தமிழனை விட்டுக் கொடுக்காதே, இலவசங்களில் மயங்காதே, சாதிமத பேதம் தவிர், சென்னை முதல் ஈழம் வரை ஒரே இனம், ஒரே மக்கள் என்னும் எண்ணம் கொள், புல்லுருவிகளை அடையலாம் காண், களைகளை பிடிங்கி எறி, நாம் யாரையும் அழிக்க வேண்டாம், ஆனால் நம்மை நாமே கத்துக் கொள்வோம், பிறரிடம் கையேந்த வேண்டாம். தன்மானம் தழைத்தோங்கட்டும்.

Saturday, October 22, 2011

அப்பாற்ப்பட்டவன்...

எண்ணமும் எழுத்தும்
சங்கமமாய் சமுத்திரம் படைக்கும்
இயற்கையும் காதலும்
அலைகளாய் ஆடிடத்துடிக்கும்

முத்துக்களாய் பிறந்துவிட்ட
வார்த்தை வடிப்புகள்
மாலைகளாய் மாறினாலும்
எங்கோ எதுவொன்றோ
குறையும்

தாயைக் கண்டுவிட்ட பசுக்கன்றாய்
சிலநேரம்
மழைமேகம் கண்டுவிட்ட மயிலாய்
சிலநேரம்
பலநாள் கழித்து
பழையதைக் கண்டுவிட்ட பிச்சைக்காரனாய்
சிலநேரம்
என்று சில்லிடும் மகிழ்ச்சியது
கோடையில் விழும் மழைத்துளியாய்
மறைந்து போகும் எங்கோ

பதம்பார்த்து விதைக்கக் காத்திருப்பவனுக்கு
மழை வேண்டும்
பதமாய் பெயர்த்தெடுத்த ஈரப்பானைக்கு
வெய்யில் வேண்டும்
அறுத்துவிட்டு கதிரடிக்க காத்திருப்பவனுக்கு
விரைவாய் வீசும் காற்று வேண்டும்

ஒவ்வொரு வடிமைப்பும் ஒவ்வொரு தேவை பொறுத்தே
என்றாலும் ஒவ்வொன்றும் வக்குக்கப்பட்டது ஒவ்வொரு காலம் பொறுத்தே

அவனுக்கு சூரவெளியும் வேண்டும்
அதனூடே சுரம் மீட்டும் தென்றலும் வேண்டும்
சுட்டெரிக்கும் வெய்யிலும் வேண்டும்
உறையவைக்கும் பனியும் வேண்டும்
சிலநேரம் இறைவனும் வேண்டும்
சிலநேரம் மிருகமும் வேண்டும்
காதலிலும் களிப்படைவான்
காமத்திலும் புலப்படுவான்
கள்ளும் நஞ்சும் கலந்தே வேண்டும் என்பான்

கல்லைக் காணும்போது கடவுள் இல்லை
கடவுளை காணும்போது கல்லில்லை

அவற்றிற்கு அப்பாற்ப்பட்டவன்.....

Thursday, October 20, 2011

பார்ப்பனியம் என்பது மட்டுமே எதிர்க்கப்படுகிறது

என்னைப் பொறுத்தவரை தனி ஒரு மனிதன் எதிர்ப்போ அல்லது குறிப்பிட்ட இனத்தவரில் அனைவரும் கெட்டவர்கள் என்றோ சொல்ல முயன்றதில்லை. பார்ப்பனியம் ஒரு சிலரால் மட்டுமே செயல்படுத்தப் படுகிறது. ஆனால் தனிமனிதனாய் அது பிடிக்காவிட்டாலும் அவர்களால் அதை தவறு என்று சொல்ல முடிவதில்லை. அப்படி எதிர்த்து குரல் கொடுத்தவர்கள், தமிழுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் பாரதி, தமிழ் தத்தா உ.வே. சுவாமிநாத ஐயர் போன்ற ஒரு சிலரே. இவர்கள் பிறப்பால் பிராமின் குளத்தை சேர்ந்தவர் என்றாலும் இவர்களை தமிழ்நாடும் தமிழர்களும் என்றுமே தனித்துப் பார்த்ததில்லை.

பாரதி என்பவர் ஒரு மகாகவி, பார்ப்பனியத்தை எதிர்த்த ஒரு மாமனிதன். பிறப்பால் ஒரு பார்ப்பனராய் இருந்தாலும் தமிழால், தமிழ்மீது கொண்ட பற்றால் தமிழனாய், கவிங்கனாய், சுதந்திர போராட்ட வீரனாய், மனிதனாய் வாழ்ந்தவர்.

பார்ப்பனிய அடக்கு முறைகளையும், மூட நம்பிக்கைகளையும் உடைத்தெறிந்தவர். நிறவெறி, சாதிவெறி என்ற அடிமைத் தனத்தை அகற்றிட முயன்றவர். தாழ்த்தப்பட்டோருக்கு பூணுல் அணிவித்தார், பெண்கள் சுதந்திரம் கிடைக்க வழிவகை செய்தார். இவரை என்றுமே தமிழனோ, தமிழ் மக்களோ ஒதுக்கியதில்லை, தலையில் வைத்து கொண்டாடுகிறோம்.

ஆனால் வானமே எல்லை என்று ஒரு படம். பாலச்சந்தர் அவர்களது சமூக சிந்தனையுள்ள, இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும் படம். அதில் ஒரு காட்சி சமூகத்தால் பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவன் பாரதி சிலையின் கீழ் அமர்ந்து அந்த சிலையை பார்த்து சொல்லும் ஒரு வசனத்தின் வரி

"ஐயரே என்ன ஐயரே? " என்று ஆரம்பிக்கும்

இப்பொழுது சொல்லுங்கள் சாதியே கூடாதென்று போராடிய பாரதி ஒரு பார்ப்பனர் என்று காட்டவேண்டிய அவசியம் என்ன? அவருக்கு தந்த மரியாதைதான் என்ன? இதைத்தான் பார்ப்பனியம் என்று சொல்கிறேன். இதைத்தான் நாங்கள் எதிர்க்க முயல்வது.


19ம் நூற்றாண்டின் தமிழ்ச் சேவையில் தமிழ் தாத்தா உ.வே.சுவாமிநாத ஐயரின் சேவைக்கு தமிழினம் என்றென்றும் கடமை பட்டது. இவரும் ஒரு பார்ப்பனியர் என்று தமிழினம் ஒதுக்கிவிடாது மதிப்பளித்துக் கொண்டுதான் இருக்கிறது. தமிழ் இருக்கும் வரை இவர்கள் பெயரும் நிலைத்திருக்கும். இவரை எம்மினம் பார்ப்பனராக பார்க்கவில்லை நினைக்கவில்லை தமிழர் என்று மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

எனக்கும் பிராமின் நண்பர்கள் பலர் உண்டு. அவர்களும் எனக்கு தெரிந்தவரை பழக்க வழக்கங்களில் வேறுபாடு காண்பதில்லை. சாப்பிட்டு, தூங்கி, பல நாட்கள் தங்கி இருந்து என் மனம் கோணாமல், நான் நினைத்துவந்தது தவறு என்று என் எண்ணத்தை உடைத்தெறிந்த பிராமின் குடும்பங்களையும் நான் பார்த்து பழகி இருக்கிறேன், பழகிக் கொண்டும் இருக்கிறேன்.

பழக்க வழக்கங்களில் எப்பொழுதும் பிரச்சனை என்று எனக்கு தோன்றியதில்லை ஆனால் வாழ்க்கையில் சில முக்கியமான சூழ்நிலைகளில், சந்தர்ப்பங்களிலும் எவ்வளவு பழகியவர் ஆனாலும் பார்ப்பனர் அல்லாதவர் என்னும் பச்சத்தில் கழட்டி விடப்படுவார்கள், நானும் கழட்டிவிடப் பட்டுள்ளேன், பல விடயங்களில் காட்டிக் கொடுக்கவும் பட்டிருக்கிறேன்.

திறமை இருந்தும் பழகிய, உயிர் நட்பு என்று சொல்லிய பார்ப்பனிய நண்பனே என்னை ஒதுக்கிவிட்டு திறமையில்லாத, முன்பு எப்போதும் பழகியிருந்திராத வேறு ஒரு பர்ப்பனியனை தூக்கிவிட்டான், இதுபோல் இன்னும் ஆயிரம் ஆயிரம் அனுபவங்கள். இதைத்தான் நாங்கள் பார்ப்பனியம் என்கிறோம், எதிர்க்கிறோம்.

தமிழனைப் பொறுத்தவரையில் தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் செய்பவர்கள் எந்த இனத்தவராய் இருந்தாலும் அனைவரும் தமிழரே, பிறப்பால் தமிழனாய் இருந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கு துரோகம் செய்பவன், தமிழனே இல்லை என்பதை முழுமையாக நம்புபவன் நான்.

Tuesday, October 18, 2011

நெஞ்சம் பொறுக்குதில்லையே

"ஒவ்வொரு மனிதனுக்கு ஒரு குணமுண்டு, அவனுக்கென்று தனியே ஒரு மனமுண்டு" இந்த கூற்று எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையோ, அவ்வளவிற்கு உண்மை இனத்திற்க்கான பண்பும் பரிவும்.

சாதி, மதம், நிறம் ஆகியவற்றிற்கு அப்பாற்ப்பட்டது இந்த இனம் என்னும் உணர்வு. இந்தியாவில் மட்டுமோ அல்லது தமிழ்நாட்டிலும், ஈழ்ப்பிரச்சனையில் மட்டுமோ இல்லை. உலகம் முழுதும் இனப் பற்று உண்டு என்பது மறுக்க இயலாத உண்மை.

வேறு எந்த நாட்டவரோ, எந்த மாநிலத்தவரோ அல்லது எந்த இனத்தவரோ தங்கள் இனத்தவரை காட்டிக் கொடுப்பதும் இல்லை, அவர்கள் செய்யும் தவறை மற்றவர்முன் ஒப்புக் கொள்வதும் இல்லை, தமிழனைத் தவிர.

இது ஒன்றுதான் எனக்கு புரியவில்லை, ஏன் நம்மவர் மட்டும் இப்படி? ஏன் நமக்கு மட்டும் இந்த எண்ணம்? எப்படி தோன்றுகிறது நம்மவர்க்கு என்று இதுநாள் வரையிலும் எனக்கு புரியவில்லை. இந்திய இதிகாசத்தையும், கூடுவிட்டு கூடுபாயும் கூற்றையும் கருவாய் கொண்டு படம் எடுத்த அமெரிக்கர் இந்திய இதிகாசங்களுக்கு நன்றி என்று படத்தில் போடவில்லை அதற்காக எந்த அமெரிக்கனும் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆனால் நம்மவர் ஒருவர் ஆங்கிலப் படத்தை காப்பியடித்துவிட்டார் என்று நம்மவரே கண்டித்ததோடு மட்டுமல்லாமல் குறிப்பிட்ட பட நிறுவனத்திற்கு மின் அஞ்சல் அனுப்பி புகாரும் செய்துள்ளார்.

ஆங்கிலயேன் வந்து கொள்ளையடித்ததும் அவனது இனத்தை வளப்படுத்தவே, இன்று அமெரிக்க ஏகாதிபத்தியமும் அவனது இனத்திற்காகவே மேலை நாட்டு மோகத்தை ஏற்றுக் கொள்ளும் நாம், அவர்கள் பழக்க வழக்கங்களை பெரிதென்று மதித்து அவற்றை பழகிக்கொண்டு நமது பழக்கவழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும் வீணடிக்கும் நாம் இப்படி பட்ட இன உணர்வை மட்டும் அவர்களிடம் இருந்து உணர்வதில்லையே ஏன்?

உண்மையில் நாம் உணரவில்லையா? இல்லை என்னை இதுபோல் எழுதத் தூண்டியவர்கள் நம் இனத்தவர் இல்லையா?

போபால் விச வாயு பிரச்சனையில் பல உயிர்கள் போக காரணமாய் இருந்த "ஆண்டர்ச்சனை" அமெரிக்கா பத்திரமாக காப்பாற்றிக் கொண்டது இதுவரையில் அந்த வழக்கிற்கு ஒரு தீர்வுகாண இயலவில்லை, ஆனால் நம்மவர் மூவரை சரியான தீர்வு இல்லாமல் வழக்கை நடத்தி தூக்கு தண்டனை விதித்ததை எதிர்த்து நம் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி காப்பாற்ற முயன்றால் அதை நம் இனத்தவரே தவறு என்று பேசுகிறார்கள், இவர்கள் எல்லாம் சிந்திக்கவே மாட்டார்களா?

நான் இந்தியன் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள் காவரியில் அணையை திறந்து தண்ணீர் கொண்டுவர முடியுமா? சரி அதாவது கர்நாடகாவில் இருக்கிறது அது மாநிலப் பிரச்சனை, ஒகேனைக்கள் குடிநீர் திட்டத்தையாவது நிறைவேற்ற முடியுமா, அது தமிழ்நாட்டில்தானே இருக்கிறது இல்லை அதுவும் வேறு மாநிலமா?

இதைவிட கொடுமை அமெரிக்க பெண்மணி ஒருவர் தமிழர் அழுக்கானவர்கள், சுத்தமிள்ளதவர்கள், அசிங்கமானவர்கள் என்று புகழ்மாலை சூட்டினாரே அதற்க்கு என்ன எதிர்ப்பு தெரிவித்தார்கள்?

முத்துக்குமரன், செங்கொடி போன்றவர்கள் உயிர்த்தியாகத்தை கேவலப் படுத்தும்படி பேசும் இவர்கள் உன்மைத் தமிழர்கள்தானா? ஆயிரம் ஆயிரம் மக்கள் உயிர் பயத்தில், தங்கள் குழந்தைகள், உடைமைகள், தொழில்கள் பதிக்கப் படுமே என்று பயந்து அமைதியான முறையில் அறவழிப்போரட்டம் நடத்தி தங்கள் வாழ்வாதாரத்தை காப்பற்றிக்கொள்ள முயல்வதை சுயநலம், அரசியல், அறியாமை என்று பேசி பதிவிட்டு தங்களது அறிவுத் திறமையையும், இந்தியன் என்ற உணர்வையும் வெளிப்படுத்துவதாய் எண்ணி செயல்படும் இவர்கள் எப்படி பட்டவர்கள் என்று நாம் சொல்வது.

இந்த ஒரு அணுமின் நிலையம் இல்லாவிட்டால் இந்தியாவே இருளில் மூழ்கிப் போய்விடும் என்பதுபோலவும், இதற்க்கான செலவு இந்திய பொருளாதாரத்தையே புரட்டி கீழே தள்ளிவிடும் என்ன்பதுபோலவும் நினைக்கும், சித்தரிக்க முயலும் வல்லுனர்களே, உங்களால் இதுவரை நடந்த ஊழல்களில் ஒன்றுக்காவது விடைகாண முடிந்ததா, முடிவுகட்ட முடிந்ததா இல்லை அந்தப் பணத்தை திரும்பப் பெற முடிந்ததா?

உண்மைதான் நம் வீடு, நம் பிள்ளைகள் என்று மட்டும் வாழ்க்கையில் இருப்பதுதான் புத்திசாலித்தனம் என்றும், ஒற்றுமை, இனம், நம்மவரை விட்டுக்கொடுக்காமை, போராட்டம், தன்மானம் என்று இருப்பவரெல்லாம் முட்டாள்கள் என்று நினைத்து நாம் குடியிருக்கும் நமது தெருவைப் பற்றிகூட கவலைப் படாமல் குப்பை கொட்டும், எச்சில் துப்பும் எண்ணம் உள்ளவர்களிடம் இன உணர்வை எதிர்ப் பார்ப்பது முட்டாள் தனம் தான்.

ஒவ்வொரு பொதுப் பிரச்சனைப் பற்றி பொது இடங்களில் பேசும் பொழுதும் உங்கள் எண்ணங்களை கூறும் உங்கள் வாழ்க்கையும் பொருளாதரத்தையும் சொந்த விடயங்களையும் வைத்து பேசக் கூடாது, அவர்கள் நிலைமையில் நின்று யோசித்துவிட்டு பிறகு பேச வேண்டும். நீதி, நியாயம் என்று சொல்வோருக்கு ஒரே பதில்தான், தமிழனுக்கு அடுத்தவனை பொறுத்தவரை மட்டும் அவற்றை எடுத்துக்கொள்வோம், தமிழனுக்கு தமிழனே பங்கம் விளைவிக்க எதற்கு இந்த நீதி நியாயம், அனைவரும் இதைத்தான் செய்கிறார்கள். தமிழன் இதனால்தான் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான்.

புத்திசாலித்தனம் என்று நினைத்துக்கொண்டு நீங்கள் இருந்து நீங்கள் நினைப்பதுதான் சரி என்று பிறரிடம் திணிக்க முயல்வது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொல்வதுபோலகும். பிறகு அவர் அவர் வெளியில் கட்டிக்கொள்ளாமல் இனப்பற்றோடு செயல்பட நீங்களும் உங்கள் சந்ததியும் பாதிக்க கூடும்.

ஆங்கிலம் படித்துவிட்டு இங்கிலாந்தில் போய் நீங்கள் இருந்தாலும் உங்களை அவன் ஆகிலேயன் என்று ஒத்துக்கொள்ள மாட்டான். அதுதான் இனப் பற்று நினைவில் கொள்ளுங்கள்.

உங்களுக்கு உணர்வில்லை என்றாலும் பரவாயில்லை, ஒதுங்கி இருந்து பாருங்கள் உணர்வுள்ள நாங்கள் உங்களுக்காகவும் போராடுவோம். ஆனால் புத்திசாலிகள் என்று நினைத்துகொண்டு உணர்வோடு போராடுபவரை காயப்படுத்தாதீர்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. தமிழன் என்று ஒரு இனமுண்டு, தனியே அவனுக்கு ஒரு குணமுண்டு.

தனித்திருப்போம் விழித்திருப்போம்.

Sunday, October 16, 2011

பத்திரிகைகளுக்கு ஒரு வேண்டுகோள் (மீள் பதிவு)ஒருநாட்டின் வளமான வாழ்விற்கு தேவை இரண்டு. ஒன்று வாள்முனை, இன்னொன்று பேனாமுனை. இதில் இரண்டுமே கூர்மையுடன் இருக்கவேண்டும். எது ஒன்று கூர் மழுங்கினாலும் அந்த நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பது மறுக்க இயலாத உண்மை.

இவை இரண்டும் எப்பொழுதும் நேரான பார்வைகொண்டும், இலக்கை நோக்கி மாறாத பாதைகொண்டும் இருக்க வேண்டும். எதுவொன்று தன இயல்பை இழந்தாலும் அந்நாட்டு மக்களுக்கு வாழ்வாதாரம் காணமல் போகும்.

இவற்றில் வாள்முனையை விட பேனாமுனைக்கு வலிமை அதிகம் என்பது மறுக்கப்படாத ஒன்று. அதை நிருபித்த சரித்திர சான்றுகள் பல. இப்படி ஒரு வலிமைவாய்ந்த ஆயுதம், இன்று நம்நாட்டில் உண்மையில் கூர்மையுடந்தான் இருக்கிறதா? இல்லை குறைந்தபட்சம் உயிருடனாவது இருக்கிறதா? என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது.

உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் அற்ப்புத பணியை இன்றைய நம் நாட்டு பத்திரிகைகள் செய்கிறதா? என்று கேட்டால் இல்லை என்றே கூறமுடியும்.

இன்றும் பத்திரிகைகளில் உண்மை செய்திகள்தான் வெளிவருகின்றன ஆனால் அவையனைத்தும் வக்கிரத்தின் உண்மைகள், ஆபாசத்தின் உண்மைகள், கேவலத்தின் உண்மைகள்.

இதுவா சிறப்பான பணி? இதுவா உண்மையான ஒரு பத்திரிக்கையின் அழகு? இல்லை இல்லவே இல்லை. சாதிகளுக்கு, மதங்களுக்கு என்று பிரிவினைவாதம் செய்யும் பத்திரிகைகள், ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் என்று அவர்கள் புகழ்பாட அடுத்தவரை இகழ என்று ஒரு பத்திரிகைகள், காசுபார்ப்பதர்க்கு மட்டுமே என்ற நோக்கில் செய்லபடும் பத்திரிகைகள் என்ற இவைஅனைத்தும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு புற்றுநோய் போன்று நாட்டை, நாட்டின் மக்களை, நாட்டின் வளர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து பாழாக்கிக் கொண்டிருப்பவை.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு, கள்ளக் காதல் போன்ற வக்கிர செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? விளையாட்டு, ஆன்மீகம், கலை, வர்த்தகம், அறிவியல் சாதனைகள் போன்ற செய்திகளை பின்னுக்கு தள்ளுவதேன். அப்படி அவற்றில் எதாவது ஒன்று நிகழ்ந்தாலும் தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு, காழ்ப்புணர்ச்சி என்பவற்றை பொறுத்தே அமைகிறது ஏன்?

கடமை என்று சொல்லி அடுத்தவரது அந்தரங்களை பதிக்கும் நீங்கள் உங்கள் அந்தரங்கள் பிறரால் அறியப்படுவதை விரும்புவீர்களா? இல்லை உங்களுக்கு அந்தரங்கம் என்பதே கிடையாதா? இல்லை நீங்கள் அவ்வளவு தூயவர்களா? நீங்கள் பதிக்கும் விசயங்கள் உங்கள் வீட்டு பிள்ளைகளையும் பாதிக்கும் என்பதை உணராத அளவிற்கு முட்டாள்களா நீங்கள்? இப்படி பட்ட முட்டாள்களின் கையிலா பேனா சிக்கியிருக்கிறது. என்னே நம் நாட்டிற்க்கு வந்த சாபக்கேடு?

பிறர்க்கு செய்தி அறிவிப்பதென்றால், கற்பழித்தவனுக்கு தண்டனை கிடைத்தது என்று இருந்தாலே போதுமே? கற்பழிப்பை விளக்க வேண்டிய அவசியமென்ன? உங்கள் இரண்டு ருபாய் செய்தித்தாள் விற்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வீர்களா? தவறு செய்தவர்களை மக்கள்முன் நிறுத்துவது உங்கள் கடமை என்றால் நீங்கள் தவறுசெய்யாமல் இருக்க வேண்டுமே! நீங்களும் தவறுசெய்தால் உங்களை யார் தடுப்பது?

உங்கள் வருமானத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாதீர்கள், நாட்டின் வளர்ச்சியை மட்டும் மனதில் வைத்து தவறான செய்திகளையோ, ஒருதலை பட்சமான செய்திகளையோ பிரசுரிக்காதீர்கள். நன்மைகளை விளைவிக்கும் செய்திகளை, நாட்டை வளமாக்கும் செய்திகளை தலைப்பு பகுதியில் இடம்பெறச் செய்யுங்கள். விளையாட்டு, வர்த்தகம், தொழில்துறை, அறிவியல் போன்றவற்றை தொடர்ந்து வரச்செய்யுங்கள் வையுங்கள்.

விபத்து, வக்கிரம், கவர்ச்சி விளம்பரம், கொலை கொள்ளை ஆகியவற்றை தனிப்பகுதியாக்கி, தனித்திரியாக்கி தலைப்பிட்டு சினிமாவுடன் இருதிபக்கங்களாக மாற்றிவிடுங்கள்.

நாட்டை செழுமையாக்குவதும், மன்னாக்குவதும், எதுவாக செய்வதாய் இருந்தாலும் சரி உங்களுக்கு பெரும் பங்கு உண்டு என்பதையும், உங்களால் சமூகத்தில் ஏற்ப்படும் நல்லதோ, கெட்டதோ எதுவாகினும் அது உங்கள் குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்கும் என்பதையும், நீங்களும் உங்கள் குடும்பமும் இந்த சமூகத்தில் ஒரு அங்கம் என்பதையும் தயவுசெய்து மறக்க வேண்டாம்.

மக்களுக்கு ஒரு வேண்டுகோள் - இதுபோன்ற மட்டமான, கீழ்த்தரமான, வக்கிரமான செய்திகளுக்கு ஆர்வம் காட்ட வேண்டாம். எரிகிற கொள்ளியை எடுத்துவிட்டால் கொதிப்பது அடங்கிவிடும்.

அரசுக்கு ஒரு வேண்டுகோள் - பத்திரிக்கைகளுக்கு வழிமுறைப் படுத்தப்பட்ட இன்னும் கடுமையான சட்டங்கள் இயற்றப் பட வேண்டும். எதிர்மறையான பதிப்புகளை ஏற்ப்படுத்தும் செய்திகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படக்கூடாது. வன்மையும், கொடூரங்களும், தனிப் பகுதிகளாக்கப் பட்டு இறுதியாக இணைக்க வேண்டும்.


இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு


Friday, October 14, 2011

நீங்கள் கூடங்குளத்தில் வாழத்தயார் என்றால்????எவ்வளவு சொன்னாலும் திருந்தாத தினமலர்.....

செய்வதை எல்லாம் செய்ய வேண்டியது., பிறகு எதாவது சொல்லிவிட்டால் மட்டும் குதிக்க வேண்டியது. இந்த பார்ப்பன ஆதிக்க நாளிதழை ஒழிக்காதவரை தமிழ் மக்களுக்கு விடிவுகாலம் என்பதே கிடையாது. இத்துணை மக்கள் உண்ணாவிரதம் இருந்து நடத்தும் போராட்டத்தை மதிக்காமல் அசிங்கப் படுத்தும் விதமாக செய்தி வெளியிட்டு தமிழ் மக்களின் விரோதத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறது இந்த நாளிதழ். உண்மையை சொன்னால் பத்திக்கொண்டு எரிகிறது இவர்களுக்கு, ஆனால் செய்வதெல்லாம் திருட்டுத்தனம்.

கூடங்குளம் மக்களின் எதிர்ப்பு நிகழ்வு, வெறும் இரண்டாயிரம் மெகவாட் மின்சாரத்தில் தமிழகத்தின் ஒட்டுமொத்த பிரச்சனையும், மின்வெட்டும் தீர்ந்துவிடும் என்பதுபோலவும், பத்து வருடமாக கட்டி முடிக்கும் வரை இருந்து விட்டு இப்பொழுது போராடுவது சுயநலம் என்பது போலவும் செய்தி வெளியுட்டுள்ளதை யார் யார் வக்காலத்து வாங்க போகிறார்கள் இப்பொழுது?அட முட்டாள்களா, ஜப்பானில் சுனாமியினால் ஏர்ப்பட்ட அணுஉலை பாதிப்பு சம்பவம் இப்பொழுது தானே நடந்தது, பத்துவருடம் முன்பா நடந்தது? இல்லை கல்பாக்கம் கட்டி முடிக்கப்பட்டு இயங்கத் தொடங்கும் போது இதுபோல் போராட்டம் நடத்தினோமா? சொல்லுங்கள் அறிவாளிகளே.


செருப்பால் அடித்தாலும் திருந்தாத தினமலர் - என்று நான் அன்று பதிப்பிட்ட பதிப்பு தவறு என்பது போல தமிழ்மனத்திலிருந்து நீக்கப் பட்டது. இப்பொழுது அதே போல் ஒரு பதிவு தான் இது இதை இப்பொழுது மறுக்கப் போகுறீர்களா? தமிழக முதல்வரே மக்கள் போராட்டக் குழவில் ஒருவராக இருந்து போராடுவேன் என்று அறிக்கை தரும் பொழுது, இந்த பார்ப்பன பத்திரிகை அதைத் தவறு என்றும், ஜெயலலிதாவை நேரடியாக தாக்காமலும், கூடங்குள போராட்ட மக்கள் மீது நடவடிக்கை அரசங்கத்தால் எடுக்க முடியவில்லை என்று போராட்ட குழு தமிழ் நாட்டிற்கே துரோகம் செய்வதுபோலவும் திரித்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எண்ணத்திற்கு எதிராகவும், தமிழ் உரிமை போராட்ட மக்களின் உணர்வுகளை கேவலப் படுத்தியும் செய்து வெளியிடும் இந்த பார்ப்பன பத்திரிக்கையை என்ன செய்யப் போகிறீர்கள்?

பார்ப்பனனை எதிர்த்தால் அவன் கருப்பு சட்டை அணிந்த நாத்திக திராவிட கழக தொண்டனாகத்தான் இருக்க வேண்டுமா? கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பார்ப்பனர்களை எதிர்க்க மாட்டார்களா? இல்லை பார்ப்பனர்கள்தான் கடவுளா?

அன்று என்பதிவை தமிழ் மனத்திலிருந்து தூக்கிவிட்டார்கள், இன்று அந்த பத்திரிகை மீண்டும் மீண்டும் தமிழ் மக்களின் உணர்வுகளை கேவலப் படுத்திக்கொண்டே இருக்கிறது. இதற்க்கு என்ன செய்யப் போகுரீர்கள் தமிழ் உணர்வாளர்களே?

இறுதியாக ஒன்று சொல்கிறேன் களைஎடுக்காதவரை பயிர் வீடு வந்து சேராது.

கூடங்குளம் வேண்டும் என்று சொல்லும் வாய்ச் சொல் வீரர்கள், நாட்டுப் பற்றாளர்கள் அனைவரையும் நான் கேட்பது - நீங்கள் கூடங்குளத்தில் வாழத்தயார் என்றால் நாங்களும் அனுமதிக்கத் தயார்.இப்பொழுது சொல்லுங்கள் மேதாவிகளே யார் யார் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட வேண்டும் என்று ஆசைப் படுகுரீர்கள்?

Wednesday, October 12, 2011

இந்தியா வல்லரசாகிவிட்டதுஉலக வரலாற்றில் இதுவரை மனிதனுக்கு சொல்லப்பட்டதெல்லாம் மிகப் பெரிய வல்லரசோ, பேரரசோ உண்டென்றால் அதன் பின்னால் மிகப் பெரிய துரோகச் செயல்களும், வஞ்சகங்களும் நிச்சயாமாக வெளி உலகிற்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ அரங்கேற்றப் பட்டிருக்க வேண்டும்.

இது போன்ற துரோகங்களும், வஞ்சகங்களும், ஈவு இரக்கமற்ற மக்கள் அழிப்புகளும் இல்லாமல் ஒரு வல்லரசு உருவாக முடியாது என்பதே இதுநாள் வரையில் வரலாறு சொல்லும் உண்மை.

அலெக்சாண்டர், முகமதுமூர், செங்கிஸ்கான், கிரேக்கப் பேரரசு, மங்கோலியர் ஆட்சி, டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேய ஆட்சி, முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், வியட்நாம் போர், கொரியா போர் என்று அனைத்து காலகட்ட வல்லரசுகளும் மிகப் பெரிய அழிவுகளையும், நாசங்களையும் விளைவித்தே உருவாகின.

இதில் முதல் உலகப்போரில் இருந்து இரண்டாம் உலகப்போர் வரை அதிகம் செலுத்திய ஜெர்மனியின் நாசிக் கட்ச்சியின் வல்லரசு ஆட்சிக்கு காரணம் தன் சொந்த நட்டு மக்களின் இன அழிவுக்கு பின்னரே.ரஷ்யா என்னும் வல்லரசு உருவானது ஜெர்மனியின் அழிவில்தான். அமெரிக்க என்னும் வல்லரசு உருவானது ஜப்பானின் ஐந்துலட்ச மக்களில் கொடூர சாவில்தான். அதுவும் போர்ல் ஹார்பர் என்னும் துறைமுகத்தை தாக்கியதற்கும், உலக யுத்தம் முடிந்த பின்னர் அணுகுண்டை பரிசோதித்து பார்க்கவும் ஐந்துலச்ச மக்களை கொன்று அமெரிக்கா வல்லரசானது.சீனாவும், அமெரிக்காவும் தங்களின் வல்லரசு ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும், தங்கள் ஆளுமைப் போட்டிக்காகவும் ஏற்படுத்தப் பட்டதே கொரியா போர். சீனா வட கொரியாவிற்கும், அமெரிக்கா தென்கொரியாவிற்கும் சாதகமாய் இருப்பதுபோல் இருநாடுகளும் தங்களில் யார் பெரியவன் என்று நிருபிக்க அந்த இரு நாடுகள் அழிவில் மூழ்கிப்போயின.

இதே போல் இன்று இந்தியாவும் தெற்காசியாவில் தான் ஒரு மிகப் பெரிய வலிமை வாய்ந்த நாடு என்பதை நிருபிக்க பல அழிவு செயல்களை சத்தமில்லாமல் அரங்கேற்றியது.


பாக்கிஸ்தானிடம், சீனாவிடம் எல்லைப் பிரச்சனை என்று இருக்கும் அதே வேலையில். பங்களாதேஷை பாக்கிஸ்தானிடம் இருந்து பிரித்துக் கொடுத்தது. இலங்கைக்கும், சீனாவிற்கு இடையில் உள்ள உறவு பெரும் பிரச்சனையாய் இருக்க, இலங்கையில் இருந்த ஈழத்தமிழர் பிரச்சனையில் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி கொடுத்து, ஆயுதங்கள் வழங்கி உதவிசெய்தது.

பின்னாளில் அதே இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தமிட்டுக்கொண்டு அமைதிப் படையனுப்பி புலிகளையும் தமிழ் மக்களையும் அழிக்க முயன்றது. தமிழ்நாட்டு மக்களின் போராட்டத்தை தொடர்ந்து அமைதிப்படையை திரும்பப் பெற்றுக்கொண்ட இந்தியா, ராஜீவ் காந்தியின் கொலைக்கு பின்னர் புலிகள் இயக்கத்தை தடை செய்ததோடு முற்றிலும் தமிழ் ஈழ மக்களுக்கும் தமிழ் நட்டு மக்களுக்கும் எதிராக செயல்படத் தொடங்கியது.

அன்றுமுதல் விடுதைப் புலிகளுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் எண்ணங்களுக்கும், வேண்டுகோளுக்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உதவி செய்து, புலிகளையும், ஈழமக்களையும், அழித்தொழித்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வெறுப்பில் நீந்துவதோடு இல்லாமல் சொந்த நட்டு மீனவர்களை கொலை செய்யும் இலங்கை அரசை கண்டிக்காமல் அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் செயல் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலாகும்.

இப்படி தன நாட்டு மக்களில் ஓர் இனத்தை உதாசீனப் படுத்தி, அதே இன மக்களை அழித்தொழிக்க உதவி செய்த ஈவு இரக்கமற்ற இந்த இந்தியா நிச்சயம் ஒரு வல்லரசு நாடுதான் என்பதில் துளியும் ஐய்யமில்லை.

ஆனால் ஒன்று மட்டும் நினைவில் கொள்ளவேண்டியது இந்தியாவிற்கு மிக அவசியமாகிறது. இப்பொழுது வல்லரசாய் திகழும் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் ஒரே மக்கள் ஒரே மொழி ஆனால் இந்தியா அப்படி இல்லை உண்ணும் உணவில் இருந்து பேசும் மொழி வரை அனைத்தும் வேறுபட்டு இருக்கிறது என்பதை மறக்காமல் நினைவில கொள்ள வேண்டும்.

அதேபோல் ஒரே மொழி ஒரே மக்களாக இருந்து வல்லரசாய் திகழ்ந்த ரஷியாவே இன்று சிதறிக் கிடக்கிறது என்பதை இந்தியா உதாரணம் கொள்ளவேண்டும். இல்லையென்றால் இந்தியா வல்லரசு என்பது...........................?

Tuesday, October 11, 2011

ஐயயோ இன்னொரு ர(த்)த யாத்திரையா?

இந்த அரசியல் வாதிகள் ஒவ்வொரு முறை அரசியல் நாடகம் செய்யும் போதெல்லாம் அடிவயிற்றில் பகீர் பகீர் என்று இருக்கிறது. அதிலும் இந்த பி.ஜே.பி நடத்தும் நாடகத்தின் போதெல்லாம் பயம் இன்னும் கொஞ்சம் எகிரவே செய்கிறது.

வாழ்க்கையில் சாவதற்குள் பல பேரைக் கொன்றுவிட வேண்டும்... இல்லை இல்லை பிரதமராகி விடவேண்டும் என்னும் ஆசையில் மீண்டும் ஒரு ரத யாத்திரையை கிளப்ப இருக்கிறார் இந்த அத்வானி. ஏர்க்கனவே போன ரத யாத்திரையில் தெறித்த ரத்தம் இந்தமுறையும் தெறிக்காமல் இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்.ஊழலுக்கு எதிராக ரத யாத்திரையாம். இவரது இத்துனை கால அனுபவத்திலும், அரசியல் வாழ்க்கையிலும் இதுவரை தோன்றாத இந்த ஊழல் எதிர்ப்பு போராட்ட எண்ணம் இப்பொழுது தோன்றி இருப்பதுதான் அதிசயம்.


அண்ணா கோசரே ஏற்றிய நெருப்பில் இந்த நரி குளிர்காய நினைக்கிறது. எப்படி இருந்தாலும் தமிழ் நாட்டிலும் சரி இந்தியாவின் மத்திய அரசிலும் சரி இவன் இல்லை என்றால் அவன், அவன் இல்லை என்றால் இவன் தான் என்று தலையெழுத்து, இதில் கொடுமை இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதுதான்.

நாளை இந்த பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தாலும் ஒழல் ஒழிப்பு மசோதாவை நிறைவேற்ற போவதில்லை, கருப்பு பணத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்போவதுமில்லை, ஆனால் இந்த காங்கிரஸ் போராட்டத்தில் இறங்கும் என்பது உறுதி. இன்னும் எத்தனைநாளைக்குத்தான் இந்த முட்டாள் தனத்தை நாம் செய்யப் போகிறோம் என்பதுதான் கேள்வி.

இதுவரை அண்ணா கோசரேவை, இவர்கள் விட்டு விட்டு வைத்திருப்பதே உலக அதிசயம். இதை சொல்வதால் யாரும் கோவப்பட வேண்டாம்! தன்னை எதிர்த்துப் போராடிய காந்தியை ஆங்கிலேயன் பத்திரமாய் வைத்திருந்தான், நமக்காக போராடிய அவரைக் கொன்றவர் நாம்தானே?

எது எப்படி இருந்தாலும், மத்தியில் யார் ஆட்சி செய்தாலும் இவர்களால் தமிழனுக்கு விடிவு காலம் வரப்போவதில்லை, மீனவர் கொல்லப்படுவது தடுக்கப் படப் போவதுமில்லை. ஆனால் அவர் ரத யாத்திரை போவதை பெருமையாய் பீத்திக்கொள்ளும் பார்ப்ப ஏடு மத்தியில் பாரதிய ஜனதாவும், தமிழ்நாட்டில் அ.திமு.க வும் ஆட்சி செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இருக்கிறது.

காங்கிரஸ் இல்லை என்றால் பாரதிய ஜனதா, தி.மு.க இல்லை என்றால் அ.தி.மு.க இப்படி இருக்கின்ற சூழ் நிலையில் கருணாநிதி, ஜெயலலிதா, அத்வானி, மோடி போன்ற அரசியல் வேடதாரிகளையும் அவர்கள் போடும் வேடங்களையும் மக்கள் புரிந்துகொண்டாலும் மக்களுக்கு வேறு வழி இல்லை என்பது மட்டுமே உண்மை.


அத்வானி ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை:

யாத்திரை போவது இருக்கட்டும், சுவிஸ் வங்கியில இருக்குற உங்க கணக்க என்ன பண்ண போறீங்க?

------------------------------------------------------------------------------------
ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம்: அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் அராஜகம் இல்லை.

அப்டின்னா கோவை கல்லூரி மாணவிகள் பேருந்துடுடன் எரிப்பு சம்பவம், காரைக்குடி துப்பாக்கி சூடும் எந்த ஆட்சியில் நடந்ததுன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?


------------------------------------------------------------------------------------
கருணாநிதி - தி.மு.க இரும்புக் கோட்டை:

அப்படித்தான் இருந்துச்சு, நீங்க இருந்த உண்ணாவிரதம் தான் அத சுக்குநூறா ஒடச்சு இப்போ துரும்புக் கோட்டையா ஆகிடுச்சு.

------------------------------------------------------------------------------------
தயாநிதி, கலாநிதி மாறன் வீட்டில் சிபிஐ சோதனை:

ஆப்பசைத்தக் குரங்கின் வால் மாட்டிய கதை எப்போவோ படிச்சது. இப்போ தெளிவா நடக்குது. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

Sunday, October 9, 2011

கண்டனம் ஒன்றாவது கூறுங்கலேன்..... (மீள்பதிவு)

இது ஓர் ஆண்டுக்கு முன்பு நான் எழுதியது, இன்னும் எத்துனை நாள் மீள் பதிவுக்கு உயிர்ப்புடன் இருக்குமோ என்று தெரியவில்லை, இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளியும் புலப்படவில்லை. இந்தியன் என்பதில் பெருமைகொள்ளும் தமிழர் ஒருவராவது உணர்ந்துகொண்டால் போதும்.


வங்கக்கடல்தான் வருந்துதம்மா!

அரபிக்கடலும் அழுகுதம்மா!

குமரியும்தான் குமுறுதம்மா!

பரதவர் கொடுமை நடக்குதம்மா!

பாரதம் வேடிக்கை பார்க்குதம்மா!

கடற்ப்படைகொடுமை தொடருதம்மா!

கயவர் கைதான் படருதம்மா!


வலைக்களும்தான் அங்கே அருபடுது!

மீன்களும்தான் கொள்ளை இடுபடுது!

உயிர்பலிதான் நித்தம் நடைபெருது!

மானம்தான் கடலிலும் இழிபடுது!

கடலிலும் சிங்களர் கொடிதானோ?

நரிகளின் நாட்டமை ஏனோ?


தமிழன் என்றுதான் தனிக்கவேண்டம்!

இந்தியன் என்றாவது இறங்குகலேன்?

உயிரையும், உரிமையையும் தாருங்கலேன்?

கண்டனம் ஒன்றாவது கூறுங்கலேன்?

Friday, October 7, 2011

தமிழ் வரலாற்றுப் படங்களுக்கு வரவேற்ப்பு கொடுப்போம்

இன்றைய தமிழனின் வாழ்க்கையில் திரைப்படம் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது என்று சொன்னால் மிகையாகாது. அடிப்படையில் தமிழன் கலை ரசனையில் தமிழ் திரைப்படங்கள் அசுர வளர்ச்சி பெற்று விளங்கினாலும் அதனை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்கிறோமா? என்பது ஒரு பெரியக் கேள்விக் குறியாக நிற்கிறது.

அடிப்படைக் கல்வியில் இல்லாத பல விடயங்கள் பாமர மக்களையும் சென்று அடைவதற்கு ஊடகங்களே முதன்மை பங்கு வகிக்கின்றன. அத்தகைய ஊடங்களில் திரைப்படம் முதன்மையாக விளங்குகிறது. வெறும் பொழுது போக்கு அம்சமாகவும் வக்கிரங்களுக்கு தீனிபோடும் மசாலாகவும் மட்டும் இல்லாமல், நல்ல கருத்துக்களையும் வரலாற்று சிறப்புகளையும் எளிதில் மக்களிடம் எடுத்துசெல்லும் ஒரு சிறந்த ஆயுதமாக திரைப்படங்களை பயன்படுத்தலாம்.

மக்களிடம் கருத்துக்களை மிக விரைவில் கொண்டுசெல்ல மிகச் சிறந்த ஒரு ஊடகமாக திரைப்படம் இருக்கும் பொழுது, அதை ஏன் தமிழின வளர்ச்சிக்காக பயன்படுத்தக்கூடாது? என்னும் சிந்தனை எழுந்துகொண்டே இருக்கிறது.

மறைக்கப்பட்ட மற்றும் அழிக்கப்பட்ட தமிழனின் பெருமை இன்று தமிழர் பலர் அறியமாட்டார். எவன் ஒருவன் தன்னை குறைத்து மதிப்பிடுகிறானோ அவனால் என்றுமே சிறந்து விளங்க இயலாது என்பது உலகம் இதுவரை உணர்த்திய உண்மை. அதற்காக மிகைப்படுத்தி சொல்லப்பட வேண்டிய அவசியமில்லை, ஆனால் சொல்லப்படவேண்டிய உண்மைகளுக்கான சான்றுகள் பல நம்மிடம் இன்றும் உள்ளன.

ஒரு குறிப்பிட்ட கூட்டத்தால் அழிக்கப்பட்ட, அழிந்துகொண்டிருக்கிற தமிழனின் பெருமையையும், சிறப்பையும் வெளிக்கொணர்ந்து தமிழன் தன்னை யார் என்று உணர்துகொள்ள, இழந்த பெருமையையும், சிறப்பையும் மீட்டெடுக்க சரியான ஊடகம் இந்த திரைத்துறை என்பது சிறிதும் ஐயமில்லை.

வெறும் ஐநூறு, அறுநூறு ஆண்டுகள் வரலாற்றை கொண்ட நாடுகளே சிறந்த வரலாற்றுப் படங்களை கொடுக்கும் பொழுது, ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் வரலாற்றால் முடியாத என்ன?

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் வெளிவந்த தமிழ் வரலாற்றுப் படமாகிய "ஆயிரத்தில் ஒருவன்" எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும் அந்த முயற்ச்சியை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும் என்பது ஒவ்வொரு தமிழனின் தலையாயக் கடமை என்றே நினைக்கிறேன்.


தொழில்நுட்ப குறைகள் இருந்தாலும் முதல் படி சிறப்பாக அமைவது என்பது அனைவருக்கும் அனைத்து விடயத்திலும் இயலாத விடயம். என்னைப்பொறுத்தவரை "ஆயிரத்தில் ஒருவன்" என்னை திருப்திபட வைத்தது என்றே சொல்வேன்.

ஆயிரம் விடயங்கள் குறை சொன்னாலும் அது ஒரு தமிழனால் எடுக்கப்பட்ட தமிழனைப் பற்றிய வரலாற்றை தொட்டு செல்லும் கதை என்பதில் நான் பெருமை அடைகிறேன். என்னதான் சிறந்த கதையம்சங்களும், நடிப்புத் திறமையும் இருந்தாலும் நம்மிடம் தொழில்நுட்ப வசதி மேற்கத்திய நாடுகளை விட குறைவுதான். பிறகு நாம் அவர்களின் படங்களுக்கு இணையாக எடுத்த எடுப்பிலேயே எதிர் பார்ப்பது எந்த வகையில் ஞாயம்?.


இதுபோன்ற முதன்மை முயற்ச்சிகளை ஊக்குவிக்கும் போதே சிறப்பான வளர்ச்சியை நாம் அடைய முடியும் என்பதை அனைவரும் தெரிந்திருக்கும் பொழுது ஊக்குவிக்காமல் இருப்பது என்பது நம் வளர்ச்சிக்கு நாமே முட்டுக்கட்டை போடுவதுபோலாகுமே?.

இருமுறை எடுக்கமுயன்று கைவிடப் பட்ட "பொன்னியின் செல்வன்" கதை இன்றைய அளவிலும் கேள்வியாகவே உள்ளது. காரணம் அத்துனை செலவு செய்து படத்தினை மக்களிடம் வெற்றி பெற வைக்க முடியுமா? என்ற சந்தேகமே முக்கிய காரணம். இங்கு திரைத்துறை வர்த்தகரீதியாகவும் பார்க்கப்பட வேண்டியது என்பது ஒரு முக்கிய கண்ணோட்டமாகும்.

இப்பொழுதும் அதிக எதிர்பார்ப்போடு வரவிருக்கும் "7ம் அறிவு" "கரிகாலன்" போன்ற திரைப்படங்களின் வெற்றியைப் பொறுத்தே எதிர்கால தமிழ் வரலற்று படங்களின் வளர்ச்சி அமையும் என்பது துளியும் ஐய்யமில்லை. அத்தகைய படங்களை அதிகப் படியாக புகழ வேண்டாம் ஆனால் நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.
எந்த ஒரு விடயத்திலும் நாம் நம்மவரை விட்டுக்கொடுக்க வேண்டாம். அதற்காக இல்லாத ஒன்றினை தேவையில்லாமல் உயர்த்தி புகழவும் வேண்டாம் என்பதே எனது தனிப்பட்டக் கருத்து.

பதிவர்களாகிய நாமும் சரி, மக்களும் சரி நமது பெருமை பறைசாற்றும் இதுபோன்ற வரலாற்றுப் படங்கள் வந்தால் நிச்சயம் ஊக்குவிக்க வேண்டியது நமது தலையைக் கடமை என்று எண்ணி செயல்படுவோம்.