Tuesday, April 12, 2011

யாருக்கு என் (உங்க) ஒட்டு?

அன்பார்ந்த தமிழக மக்களே, நாளை எதிர்நோக்கும் தேர்தலில் எந்த தலைவர் வெற்றி பெறுவார், எந்த கூட்டணி ஆட்சி அமைக்கும், என்றென்னும் பொழுதிலே எனது வாக்கு யாருக்கு என்று நான் சிந்தித்துப் பார்க்கிறேன்.

உன்னைப்போல் ஒருவன் படத்தில் கமல் ஒரு வசனம் சொல்வார். "ஞாபகமறதி ஒரு தேசிய வியாதி" என்று அப்பொழுது எழுந்த கைத்தட்டல்களும், விசில் சப்த்தங்களும் என்னை புல்லரிக்கச் செய்தன, மக்கள் ரசனையை கண்டு அல்ல அட "மதி கெட்ட மூடர்களே" அது உண்மை என்பது உங்களுக்கு உரைக்க வில்லையே? என்று தான். அந்த தேசிய வியாதியை இப்பொழுது இனவியாதி என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் தமிழனின் நிலைமை அப்படி உள்ளது.

தமிழனின் இந்த நிலைமைக்கு காரணம் என்ன தெரியுமா? அவன் யாராரென்று அவனுக்கே தெரியவில்லை என்பதுதான் அதுதான் உண்மையும் கூட.

அப்படி தன்னிலை மறந்து, இயல்புநிலை இழந்து கண்டபடி கண்டவரை ஏற்றிவைத்து அழகு பார்த்து அவதிப்படும் அருமை தமிழரே. இதோ உங்கள் நினைவுக்காக சில.

1. எம்.ஜி.ராமச்சந்திரன், தமிழக வரலாற்றில் எந்த ஒரு தமிழனாலும் மறக்க இயலாத பெயர். அவர் எப்படி அரசியலுக்கு வந்தார்? யார்? எதற்கு? எப்படி? அவரை தி.மு.க வில் இணைத்தார்கள், எதற்கு அ.தி.மு.க வை தொடங்கினார் என்பதெல்லாம் வேறுகதை. ஆனால் ஈழத்திற்கு கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தார் என்பது உண்மை. இது மட்டுமில்லாமல் மதுரை, நாகப்பட்டினம், போன்ற இடங்களில் பயற்ச்சிகள் கொடுக்கப்பட்டதும் உண்மை. இதற்க்கு சாட்சி திரு பழ.நெடுமாறனிடம் கேட்டால் சொல்லுவார் (யார் என்று தெரியுமென்று நினைக்கிறேன்?). அப்படி வந்த அ.தி.மு.க தமிழ்நாட்டு சட்டப் பேரவையில் தீர்மானம் போடுகிறார்கள். என்னவென்று?

யாரை கைது செய்ய வேண்டுமாம்?
எங்கு கொண்டு வந்து?
என்ன செய்ய வேண்டுமாம்?
தூக்கிலிட வேண்டுமாம்.

அன்று எங்கே போனீர்கள் தமிழ் உணர்வாளர்களே?

சரி மூன்று பெண்களை பேருந்தோடு எரித்தபோது பொழுது.

சாலைப் பணியாளர்களை வேலை நீக்கம் செய்த பொழுது.

சரி இவர் இப்படி என்றால் அவர் எப்படி என்று பார்ப்போம்

2. காங்கிரசில் ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் (யாரும் தவறாக நினைக்க வேண்டாம், நடந்தது உண்மை) செயல்பாடுகளின் விளைவுகளால் பெரியார் வெளியேறினார். தி.க வை துடங்கினார்.

அதிலிருந்து பிரிந்தது தி.மு.க அண்ணா தலைமையில். திராவிட கட்ச்சிகளின் அடிப்படைக் கொள்கைகளின் முக்கிய ஒன்று காங்கிரசை தமிழகத்திலிருந்து முற்றிலும் நீக்குவது. அதற்க்ககத்தான் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க காகிரசுடன் கூட்டணி வைத்தபொழுது, மூப்பனார் காங்கிரசிலிருந்து பிரிந்து தி.மு.க வுடன் தமிழ்மாநிலக் காங்கிரசை உருவாக்கி கூட்டணி வைத்தார். ஆனால் அதே தி.மு.கஇப்பொழுது என்ன செய்கிறது?.

குடும்ப அரசியல் ஒருபுறம்
ஸ்பெக்ட்ரம் ஒரு புறம்
மதுரை பத்திரிக்கை அலுவலக எரிப்பு
உண்ணாவிரத நாடகம்


இதைவிட இவர் தமிழகத்தில் வடுதலைப் புலிகளை கைது செய்து இலங்கை அரசிடம் ஒப்படைத்து அவர்கள் தூக்கிலடப் பட்டனர். அதற்க்கு அவர்களை இங்கே கொன்றிருக்கலாம்.


3. வை.கோ. தமிழீழ்த்தில் அதிக ஈடுபாடு நல்ல பேச்சாளர், வழக்கறிஞர் இன்றை வரை விடுதலை புலிகளின் தடைநீக்க இந்திய அரசிடம் போராடும் தமிழர். இருந்தாலும் இவரை தமிழக அரசியலில் நம்ப முடியாத காரணம், பணப் பட்டுவாடா, கடந்த தேர்தலில் பொழுது இவர் அடித்தக் கூத்துக்கள் கொஞ்சமா நிஞ்சமா, இன்று ஈழமும் இல்லை அரசியலும் இல்லை, கொஞ்சநாள் பிறகு கட்சியும் இல்லை என்ற நிலைமை. தொலைநோக்குப் பார்வை இல்லாதாவர். முக்கியமாக் இந்தத் தேர்தலில் இல்லதாவர். எப்படி நான் ஒட்டு போடுவது.

4. விஜயகாந்த்,
இன்றைய வடிவேலின் நிலைமை நிச்சயம் தமிழக மக்களுக்கு, தன்னை ஒரு கதாநாயகனாக நினைத்துக்கொள்ளும், அரசியலில் கலைங்கருடன் இருந்து கத்துக்கொண்ட கொஞ்ச அரசியலில் ஆண்டுவிட நினைக்கும் அனுபவமற்ற, தன்னிலை மறந்து பேசும் பெருந்தலைவர். பேசக்கூட பொறுமையற்ற இவர் என்ன செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால் கட்சி ஆரம்பிக்கும் முன்பு வரை தமிழீழம் பற்றி மூச்சாய் பேச்சாய் பேசியவர், கட்சி ஆரம்பித்தபிறகு ஒரு கண்டனம்?, ஒரு அறிக்கை?, ஒரு வார்த்தை?................எதுவமில்லை ஆனால் தமிழகத்தின் முதல்வராகிவிட ஆசை, அவருக்கு கொடி பிடிக்க சிலர், கூட்டணி கட்சி சிலர், ஓட்டுபோட சிலர்.....ஏனப்பா தமிழா? தன்மானம் எங்கேயப்பா? குவாட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் கொடுத்துவிட்டயா?

சுறா அப்படீன்னு ஒரு படம் அது ஓடுச்சா?, நல்ல படமா? யார் நடிச்ச அதெல்லாத்தையும் விட அதுல ஒரே ஒரு வசனம் எனக்கு ரொம்ப புடுச்சுப்போச்சு,

"உலகத்துல தன்மானத்தைப் பத்தி பெருமையா பேசுரவனும் தமிழன்தான்
அத அடிக்கடி கேவலப் படுத்துரவனும் தமிழன்தான்"


ஒட்டு போடுவது என்பது ஒரு கடமைதான் நான் இல்லை என்று மறுக்க வில்லை, ஆனால் எரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளி நல்லக் கொள்ளி என்று பார்த்து பார்த்து ஒட்டு போடுவதற்கு பதில், போடாமலே இருப்பது மேல் அல்லவா?


அந்த 49 ஒ போடும் முயற்ச்சியில் அவமானப் படுத்தப்பட்டு, மிரட்டப்பட்டு விரட்டப்பபட்டவன் நான். இதுவரை நான் ஒட்டு போட்டது கிடையாது, என் கையில் மை பட்டது கிடையாது.

நாம் ஒருவரை ஆட்சிக்கு கொண்டுவர நினைத்து ஒட்டுபோடுகிறோம். அந்த ஆட்சியில் ஊழல் மிக்ந்துவிட்டால், நம் மக்களுக்கு நாமே துரோகமிழைத்தது போல் ஆகாதா? நம் தலையில் நாமே மண்ணை வாரிப்போட்டுக் கொண்டதுபோல் இல்லையா?

அவர் மாறிவிட்டார், இவர் மாறிவிட்டார் என்று திரும்பத் திரும்ப இவர்களையே மாற்றி மாற்றி அமர்த்துவது பின்பு ஐயயோ என்று புலம்புவது?

அந்தத் தலைமுறையில் மாறும், இந்தத் தலை முறையில் மாறும் என்று நாம் ஒட்டு போட்டு கொண்டே இருந்தால்? எந்தத் தலை முறையிலும் மாறது. நாம்தான் மாற்ற வேண்டும், இங்கு நாம் என்னும் சொல் ரொம்ப முக்கியம்.

ஜனநாயகத்தை ஒத்துபோயோ, அல்லது ஆயுதம் ஏந்தியோதான் போராடி புரட்சி செய்யணும் என்றில்லை, ஒத்துழையாமல் புரட்ச்சி என்பது இந்தியாவுக்கு புதிதல்ல.

இதுவும் ஒரு ஒத்துழையாமை, ஒரு தனிமனிதன் மட்டும் செய்தால் கடமை மீறல், அதையே ஒரு குழுவாக ஒருங்கிணைத்து செய்தால் அது ஒத்துழையாமை,

இப்படிப் பட்ட ஒரு ஒருங்கிணைப்பை எப்படி உருவாக்குவது என்பதுதான் எனக்கு புரியவில்லை, அவரவர் வீடு, ஜன்னலும், கதவும் பாதிக்க படக்கூடாது என்று பயப்படும் வரை, அவை சுரண்டபட்டுக் கொண்டுதான் இருக்கும்

இப்போ யாருக்கு ஒட்டு போடட்டும் இந்த தமிழன், யாருக்கு வேண்டும் இந்த தமிழன் போடும் பிச்சை

Monday, April 4, 2011

உயிர் குடித்த கவிதை...

கவிதையால் காதல் வரும்
கண்ணீர் வரும், கனம் வரும்
கனவு வரும், மரபு வரும்
மரணம்கூட வருமோ...

கடன் கொடுத்தக் கவிதை
உனக்கு காலனாய் மாறியதே
மனம் பிழிந்து எழுதியது
உன் உயிர்கிழித்துப் போனதே

ஒர்மனமாய் நான் பாடியது
உனக்கு ஒப்பாரியாய் ஆனது
தவமாலையாய் நான் பாடியது
உனக்கு சவமாலையாய் போனது

உனக்காக கவிதை பாடியவனை
இன்று உனைப்பற்றி பாடவிட்டாயடா
கடன்காரா ஏனோ என் கண்மறைந்து
போனாயடா?

எனைமறந்து வாழ்கிறேன் என்றும்
உனைநினைத்து சாகிறேன்

மறக்கவில்லை நான் உன்னையும்
உன் உயிரைக்குடித்த கவிதையையும்

"இன்று என் கண்ணீரை
துடைக்காவிட்டலும் பரவாயில்லை
என்றாவது என்மனமறிந்து
திரும்பிவா அன்று காத்திருக்கும்
என் கல்லறைப்பூகள் கைக்குட்டையாக"

தளராது தமிழினம்...

தாழாத சிரமும்
கறையில்லா கரமும்

வீழாத குணமும்
கோழாத மனமும்

நாமெனும் நினைவும்
தமிழெனும் அறிவும்

தமிழனை உயர்த்தும்
உலகிற்கு உணர்த்தும்

அடிமைத்தனம் உடைபடும்

தன்மானம் நிலைபடும்

விடுதலை விடுபடும்

காலம் விடைதரும்

வாழக்கை சுழர்ச்சியில்
வீழ்சிகள் விளையும்

சூழ்ச்சிகள் சேர்ந்து
வீழ்ச்சியில் குழையும்

தளராது தமிழினம்
என்றும் அழியாது ஒருகணம்

நெஞ்சுக்குள்...

கண்ணுக்குள் இருப்பவளும் நீதான்

கவிதையாய் பிறப்பவளும் நீதான்

நெஞ்சுக்குள் இருப்பவளும் நீதான்

மனதை பிளப்பவலும் நீதான்

காதல் வரமென வாங்கிவந்தேன்

காலம் முழுதும் ஏங்கிவந்தேன்

உன்நினைவை மட்டும் தாங்கிவந்தேன்

என்னை நானே நீங்கிவந்தேன்

உன்புன்னகை என்னும் மந்திரம்தான்

என் நினைவை ஈர்க்கும் தந்திரம்தான்

உடலில் இன்று எந்திரம்தான்

மனதில் எங்கும் உதிரம்தான்

வார்த்தை ஒன்றை சொல்லிவிடு

இல்லை எனக்கு கொல்லியிடு

காதல் வந்தால் வசந்தகாலம்

இல்லை என்றால் இலையுதிர்காலம்

கண்கள் முழுதும் நீர்களின் கோலம்

நினைவுகள் தானே நம்மில் பாலம்

வார்த்தைகள் அதிகம் பரிமாறவில்லை

ஏக்கங்கள் மட்டும் நிறமாறவில்லை

கேள்விகள் ஏதும் புரியவில்லை

விடைகாணவும் எனக்கு தெரியவில்லை

விடுகதை நிறைந்த வாழக்கையிது

விடையில்லா விடுகதை போடுதது.

கணவாய் போனதே!

கனவுகண்டேன் வெறும் கணவாய் போனதே

உணர்வு கொண்டேன் உருக்குலைந்து போனதே

தமிழுக்கு ஒரு நாடு என்றும்

ஈழம்தான் அதன் வீடு என்றும்

ஈராயிரம் ஆண்டு பன்மையான இனம்

உலகை ஆண்ட தொன்மையான இனம்

அடிமை பட்டுதான் கிடக்குது அங்கே

அதனை காக்கும் உணர்வுதான் போனது எங்கே?

மாநாடு போடும் கூட்டம் இங்கே

தன்மான உணர்வுதான் போனது எங்கே?

அரைகூவல் விடுக்கும் எமது அன்பர்களே?

ஈழத்தின் அழுகுரல் உமக்கு கேட்களையோ?

கண்ணீர் வடிக்கும் எமது கண்களில்தான்

குருதி தோய்வது உமக்கு தெரியலையோ?

எம்மக்களின் கதிதான் உமக்கு புரியலையோ?

எம்மினத்திற்கு விடிவுதான் இன்னும் வரவில்லையோ?

அன்பே!

அன்பே!

உன் இமை என்ன திரைக்கதவா? இல்லை சிறைக்கதவா?
ஒரு முறைதான் திறந்தாய் ஆயிரம்முறை இறந்தேன்
உன் பார்வைக்கு ஏங்கி கொண்டேன்
என் பிறப்பிற்கு அர்த்தம் கண்டேன்

-------------------------------------------------------------

நிலா ஒன்றுதானா? இல்லை
இரண்டு என்பேன் உன் விழிகளை
உன் முகமதில் எழ்திவை "பூக்களை பறிக்காதே" என்று
ஆனால் வண்டுகளுக்கு எப்படி தெரியும்? புரியவில்லை எனக்கும்
-------------------------------------------------------------

அணைத்துக்கொண்டேன் என்னை நானே
உனக்கெப்படி தெரியும்? உன் நிழல் என்மேல்
உன்னை நினைத்து கண்களை மூடினேன்
சொர்க்கம் தெரிந்தது
கண்கள் திறந்தேன் சொர்க்கம் வந்தது,
என் எதிரில் நீ

-------------------------------------------------------------

உன்னை நித்தம் நினைத்தேன்
என் சித்தம் தொலைந்தது
நிலவை பிடித்தேன் விழியிலே
மலர்கள் தொடுத்தேன் உன் வழியில்
உன் பெயரை கேட்டேன் ஒருமுறைதான்
என் பெயரை மறந்தேன் மறுமுறைதான்

--------------------------------------------------------------

மனிதனாய் பிறந்து தொலைத்துவிட்டேன்...

கண்னே என் முன்னே நீ
கடந்துபோனாய் பெண்னே
நீ விண்னே நான் மண்னே
எனை மறந்துபோனாய் கண்னே

காதல் என்பது எரிவிளக்கா?
நான் மட்டும் இங்கே விதிவிலக்கா?

கண்களை மூடும் போதினிலே
என் மனமோ போகுது உன் மேனியிலே
பார்வை ஒன்றை வீசிவிட்டு
என் மனதை பறித்தாய் சலனமிட்டு

காதல் என்பது வந்ததடி
மனம் தீயில் தினமும் வெந்ததடி
உன்னை பார்த்தது ஒருமுறைதான்
நான் பிறந்தேன் இறந்தேன் மறுமுறைதான்
வார்த்தை ஒன்றை வீசிவிடு

மௌனம் திறந்து பேசிவிடு
உன்னை மறக்க வழியுமில்லை
என் உயிரை கொடுக்கவும் தெரியவில்லை
பாவம் உனக்கு வந்துவிடும்
எனை பகிர்ந்தே காதல் தின்றுவிடும்

முத்தம் ஒன்றை தந்துவிடு
சத்தமின்றி என்னை கொன்றுவிடு
காலடி தனிலே மண்னாவேன்
உன் அங்கம் தனிலே பொன்னாவேன்
மனிதனாய் பிறந்து தொலைத்துவிட்டேன்
என்னை நானே இன்று வெறுத்துவிட்டேன்

என்று மெய்படும் அவன் கணவு?

கணவுகள் மெய்பட வேண்டும் என்றான் கவி

மெய்பட்டதா கணவு
இல்லை பொய்பட்டாத?

தினம் தினம் எத்தனை கணவு
அத்தனையும் பொய்யாய் போகுது!
என் தேசமே!!

நான் என்ன செய்வேன் ஏதுசெய்வேன்
வெந்தேன் எனை நானே நொந்தேன்

கணவு என்பது இடற்று பிழையால்
களவு என்பது ஆனது ஏனோ?
ஒழுக்கம் என்பது என் தேசத்தை விட்டு
போனது தானோ? ஏனோ?

மதவெறி இனவெறி பெருகியதிங்கே
மனு நெறிதான் போனது எங்கே?

காசை காணத் தெறியுது இங்கே
பாசம் நேசம் போனது எங்கே?

எதரி வந்தால் ஒற்றுமை காணுது
இல்லை என்றால் வேற்றுமை பேணுது

மாநிலம் முழுதும் சாதியில் வேற்றுமை
தேசம் முழுதும் இதில்தான் ஒற்றுமை

வேற்றுமை என்பது வார்த்தையில் இல்லை
ஒற்றுமை என்பது உள்ளத்தில்(உண்மையில்)இல்லை

எங்கோ போகுது தேசம்
இட்டுகட்டி போடுது பல வேசம்

தண்ணீர் கொடுக்க தரம்கெட்டு கிடக்குது
தாய்க்காவிரி அங்கே சிறைப்பட்டு கிடக்குது

உண்மயில் சொன்னால் வெட்க்கக்கேடு
என்று மறையும் இந்த சாபக்கேடு

விடிவு ஒருநாள் வருமா? என்றேன்
கணவுகள் மெய்பட வேண்டும்
என்றான் கவி

என்று மெய்படும் அவன் கணவு?

நானும் காற்றாடி போல்தான்!

கடற்க்கரை சாலை ஓரம்

காலாற நடந்த நேரம்

காற்றாடி ஒன்றை கண்டேன்

அது காற்றில் ஆடி ஆடி

நல்ல முகம் அதற்கு

பல முக்கோணம் வரைவதற்கு

கண்கள் இரண்டு வரைந்தது

ஆனால் தறிகெட்டு திரிந்தது

காற்றில் படபடக்கும் சத்தம்

சுதந்திரம் கேட்கும் அர்த்தம்

எங்கிருந்தோ அதை இழுக்க

அங்கே அது தவிக்க

விரல்களோ இன்னும் சொடுக்க

அங்குமிங்கும் அலைந்து துடிக்க

அதிகமாய் போராடியதால்தான்

பட்டென அறுந்தது நூல்தான்

விருட்டென சென்றது வான்தான்

நானும் காற்றாடி போல்தான்

உலகம் உன் காலடியில்....

விடியலை நோக்கி நட

காலம் கை கொடுக்கும்

நண்பா நம்பிக்கையை விடாதே

உலகம் உன்னை விட்டுவிடும்

தொடும் தூரம்தான் வானம் ஆனால்

முதல் அடி உன் காலறுகில்

நிலவில் நீந்தலாம் வா ஆனால்

பூமியில் பறக்க வேண்டும் மறவாதே

சிறகுகளை தேடாதே சிறிது புத்தியை தீட்டு

சிறகுகள் முளைக்கும் தாமாகவே

பூமி உனக்கு ஒரு விளையாட்டு பந்துதான்

ஆனால் முதலில் விளையாட கற்றுகொள்

கனவுகள் காணலாம் தவறில்லை

செயல்களை முறிக்காதே வெறும் கனவாய் போய்விடும்

கற்பது கலையல்ல அதனை

கையாள அறிவதுதான் கலை

இறைவனை நினை
நீ செயலில் இறங்கு

உலகம் உள்ளது உன்னிடம் தோற்க

மறவாதே
காற்றுக்குமிழை
கடலால் கூட உடைக்க முடியாது

உலகம் உன் காலடியில்

உன்னை கண்ட நாள்முதலாய்....

உன்னை கண்ட நாள்முதலாய்

என் உறக்கம் உறங்கி போனதடி

உயிரை விட்ட உடல்மட்டும்

இங்கு ஊர்வலம் போக காணுதடி

இதயம் இரண்டாய் பிளந்துகொண்டு

தனி தனியே துடிக்கப் பார்குதடி

இரவும் பகலும் இரண்டென கலந்து

எனை இடித்து இடித்து தல்லுதடி

சருகாய் விழுந்தேன் உன்பிரிவில்

விதையாய் வருவேன் உன் நினைவில்

உன் சுவாசம் வந்து போவதென்ன

உயிரை வதைத்து என்னை கொல்வதென்ன

கனவுகள் காண வழியுமில்லை

என் விழிகளை பிடிங்கினாய் ஏனோ தெரியவில்லை

என் இதயசுவரில் உன் பெயரே

எழுதிப்போனவள் நியே என் உயிரே

வீழ்வது நாமாய் இருப்பினும்....

தாயின் தாலாட்டு தமிழ்மொழியில்

தமிழனின் தன்மானமோ நடுவீதியில்

சிங்களம் சிரிக்குது சிறுநரியாய்

தமிழனின் சிந்தையோ வெறும்கரியாய்

சோழனின் வம்சமிங்கே சோறுடைக்குது

பாண்டியன் வம்சமோ பயனற்று கிடக்குது

பல்லவன் பெயர்தான் பாழாய் போச்சு

ஈழம் நிலையோ நிர்கதியாச்சு

சென்னையீல் சிங்கம் ஜெய்க்கனுமாம்

ஈழத்தில் புலிகள் தோர்கனுமாம்

சுயநலம் காப்பவர் இங்குண்டு

பிறர்நலம் பார்ப்பவர் எவருண்டு

வீழ்சிகள் என்பது படியாகும்

ஈழம் ஒருநாள் அரங்கேறும்

கண்களில் வழிவது நீரல்ல

தமிழன் என்றும் ஓடல்ல

வீழ்வது நாமாய் இருப்பினும்

வாழ்வது தமிழாய் இருக்கட்டும்