Wednesday, September 29, 2010

காகிதம்

வெண்மையாய் இருந்த வெற்றுக் காகிதம்

ஆணிகளால் அரையப் பட்டிருந்தாலும்

அமைதி காத்தது அழகாகவே

தூரிகை துவலத்துவல நிறமேறியது

பச்சை வர்ணம் பளிச்சிட்டது

சிவப்பு வர்ணம் ஆங்காங்கே சிதறியது

நீல வர்ணம் நீண்டது

மஞ்சள் வர்ணம் மருகியது

கருப்பு வர்ணம் கனமின்றி பெருகியது

அங்கும் இங்கும் வர்ணக்கலவை

பெயரிட இயலா புதுப்புது வர்ணம்

காகிதத்தை காதலன் போல்

தொட்டு முடித்தது தூரிகை

அழகாய்த்தான் இருந்தது ஓவியம்

தனித்தன்மை இழந்தது காகிதம்

Monday, September 27, 2010

நிரந்தரமாய்.......................

தொலைந்து போன நித்திரை
எங்கோ தொலைந்துபோன என் நித்திரை
வலியவந்த வலிகளினால்
கலைந்துபோன நித்திரை
உழைப்புக்காகக் கலைத்தேன்
ஊருக்காகக் கலைத்தேன்
உறவுக்காகக் கலைத்தேன்
எங்கோ அதனை தொலைத்தேன்
கண்டடையும் முன்பு காலம் வந்தது
நித்திரை ஏற்க்க நிரந்தரமாய்

-------------------------------------------------------------
அவள் தான்
அவளே தான்

நினைவைப் பறித்துவிட்டு
நிதர்சமாய் சிரிக்கிறாள்
உணர்வை விதைத்தவள்
அறுவடைக்கு மறுக்கிறாள்

என்று அடிமை நான்
அவளின் அணைப்பிற்கு
இன்றும் குழந்தை நான்
அவளின் கரத்திற்கு

என்னைத் தாலாட்டி
பாராட்டி
சீராட்டி அமுதூட்டும் அன்னை
என் அன்னை
அவள் என் தமிழன்னை

Sunday, September 5, 2010

எங்கோ...........

கனவுகள்

ஆசைகள்

லட்சியம்

கொள்கை

பாசம்

நட்பு

வேட்க்கை

காதல்

கருணை

அன்பு

இவற்றோடு

எரியும்

மனிதனின் படம்

செய்தித்தாளில்

எங்கோ

குண்டு வெடிப்பாம்

Friday, September 3, 2010

முகமூடியோடு

மூடி மறைத்த முகத்தோடு ஓடுகிறேன்
என் உண்மை முகத்தைத் தேடி
என்றாவது கண்டுப்பிடித்து விடுவேன்
என்ற முகமூடியோடு
----------------------------------------
கடுவுளாய் இருக்க முயற்ச்சித்தேன்
கயவன் என்றது உலகம்
பதறி ஓடினேன்
பைத்தியக்காரன் என்றது அதே உலகம்
எதுவும் தடுக்கவில்லை என் கருணையை
காசைத்தவிர
-----------------------------------------
இறந்தகால நினைவுகளை இழுத்து
நிகழ்காலத்தை இறக்கச் செய்யும்
என் தனிமை
-----------------------------------------
எந்திர வாழ்க்கையில்
சிக்கி சிதையும் பூக்களாய்
மகிச்சி

Thursday, September 2, 2010

மருந்தாகியது...........

அறியா மனது
மண்டியிட்டக் கால்கள்

செய்யாத் தவறு
அடிவாங்கியக் கைகள்

கோணத மனம்
குட்டுப்பட்டத் தலை

காதல் வலி
கதறிய நெஞ்சம்

தோல்வியின் தொடர்ச்சி
கலங்கியக் கண்கள்

வெற்றியில் வீழ்ச்சி
ஏங்கிய நெஞ்சம்

உணர்வின் ஏக்கம்
கசிந்தக் கண்ணீர்

அழிந்த இனம்
நரக வேதனை

புரிந்த மனம்
பொய்யான சோதனை

மறைந்த உறவு
உறைந்த தாக்கம்

குலைந்த நட்பு
விளைந்த நோக்கம்

மருந்தாகியது காலம்

Wednesday, September 1, 2010

பிரபா………..

“ஏய்...பிரபா எங்க போய் தொலஞ்ச....முண்டம்?" என்று

கத்திக்கொண்டே வந்தாள் பங்கஜம்மாள். கோபம் தலைக்கேற வார்த்தையில் கொட்டினால். "பத்திர பண்டம் கழுவல.... எங்க போய் தொலஞ்ச எரும..." என்று வசை பாடினாள்.

"அம்மா?.... ஏம்மா சும்மா கத்துற? நான் தான் பிரபாவ மெடிக்கல் வரைக்கும் போ சொன்னேன்" என்றாள் சுவேதா.

சுவேதா பங்கஜம்மாளின் ஒரே மகள் செல்ல மகள். கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கிறாள். சுவேதாவுக்கு பிரபா என்றாள் கொள்ளை பிரியம். பிரபா வெகுநாட்களாக அவர்கள் வீட்டில் வேலை செய்வதால் மட்டுமல்லாமல், சுவேதாவின் அப்பா வெளிநாட்டில் இருக்கிறார் வருசத்துக்கு ஒருமுறைதான் வருவர், ஒருமாதம் கூட தங்கமாட்டார், அம்மாவோ மூட்டுவலியால் பாதி நேரம் படுக்கைல்தான், உடன்பிறந்தவர்களும் கிடையாது.

அவள் அதிகநேரம் செலவிடுவது பிரபாவுடன்தான், அதனால் பிரபாவின் மேல் அவளுக்கு ஒரு தனி பிரியம்.

"வீட்டபாரு ஒரே தூசி.... ஒரு வேலைய ஒழுங்க செய்ரதில்லை மாசாமாசம் சம்பலம் மட்டும் முழுசா 900 ரூபா.... தெண்ட செலவு"
என்று பங்கஜம்மாள் கரித்துக் கொட்டும் பொழுதே வேர்க்க விருவிருக்க ஓடி வந்த பிரபாவை பார்த்து

"எவ்வளவு நேரம்? ஆடி அசஞ்சி வர......?" என்றாள்.

"இல்ல பெரியம்மா நம்ப தெரு மெடிக்கல் தொரக்கல, அதன் மெயின் ரோட்டு கடைக்கு போய் மருந்து வாங்கியாந்தேன்..... சின்னமாதான் எங்க இருந்தாலும் வாங்கியார சொன்னாங்க...." என்று பிரபா முடிப்பதற்குள்

"சரி..சரி... விட்டா கதையளப்ப போ போ போய் வேலைய பாரு...." என்றாள்.

பிரபா பதிலேதும் சொல்லாமல் சென்றபின் சுவேதா

"ஏம்மா? பிரபா பாவமில்ல இப்டி எரிஞ்சி விழுற" என்றவளிடம்

"நீ சும்மா இருடி, யார்யார எப்டி வைக்கனும்னு எனக்கு தெரியும். வேலக்காரங்கள இப்டித்தான் வைக்கனும் இல்லனா நம்ப தலைல ஏறி உக்காந்துக்குவாங்க" என்று சொல்லிக்கொண்டே சென்ற பங்கஜம்மாளை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள் சுவேதா.

"என்னதான் இருந்தாலும் எல்லோருக்கும் மனசு என்று ஒன்று இருக்குமே?, வலி அனைவருக்கும் ஒன்று தானே? என்னை ஒத்த வயததுதான் பிரபாவும், பாவம். கொடிது கொடிது வறுமை கொடிது அதனிலும் கொடிது இளமையில் வறுமை, என்பது எவ்வளவு உண்மை"

என்று தனக்குத்தானே வருந்திக் கொண்டாள்.

“என்னடி ரொம்ப பாவப் படுறியோ?" என்று பங்கஜம்மாள் கேட்க

தன் சிந்தனையிலிருந்து திடீர் என்று விடுபட்டவள்

"இல்லமா, நேத்துக்கூட சுடுதண்ணிய கால்ல ஊத்திக்கிகிட்டு காலெல்லாம் ஒரே காயம், பாவம்மா பிரபா." என்றால் ஒரு குழந்தை போல

"சூடான பத்தரத்த எறக்கி வக்கிம்போது துணிய வச்சிதான் ஏறக்கனும், இந்த அறிவுகூட இல்லமா வேல செஞ்சா இப்டிதான் ஆகும்"
என்று புத்தகத்தை பார்த்தபடி கூறியவள், ஒரு ராட்சசி போல் தெரிந்தால் சுவேதாவின் கண்களுக்கு.

இது எதைப் பற்றியும் கவலைபடாமல், காலால் இட்ட பணிகளை தலையால் முடித்துவிட்டு பிரபா கிளம்பும் போது மணி 6.15 ஆகிவிட்டது.

"பெரியம்மா…? நான்…. கெளம்பட்டுமா....?" என்று தயங்கிய பிரபாவின் முகத்தைக்கூட பார்க்காமல்

"இம்.., இம்.., நாளைக்கு காலைல அஞ்சு மணிக்கு வந்துடு" என்றவளிடம் சரி என்று தலையாட்டிவிட்டு வந்த பிரபா வாசலை தாண்டும் பொழுது

"பிரபா ஒருநிமிஷம் நில்லு" என்றாள் சுவேதா

"என்ன சின்னம்மா ஏதாவது வாங்கியாரனுமா?"

"அதெல்லாம் ஒன்னும் வேணாம், இந்தா இத பிடி" என்று ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை பிரபாவின் கையில் திணித்தாள்.

"இல்லமா வேண்டாம், பெரியம்மாவுக்கு தெரிஞ்ச திட்டுவாங்க"
என்று நெளிந்த பிரபாவின் கையை விடாமல் பணத்தை திணித்தபடி

"அதெல்லாம் ஒன்னும் தெரியாது, அப்படி கேட்டாலும் நான் சொல்லிக்கிறேன், நீ காலுக்கு நல்ல மருந்தா வாங்கிப்போடு... " என்றாள்.

சுவேதாவின் பிடிவாதத்தால் பணத்தை வாங்கிக்கொண்ட பிரபா
"சரி நான் கெளம்பறேன் சின்னம்மா" என்று பிரபா நகர முயல

"பிரபா நான் சொன்னத யோசிச்சுப் பாத்தியா?" என்றாள் தலையை குனிந்து கொண்டே.

"சின்னம்மா நான் அன்னைக்கு சொன்னதான் இப்பவும் சொல்றேன், தயவு செஞ்சி புரிஞ்சுக்குங்க. நீங்க பணக்காரங்க நான் ஒரு ஏழ அதுவும் வயசுக்குவந்த தங்கச்சிக்கு ஒரு நல்ல துணி எடுத்துக் குடுக்ககூட வக்கில்லாத ஏழ, உங்களுக்கும் எனக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாது. எம்மேல உங்களுக்கு இருக்குறது காதலில்ல கருண, கருணையும் காதலையும் போட்டுக் கொழப்பிக்காதீங்க, அதுவுமில்லாம என்னால உண்ட வீட்டுக்கு துரோகம் பண்ண முடியாது. என்ன மன்னிச்சிடுங்க." என்று கையெடுத்து கும்பிட்டபடி திரும்பி நடந்தான் ஏழை பிரபாகரன்.

கலங்கிய கண்களுடன் பிரபாகரனை பார்த்தப்படியே சிலையாய் நின்றால் சுவேதா.