Thursday, January 5, 2012

ஞானத்தின் விசாலம்...


அனைத்தும் அறிந்துவிட்டதாய்
துள்ளிக்குதிக்கிறது ஆணவம்
வக்கிரமும் வாஞ்சையும்
வரிசைகட்டி வந்து நிற்க

தேவையைமிஞ்ச தேடுகிறது ஆசை
அதனை மிஞ்சும் பேரசை
வன்மம் என்பதும் அதர்மம் என்பதும்
பிறப்பெடுக்கும் தருணம்
இதுவாகவே இருக்க
கோபம் பொறாமை கொடிகட்டி நிற்க

மனம் வாடி, துன்பம் தேடி
வாழ்க்கையை உணராமல் வாழ்வதற்கு

ஆறுக்கு
ம் குறைவே நலம்

Wednesday, January 4, 2012

அறிவற்ற அரசு இயந்திரம்


 மக்களுக்காக மக்களால் நடத்தடப் படுவதுதான் ஜனநாயகம், அப்படி என்றால் ஜனநாயகம் என்பது  நமக்காக நாமே செய்வதுதான் என்பது நேரடிபொருள்படும் இல்லையா? இதை நாம் முழுதாய் உணர்ந்திருக்கிறோமா? என்றால் இல்லை என்று என்னால் அடித்து சொல்லமுடியும்.

 இங்கு இருக்கும் மக்களும் சரி, மக்களில் இருந்து வந்து ஆட்சி செய்யும் அரசியல்வாதியானாலும் சரி, அதே மக்களில் இருந்து பணியாற்றும் அரசாங்க அதிகரியானாலும் சரி யாருக்குமே இந்த தெளிவு இருப்பதில்லை, அப்படி அது இருக்குமேயானால் இவ்வளவு ஒரு கேவலமான அரசாங்கமோ அரசு எந்திரமோ இருக்காது.


 ஒரு அரசாங்க மருத்துவமனையில் கண்டபடி புலம்பி நின்றார் ஒருவர், சுத்தமில்லை, அக்கறை இல்லை, கவனிப்பு இல்லை, உங்களுக்கு எதுக்கு ஒரு உடுப்பு, மாதா மாதம் சம்பளம், அரசாங்க வசதிகள் என்று பொரிந்து தள்ளினார், நானும் அதேபோல் ஒருமுறை அல்ல பலமுறை கத்தி இருக்கிறேன் இருக்கிறேன், சரி அவரை சமாதனப்படுத்தலாம் என்று நீங்கள் யார்? என்ன நடந்தது? என்று நான் கேட்க அவர் பொதுப்பணித்துறை ஊழியராம் நோயாளியாய் இருந்த அவரது உறவினர் ஒருவரை அவர்கள் சரியாக கவனிக்கவில்லையாம், எனக்கு சிரிப்பதா இல்லை அழுவாத என்று தெரியாமல் விழித்தபடி நின்றதுதான் மிச்சம். ஏன் என்றால் எங்கள் வீதி சாலை கிண்ணம், சாக்கடை சந்தனம்.

  அப்படிப்பட்ட துறையை சேர்ந்த ஒருவர் இன்னொரு துறையை சேர்ந்தவர்களை வசை படுகிறார். இதை என்னவென்று சொல்வது? என்று நினைத்து எனக்குள் நான் நொந்துகொண்டேன்.




 இதுதான் இன்றைய அரசு எந்திரத்தின் நிலைமை, புயல் கரையை கடக்கும் என்று இரண்டு மூன்று  நாட்களாகவே தகவல் வந்தவண்ணம் இருக்க, கடந்து போன பின்னும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என்றால் அப்படி என்னதான் வேலை செய்கிறார்கள் இவர்கள் என்று கேட்கத்தோன்றுகிறது.

 அப்படி யாராவது ஒருவன் பொங்கியெழுந்து கோவத்தில் குதறிவிட்டால்கூட உடனே போராட்டம் வேலை நிறுத்தம், ஏன்? அவனை ஒருவன் அடித்தால் நாளை நம்மை இன்னொருவன அடிப்பானே என்ற பயம். அதற்காக தவறுசெய்வதையோ கடமை தவறுவதை சரி செய்துகொள்வதில்லை, போராட்டம் வேலைநிறுத்தம் செய்து பூசி மொழிகிவிடுவது. நல்லா இருக்கு உங்க நியாயம்.

 ஒருவன் தவறு செய்தால் அதை கேட்டு கண்டிக்கவே
ண்டியவன் அதே தவறுசெய்கிறான், அவனை கண்டிக்க வேண்டியவன் அவனை மிஞ்சி தவறு செய்கிறான் இது ஒரு சங்கிலித்தொடராய் போய்கொண்டே இருக்கிறது, இவர்களுக்கு ஒரு பாதிப்பென்றால் அடுத்தவனை குறை சொல்லும் இவர்கள், அடுத்தவன் இவர்களால் அடையும் பாதிப்பை பற்றி கவலை கொள்வதில்லை பிறகு இவர்கள் மட்டும் எப்படி அடுத்தவரிடம் எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.






 இங்கு யாருமே அவர் அவர் முதுகை பார்க்காமல் அடுத்தவர் முதுகை பார்த்து சிரிப்பவராய் இருக்கும் போது, இது ஒரு அறிவற்ற செயல் என்பது முழுமையாய் நிருபணம் ஆகிறது. இது குறிப்பிட்ட துறைகளில் மட்டும் அல்ல எனது நேரடி அனுபவத்தில் அனைத்து துறைகளிலும் இதே நிலைமைதான்.

டிஸ்கி: இவர்களை தவிர்த்து கண்ணியமாகவும், கடமை உணர்வோடும், நேர்மையாக பணியாற்றும் அரசு அதிகாரிகள் ஒருசிலர் இருக்கவே செய்கிறார்கள் ஆனால் அவர்கள் படும்பாடு வேதனை.  

                         

Tuesday, January 3, 2012

இந்திய மொழிகளில் தமிழே முதன்மை

  தமிழ்
இந்தியாவின் பழங்கால நாகரீகம் சிந்துசமவெளி நாகரீகம். இதன் வயது சுமார் கிமு.2500 மேல் இருக்கும் என்பது ஆராய்ச்சி வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

 இது உலகின் தொன்மையான பல நாகரீகங்களுக்கு இணையானதாகவும், சிறப்பானதாகவும் இருந்திருக்கிறது என்பதில் சிறுதும் ஐயமில்லை. இங்கு கிடைக்கபெற்ற முத்திரைகளும் படிப்பதற்கு மிகக் கடினமாகவும், முத்திரை வடிவ மொழியாகவும் இருக்கிறது.


                                                                      
 இது தமிழ் பிராமி எழுத்துக்களே என்றும் இதுவரை உள்ள ஆராய்ச்சி கூறுகள் அதற்க்கு அத்தாட்சியாவும் இருப்பதை ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் கூறுகிறார்.



 ஐராவதம் மகாதேவன் அவர்கள் திருச்சியில் பிறந்து, செய்தித்தாள் ஆசிரியராக பணிபுரிந்து, ஆராய்ச்சியாளராக சிறப்புபெற்று பத்மஸ்ரீ விருது வாங்கியவர். இவரின் ஆராய்ச்சி கூற்று படி சிந்து சமவெளி நாகரீகத்தின் பயன்பாட்டு மொழியில் இருக்கும் குறியீடுக
ள் வலமிருந்து இடமாக எழுதப்பட்ட தமிழ் பிராமி வட்டெழுத்துக்களே என்றும், அதுவே திராவிட மொழிகளில் முதன்மையானது என்றும் குறிப்பிடுகிறார்.

இது சம்ஸ்கிருத வடிவம் கொண்டது என்னும் இன்னொரு கூற்று இருந்தாலும், அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை, சமஸ்கிருதம் ஆரியர்களால் கொணரப்பட்டது,
 ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்தது கிமு 1500 தான், அதனால் கிமு 2500 சிந்துசமவெளி நாகரீகத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் எவ்வித தொடர்பும் இருக்க முடியாது என்பதற்கு தொல்லியல் சான்றுகள் பல உள்ளன.



 ஆரியர்களின் வாழ்க்கை முறை குறிக்கும் நூலான ரிக்வேதம் கிராமப்புற வாழ்வை குறிப்பதாய் மட்டுமே உள்ளது, ஆனால் சிந்துசமவெளி நாகரீகம் நகரவாழ்க்கை பண்பாட்டை அடிப்படையாக கொண்டது எனவும், ரிக்வேதே அடிப்படியில் சிந்துசமவெளி நாகரீகத்திற்கும், ஆர்யா கலாச்சாரத்திர்க்கும் சம்ஸ்கிருத மொழிக்கும் உள்ள தொலைவு மிக அதிகமாக காணப்படுகிறது.

 அதிலும் முக்கியமாக ஆரிய கலாச்சாரத்தின் சிறப்பாக இருந்த குதிரை, சிந்துசமவெளியில் எங்குமே இடம்பெறவில்லை இந்தியாவில் குரிரை பற்றிய தெரிவு கிமு 1500 க்கு பிறகே வந்திருக்க வேண்டும், ஆதலால் இதுவரை சிந்துசமவெளியில் பயன்படுத்தப்பட்ட மொழி தமிழ் பிராமி வட்டெழுத்து மொழியே என்பதில் சிறிதும் ஐயமில்லை என்பது ஐராவதம் மகாதேவன் போன்ற ஆராய்ச்சியாளர்களின் நிருபிக்கப்பட்ட கூற்றாக இருக்கிறது.




 இதே போல் உலகின் மிச்சிறந்த பழமையும் பெருமையும் வாய்ந்த எகிப்த்து நாகரீகத்தின் அடையாளமாக கண்டெடுக்கப்பட்ட பானை ஒன்றில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்ப பட்டுள்ளன. தாய்லாந்து நாட்டிலும் தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கொண்ட பானை ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.


டிஸ்கி - இவ்வாறான இந்தியாவின் முன்னோடி மொழி தமிழ்மொழி என்றால் போதிதர்மர் மட்டும் எப்படி தமிழனாக இல்லாமல் போனார் என்பது எனக்கு புரியவில்லை.


நன்றி - கிமு கிபி (மதன்), google, விக்கிபீடியா, varalaaru.com 

Monday, January 2, 2012

இந்த இனம் எம் தமிழினம்...


காலப் பெருவெளியில்
பாதச்சுவடுகளை மட்டும் விட்டுச்சென்ற
இனங்களின் மத்தியில்
காலூன்றி நின்று போராடும்
என் தமிழினம்

கயவர்கள் பலரால்
காட்டிக் கொடுக்கப்பட்டபின்னும்
கண்டவர்கள் ஆண்டுவிட்டு
சுரண்டி எடுத்த  பின்னும்
சுயமாய் வாழத் துடிக்கும்
இனம் என் தமிழினம்

சதிகளின் மூலம் அழித்தெடுத்தது போக
நரிகளின் வேளையில் துடைத்தெடுத்தது போக
மீதம் இருக்கும் தன்மானம் தளராமல்
தழைக்க வழிதேடும் இனம் என் தமிழினமே

நாகரீகம் சொல்லிக்கொடுத்த எமக்கு
மோகம் பல பிறந்தாலும்
தமிழ் தாகம் தணியாமல்
தரணியில் இருக்கும் இந்த இனம்
என் தமிழினமே
      
உயிரை விட மானம் பெரிது
என்று மறம் கொண்டு வாழ்ந்த இனம்
மரபு கொஞ்சம் மாறியிருந்தாலும்
இன்னும் மறிக்கவில்லை இனம்
எம் தமிழினம்

ஒற்றுமைக்கு வழியில்லாமல் போக
வேற்றுமை தலைவிரித்தாட
சாதியம், மதம் என்னும்
அடிமை வாழ்வை தகர்த்து
தன் நிலைமையில் மீட்சி காண்கிறது
இந்த இனம் எம் தமிழினம்

மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்
என்னும் குரல் ஒலிக்கிறது ஓயாமல்
கணவாய் இருக்கும் அந்தக் குரல் இப்பொழுது
நிஜமாய் மாறுகிறது, மாற்றுகிறது

இந்த இனம் எம் தமிழினம்

காலச் சுழற்ச்சியில் நாம் மேலேறும் தருணம் இது
என்று தனைத்தானே உணர்ந்து
உயர்த்திக் கொள்கிறது இந்த இனம்
எம் தமிழினம் 

Sunday, January 1, 2012

என்று மெய்படும் அவன் கனவு?


கனவுகள் மெய்பட வேண்டும் என்றான் கவி

மெய்பட்டதா கனவு

இல்லை பொய்பட்டாத?

தினம் தினம் எத்தனை கனவு

அத்தனையும் பொய்யாய் போகுது!
என் தேசமே!!

நான் என்ன செய்வேன் ஏதுசெய்வேன்

வெந்தேன் எனை நானே நொந்தேன்

கனவு என்பது இடற்று பிழையால்

களவு என்பது ஆனது ஏனோ?
ஒழுக்கம் என்பது என் தேசத்தை விட்டு
போனது தானோ? ஏனோ?

மதவெறி இனவெறி பெருகியதிங்கே

மனு நெறிதான் போனது எங்கே?

காசை காணத் தெறியுது இங்கே

பாசம் நேசம் போனது எங்கே?

எதரி வந்தால் ஒற்றுமை காணுது

இல்லை என்றால் வேற்றுமை பேணுது

மாநிலம் முழுதும் சாதியில் வேற்றுமை

தேசம் முழுதும் இதில்தான் ஒற்றுமை

வேற்றுமை என்பது வார்த்தையில் இல்லை

ஒற்றுமை என்பது உள்ளத்தில்(உண்மையில்)இல்லை

எங்கோ போகுது தேசம்

இட்டுகட்டி போடுது பல வேசம்

தண்ணீர் கொடுக்க தரம்கெட்டு கிடக்குது

தாய்க்காவிரி அங்கே சிறைப்பட்டு கிடக்குது

உண்மயில் சொன்னால் வெட்க்கக்கேடு

என்று மறையும் இந்த சாபக்கேடு

விடிவு ஒருநாள் வருமா? என்றேன்

கனவுகள் மெய்பட வேண்டும்
என்றான் கவி