Wednesday, March 2, 2011

ஆசை...

சில்லென்று
தெறித்துவிழும்
மழைத்துளிகளில்
சடுதியில் இறங்கி

ஊன் கரைந்து
உருவழிந்து
மண்ணோடு மண்ணாக
கரைந்தோடி

செடியாகி
மரமாகி
பூவாகி
வாசம் தந்து

வாடி வதங்கி
மீண்டும்
மண்ணோடு
விழுந்து மக்கி

தூசாகி
துரும்பாகி
காற்றோடு
கலந்து பறந்து

நீர்மங்களில்
படிந்து
கனலோடு
எரிந்து
ஆவியாய் படர்ந்து

குளிரோடு உறைந்து
மேகமாய் மாறி
விண்ணோடு ஓடி
மலையோடு மோதி
மழையாக வேண்டும்

மீண்டும் மனிதனாய் மட்டும்
மாறிவிடாமல்.....

என்னதான் செய்யும் மலர்பஞ்சு...

அழகிய பாலகன்னவன்

பால்முகம்தான் மாறாதவன்

கண்களில் ஏனோ கண்ணீர்த்துளி

முகத்திலோ பயத்தின் வலி

ஏனோ அவனுள் ஏக்கம்

பயத்தினால் வந்த தாக்கம்

பலவந்தம்தான் படுத்தப்பட்டான்

பலம்கொண்டுதான் அழுத்தப்பட்டான்

வலியவரால் ஒடுக்கப்பட்டான்

இருப்புக்கரங்களால் அடக்கப்பட்டான்

என்னதான் செய்யும் மலர்பஞ்சு

பலமில்ல கரமோ வெறும்பிஞ்சு

சிறுக சிறுகதான் அறுக்கப்பட

இழக்க இழக்கதான் இறுக்கம் விட

உதடுகள்தான் சுருங்கியது

கண்களும்தான் அடங்கியது

அழுகையும் மறையத்தொடங்கியது

தேம்பலோ நிறையத்தொடங்கியது

அந்த முடித்திருத்தகமே மூழ்கியது சோகத்தில்

எனை ஈர்க்கும் மழையே!!!

சில்லென காற்று சிலிர்க்க

மெல்லென மேகம் துளிர்க்க

வில்லென வானம் விரிக்க

அம்பென மழைதான் தெறிக்க

முதல்துளி முகத்தில் விழ

பலதுளி நிலத்தில் விழ

எழும்பியது மண் வசம்

நிரம்பியது என் சுவாசம்

வாடை காற்று வீசும்

இயற்கை என்னோடு பேசும்

மெல்ல துளிகளை பெருக்கும்

அதுவந்து என்னை கரைக்கும்

மனதில் மகிழ்ச்சியை நிறைக்கும்

பூக்களும் என்னோடு தளிர்க்கும்

மதியின் நிலையோ இறக்கும்

மனமோ காற்றில் பறக்கும்

திசையோ முற்றும் திறக்கும்

இசையோ செவியை நிறைக்கும்

பறவைகள் விண்ணில் பறக்கும்

உடல்மட்டும் என்னில் இருக்கும்

என்மேல் துளிகள் கோர்க்கும்

என்னை தழுவி தீர்க்கும்

விண்மேல் கொண்டு சேர்க்கும்

தவிப்பில் எனை ஈர்க்கும் மழையே!!!!!!!!!!!!

என்னோட நெனப்பெல்லாம்...

ஆத்தங்கர ஓரத்துல பொழுதுசாயும் நேரத்துல

உனப்பத்தி பாட்டெழுத ஏட்டேடுத்த வேளையில

வார்த்த ஒன்னும் தோனல வாடும் பயிர் சாகல

உன் நெனப்போட போழுதுசாஞ்சு போச்சு

ராவெல்லாம் தூக்கம்போயி போழுதுவிடிஞ்சு போச்சு

கரம்பையில குயல்கூட காத்திருக்குது

ஆடும் மயில்தான்னு உனநெனச்சு பாத்திருக்குது

தரிசுநெலம் போலதான் நான் கெடன்தேன்

விரிசலெல்லாம் மறந்சுபோவும்னு நீ இருந்த

ஊதக்காத்து அடிக்குது ஒடம்புக்குள்ள தொலைக்குது

உன்ன நெனச்சுகிட்டா குளிருங்கொஞ்சம் அடங்குது

கருக்கலிலே காத்திருந்தேன் கம்மாகர ஓரமா

உன்ன பாக்கத்தானே நீ வரும் நேரமா

சோளக்கருது இன்கேயே பூத்திருக்குது

மஞ்சப்பூசி வரும் உன்னபாக்க காத்திருக்குது

ஆத்தா அடிச்சுகூட நான் அழுததில்ல

நீ எனபாத்து சிரிக்கலன்னு அழுதுபுட்டேன்

பச்சநெல்லெல்லாம் நாத்தா இங்கே நட்டாச்சு

என்னோட நெனப்பெல்லாம் உன்காலில் போட்டாச்சு

சுவாரசியமான சம்பவம்...

நேற்றிரவு ஒரு சுவாரசியமான சம்பவம் நண்பர்களே (அத நாங்க சொல்றோம் நீ கதைய சொல்லு டா),

மாலை 6:00 மணிக்கு அலுவலகம் முடிந்ததும் (வெட்டிமுரிக்குறாரு??) நேராக ரூமுக்கு சென்று குளித்து முடித்துவிட்டு (இத நம்பனுமா?) துணி மாற்றிக்கொண்டு சாப்பிட போனா(அதான),

மணி 6:40 ஆகிடுச்சு. சரின்னு சாப்டு முடிச்சுட்டு திரும்ப அறைக்கு போகலாம்னு திரும்பி போனே. அப்ப நம்ப பசங்க ரெண்டுபேரூ mobil ல பேசிகிட்டு இருந்தாங்க,

சரி அவங்கள தொந்தரவு பண்ண வேணாம்னு கொஞ்ச நடந்துபோய் திரும்பினா அங்க வழிஇல்ல, எப்டி இருக்கும் அதன் என்னோட ரூம் கதவாச்சே அதவும் பூட்டிவேற இருக்குது. சரி கதவ தொரக்கலாம்னு சாவிய தேடுனா பைல சாவிய காணும் ஒருநிமிஷம் பகீர்னு ஆகிடுச்சு,

எப்டியோ மனச தைரியபடுதிக்கிட்டு இனொரு பைல தேடுனா சாவி இருக்கு, அப்டியே கதவ மெல்ல தொரந்து உள்ள போய் மறுபடியும் கதவ சத்தமில்லாம பூட்டிட்டு லைட் ஆப் பண்ணிட்டு

அப்புறம் என்ன படுத்து தூங்கிட்டேன். போ போ போய் வேலைய பாருங்கப்பா!!!!!!!!!!!!!!! வெட்டி கத பேசிகிட்டு

எனக்காக ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம்...

அமைதி உறங்கிப்போன நகரம்

ஆரவாரம் மட்டுமே விழித்திருக்கும் நரகம்

வாழ்கையோ எந்திரமானது

பணம் மட்டும் உதிரமானது

நிற்கவும் நேரமில்லை

பார்க்கவும் நேரமில்லை

மனிதர்களை கூட

ஏன் இந்த ஓட்டம்?

ஏனோ இத்தனை வாட்டம்?

ஓடும் கூவத்தை விட

நம்மவர் சிந்தும் வியர்வை அதிகம்

பேருந்துகள் நடைபிணம் சுமக்கும்
வாகனமானது?

வாகனங்கலோ எமனாய் போனது

ஓ மனிதர்களே கடற்கரைக்கு

மட்டும் ஏன் ஆறுநாள் விடுமுறை

மரங்களை வெட்டிவிட்டு

மழைக்காக காத்திருப்பவர்களை
என்னவென்று சொல்வது,

மனங்களை விட்டுவிட்ட
பிணங்கலா நாம்?,

ஏன் இப்படி?
எங்கே ஓடுகிறோம்?

எத்தன் பின்னல் ஓடுகிறோம்?
எதற்காக ஓடுகிறோம்?

எத்தனை நாள் ஓடுகிறோம்?

ஒரு நிமிடம்,
ஒரே ஒரு நிமிடம்
யோசித்துபாருங்கள்

வழக்கை சுகமாகும்,
அமைதி வரமாகும்,
இன்பம் வசமாகும்,

எனக்காக ஒரு நிமிடம்
ஒரே ஒரு நிமிடம்.

தேதியை...

நேற்றைய தேதியை
மடித்துவைத்தேன்
பையோடு

நாளைய தேதியை
குறித்துவைத்தேன்
என் கையோடு

இன்றைய தேதியை
மறந்துவிட்டு

கருவை தேடி...

காற்றோடு பந்தயமிட்டு
அலைகிறேன்
மழையோடு மல்லுகட்டி
கரைகிறேன் மணல்போல்

இரவும் வந்தது
பகல் எங்கோ
படுக்கை விரித்து படுத்துவிட்டது
சிந்தனையோ சிறகு முளைத்து
பறக்கிறது
விண்மீன்களின் வழியோடி
நிலாவினை சென்றடைய

கடலைபோல் எழுத்தலைகள்
என்னுள் எழும்பி எழும்பி
விழுந்தாலும்
பாலைவனத்தில் மலர்தேடும்
வண்டுபோல் மனம் எதனையோ
தேடிக்கொண்டிருக்க

திக்கித் தவிக்கிறது என்
பேணாமுனை

வரி வரியாய் வார்த்தெடுக்க
வார்த்தைகள் உண்டு
எழுதிக்கொள்ள
எதுகை மோனையும் உண்டு

கருமட்டும் கிடைக்கவில்லை
கவிதை பாட.....