Friday, December 30, 2011

வலைதளங்களில் சிங்கள நரி(நாய்)களின் கைக்கூலிகள்


 சில நாட்களுக்கு முன் தமிழ்
நாட்டு எழுத்தாளர்களும் கலையுலக கலைங்கர்களும் ஈழத்தை வியாபார நோக்குடன் அணுகுவதை கண்டித்து ஈழ உறவு (பதிவர்) பலர் வலியுடன் பதிவிட்டனர். அதற்காக மன்னிப்பு கோரியும் வியாபார நோக்குடயவரை தவிர்த்து உண்மை உணர்வாளர்களும் அதில் அலட்சியப் படுத்துத்த பட்டுவிடக் கூடாதே என்னும் நோக்கில் நான் எனதருமை ஈழத்து உறவுகளேயென்று ஒரு பதிவிட்டேன்,

அதில் தவறு செய்தவர்களுக்காக நான் மன்னிப்பு கோரியும், அதே வேலையில் உண்மை உணர்வாளர்களை காயப்படுத்தி விட வேண்டாம்யென்று கேட்டிருன்தேன், ஆனால் அதே பதிவிற்கு சில புல்லுருவிகள் என்னை வெறுப்பேற்றி, என் எண்ணத்தினை பிறழ்வு செய்வதாய் நினைத்து பின்னூட்டம் போட்டனர் அனானிமஸ் பெயரில்.




 என்னே அவர்கள் வீரம், யார் இவர்கள்? ஈழம் பற்றி பேசினால் இவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது? நம்மை நோக்கி பின்னப்பட்ட சதிவலை இன்னும் இருக்கிறது யென்று சொன்னால் இவர்கள் ஏன் ஆதங்கப் படுகிறார்கள்? நான் புலிகளை மட்டும் ஆதரித்தோ, அல்லது போர் ஒன்றுதான் மீண்டும் வழி என்றோ பதிவிட்டிருந்தால் கூட இவற்றை பிடிக்காத யாராவது சிலர் எதிர்க்க காரணம் உண்டு, அப்படியே எதிர்த்தாலும் கூட அனாநிமசாய் வந்து வீரம் காட்டவேண்டிய அவசியம் இல்லை. அப்டி பட்ட இந்த மாவீரர்கள் ஏன் கோபப் படுகிறார்கள்?

 அப்டிஎன்றால் இவர்கள் யார்? தமிழ் ஈழ கட்டமைப்பை பற்றியோ அல்லது தமிழர் ஒற்றுமையை பற்றியோ இவை இல்லாமல் ஒருமைபாட்டை வெளிக்காட்டும் வகையான பொதுவான, தமிழர் அல்லது ஈழத்தமிழர் என்று சொன்னாலோ இவர்களுக்கு இவ்வளவு கோபம் வரவேண்டிய அடிப்படைக் காரணம் என்ன?




 இவர்கள் இடும் பின்னூட்டம் எல்லாம் பிரிவினையை தோற்றுவிக்க வேண்டும் என்ற நோக்கிலோ அல்லது இணைய ஊடகத்தில் தமிழ் ஈழ கட்டமைப்பை, ஈழமக்களின் நம்பிக்கையின் ஒற்றுமையை குலைக்கும் நோக்கிலோ இருப்பதாய் தோன்றுகிறது.

 இதுபோன்ற கயவர்களின் கைகரியமே நமக்கெதிராய் பின்னப்பட்ட சதி வலை கண்ணுக்குத் தெரியாத இழையினூடாய் இருப்பது புலப்படுகிறதே. இவர்கள்தான் அந்த சதிவலையின் சிலந்திக் குட்டிகள். அதில் சிக்குபவரை சின்னாபின்னப் படுத்துவதும், வலை எங்கேனும் பலமிழந்தால் அதை பலப் படுத்துவதுமே இந்த குட்டி சிலந்திகளின் தலையாய வேலை.


 இதற்கான தலைமை கைக்கூலியாய் இருக்கும் தின்று கொழுத்த விசசிலந்திகள் இலங்கையிலோ, மேற்கத்திய நாடுகளிலோ ஏன் தமிழ்நாட்டிலோ கூட இருக்கலாம், அனால் எங்கு இருந்துகொண்டு என்ன சதி செயல்கள் செய்தாலும் அநியாயம் என்றுமே வென்றதில்லை.

 தமிழனின் நம்பிக்கையே நீதியும், நியாயமும் என்றைக்கும் சாவதில்லை என்பதுதான். அப்படி பட்ட நீதியும் நியாயமும் அவனுக்கு கிடைக்காமல் போய்விடுமா என்ன? உங்களால் முடிந்தவரை எவ்வளவு வஞ்சகமும் நரித்தனமும் செய்ய முடியுமோ செய்துபாருங்கள். ஆனால் ஒன்றுமட்டும் சொல்லிவிடுகிறேன் காலம் இப்படி போகாது, நிச்சயம் மாறும் விடிவு ஓர்நாள் வந்தே தீரும். அன்று இந்த சிலந்திகள் இருக்கும் இடம், தடம் தெரியாமல் போகும்.                                            

 

Thursday, December 29, 2011

கண்ணீரை விலைக்கொடு...


ஆசைகளால் அடுக்கப்பட்ட
வாழ்க்கையிது

முறிக்கப்படும் பொழுதோ!

பறிக்கப்படும் பொழுதோ!
துன்பம் தலைவிரித்தாடும்
துக்கம் தொண்டையடைக்கும்

கனவுகள் கசக்கப்பட்டு

காகிதமாய் குப்பையில்
வீசப்படும்

துயரம் உன்னைத் துரத்தும்

எதுவுமே! எவருமே வேண்டாம்
என்ற எண்ணம் ஊற்றெடுக்கும்

மெய்ஞானம் மெல்ல விடைகொடுப்பதுபோல்

நன்கு நடிக்கும்
சித்தாந்தம் சில நேரம்
தலைகாட்டிச் சிரித்துவிட்டு
சிதறிவிடும்

நமக்காக ஒருவருமில்லை

என்கிற எண்ணம் எழுந்து
மேலே நிற்கும்

அறுபட்ட காத்தாடியாய்

மனம் அலைக்கழிக்கும்
ஆழிப்பேரலையாய்
அத்திரம் ஆர்ப்பரிக்கும்

துள்ளியெழுந்து மேலும்

துயரப்பட்டுவிடாதே

கண்ணீரில் கண்களைக்

கழுவிவிடு சிவந்து போகட்டும்
நாவு வறண்டு போகட்டும்

கண்ணீரை விலைக்கொடுத்து

அமைதியை வாங்கு

ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும்

ஆயிரம் ஆயிரம் நம்பிக்கையை
உருவாக்கும்...

Wednesday, December 28, 2011

தன்னையே அழித்துக்கொள்ளும் தமிழினம்


 ஒவ்வொரு இனத்திற்கும் பலவிதமான குறைபாடுகள் உண்டு. அதில் சில அவற்றிற்கு பெருமளவில் பாதிப்பை உண்டாக்குவதில்லை. ஆனால் சில இனங்களின் பலவீங்களாக இருக்கும் சிறு சிறு குறைபாடுகள் அந்த இனத்தையை அழிக்கும் நிலைக்கு தள்ளிச் செல்கிறது. அது புரியாமல் இன்னும் அதே பலவீன
ங்களை கட்டிக்கொண்டு அழும் பாழாய் போன இனங்களில் இப்பொழுது தமிழினமும் இணைந்துவிட்டதோ? என்று நினைக்கத் தோன்றுகிறது.

 சாதியம் - ஆலமரத்தை அடியோடு சாய்க்கும் ஆணிவேர் வியாதியாய், தமிழினம் தன் அருமை பெருமைகளை இழந்து, ஒற்றுமை இல்லாமல் ஒவ்வொரு கிளை ஒடிந்து விழுவதைப் போல சிறுகச் சிறுகச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.

 ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பிரச்சனைக்காக ஒரு போராட்டம் நடக்கிறது, அது ஐந்து மாவட்ட மக்களின் வாழ்க்கை கேள்விக் குறியாவதால் அந்தப் போராட்டம், அதில் தலைமையாய் இருக்கும் இருவர் இரண்டு குறிப்பிட்ட
சாதியினர் (நன்றாக படியுங்கள் - இருவரும் வேறு வேறு சாதி)  இருப்பதால் இது மூன்றாவது சாதியினருக்கு எதிரான போராட்டம் என்று புறந்தள்ளுகிறது ஒரு கும்பல் சாதி என்னும் பெயரால். பாதிக்கப் படப் போகும் அந்த ஐந்து மாவட்டத்தில் உன் சாதி  என்று சொல்லிக்கொள்ளும் குடும்பம் ஒன்றாவது இருக்காதா என்ன?

 தாழ்ந்த வகுப்பை சார்ந்த ஒரு தலைவன் ஈழமக்களுக்காக போராட்டம் நடத்தினால் பிற சாதியின் பெயரால் இருக்கும் கும்பல் அதை அந்த தலைவனின் பெயரால் அல்ல அந்த தலைவரின் சாதியின் பெயரால் புறக்கணிக்கிறது.

 அப்படி பார்த்தால் கூட தமிழன் எவன் ஒருவன் தலைவனாய் இருந்தாலும் அவன் எதாவது ஒரு சாதியை சேர்ந்தவனாய்த்தானே இருக்க வேண்டும்?. அதனால்தான் பலநாளாய் தமிழ நாட்டிற்கும் ஒரு தமிழன் தலைவனாய் இல்லையோ?



மதம் - சாதியம் தாண்டினால் மதம், மதம்.. மதம்...
மதம்.. எப்படி இந்த சாதியப்பேய் தமிழனை கிறுக்கனாக்குகிறதோ, அதேபோல் இந்த மதம் அவனை மதம் பிடிக்கச் செய்கிறது.

 கிறுக்கன் என்றாலே தாங்கமுடியாது, அதிலும் மதம் பிடித்த கிறுக்கன் என்றால் நினைத்துப் பாருங்கள். அப்படித்தான் இருக்கிறான் இன்றைய தமிழன்.

 ஆயிரம் மக்களின் போராட்டம், அணுஉலை வேண்டாம் என்று, அந்தப் போராட்டத்தை உடைக்க எதிரி எடுக்கிற முதல் ஆயுதம், இந்த மதம் தான். இம்முறை அது செயலிழந்து போயிருந்தாலும், கர்ணம் தப்பினால் மரணம் என்பது போலத்தான். இங்கு நான் சொல்லவந்தது எதிரிக்கு வேண்டிய ஆயுதத்தை நாமே அவனுக்கு கொடுக்கிறோம் என்பதைத்தான்.

பொறமை - இது செல்லரிக்கும் புற்றுநோயைப்போல ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் அவனை அறியாமல் வளர்த்துக் கொள்வது. இது இப்பொழுது தமிழனிடம் அதிகமாகவே உள்ளது. நம் அண்டை மாநிலத்தவரை அப்படி இப்படி ஏளனம் செய்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை பார்த்து ஏளனம் செய்வது ஒன்றே ஒன்றுதான், இந்த பொறாமையினால் வரும் ஒற்றுமையின்மையைத்தான்.

 உண்மையில் உங்களுக்கு அனுபவம் வேண்டுமானால் வெளிநாடுகளில் சென்று பணிசெய்து பாருங்கள். நான் சொல்வது உண்மையா? இல்லையா? என்று தெரியும்.

 எவன் எப்படி வளர்ந்தாலும் பரவயில்லை, தன்னோடு இருக்கும் தமிழன் வளரக்கூடாது  என்று ஒவ்வொரு தமிழனுக்கும் எண்ணம் எப்படித்தான் வருகிறதோ தெரியவில்லை? ஆனால் அவர்களோ உள்ளுக்குள் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும், நம் இனத்தானைத் தவிர வேறு ஒருவன் வந்துவிடக் கூடாது என்றுதான் நினைக்கிறான். அதனால்தான் அவன் ஆள்கிறான், நாம் அடிமைப் பட்டு அழுகிறோம்.






காட்டிக்கொடுக்க ஒரு கூட்டம், அதற்க்கு காரணம்கற்பிக்க ஒரு கூட்டம், பிரபாகரன் அவர்களை கைகாட்டும் இவர்கள், அல்பர்ட் துரையப்பா, கதிர்காமர், டக்லஸ் தேவானந்தா, மாத்தையா, கருணா போன்றோரை ஒன்றும் சொல்வதில்லை ஏன்? இவர்கள் இல்லாவிட்டால் பிரபாகரன் உருவாகியிருக்கவும் மாட்டார், இன்று கண்மறைந்திருக்கவும் மாட்டார். ஆனால் இந்த மக்கள் அழிவு மட்டும் கணடிப்பாக நடந்திருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக.

இந்தமாதரியான கோடரிக்காம்புகள் எண்ணங்களிலும் செயலகளிலும் உருவாவதேன்? 

 இப்படி பல.... தடைகளை தன் வாழ்வியல் ஆதாரமாய் கொண்டு வாழும் இன்றையத் தமிழன் இன்னும் எத்தனைத் தலைமுறைக்கு தாக்குப் பிடிப்பான்???????????          


பி.கு. என்னை திட்ட நினைப்போர் திட்டலாம், தாராளமாய்

எதிரிகளும், துரோகிகளும் உன்னை தூற்றினால் நீ செல்லும் பாதை சரியான பாதை - தந்தை பெரியார் 

Tuesday, December 27, 2011

ஓ..... இந்தியன் என்போரே, ஆர்ப்பரிக்கும் தமிழ்நாடு பாரிர்


ஒவ்வொருவன் உயிருக்குள்ளும் ஒரு உணர்விருக்கிறது. உணர்வு என்றால் என்ன என்றும் கிலோ எவ்வளவு? எங்கு கிடைக்கும்? என்று கேட்பவர்கள் எத்தனையோ பேர்.

 இருப்பினும் தமிழன் தன் உணர்வை இன்னும் இழந்துவிடவில்லை, அது அழிந்தும் விடவில்லை என்பதை நிருபித்துக் கொண்டிருக்கிறான். ஈழம் முதல் இமையம் வரை தமிழனுக்கு பிரச்சனை. காரணம் தன்மானம், சுயகவுரவம், தனக்கென்று தனி அடையாளம், பெருமைகள், திறமைகள் என்று இருப்பதும், இவை இல்லாமல் அண்டிப் பிழைக்கும் சிலருக்கு அல்ல பலருக்கு இது கண்ணை உறுத்துவதே காரணம்.

 தரணியில் தனித்தன்மையாய் விளங்குபவனே தமிழன். இதுபோன்ற தன்மைகளை எதுவும் இல்லாதவர்கள் கையில் இன்று அதிகாரம், ஆணவச் செருக்குடன் இருப்பதால், அவர்கள் அடிவாரத்தை ஆட்டிப் பார்க்கிறார்கள்.

 இதுவரை வந்தவனையெல்லாம் வாழவைத்து, வாழ்ந்தவனையெல்லாம் நல்லவன் என்று நம்பியே இருந்த காரணத்தால், இன்று இவனுக்கு வாழ்வாதாரம் அழிந்துபோகும் நிலை உள்ளது. கண்டவன் நாட்டை ஆண்டு, இன்று நம்மை பிறரிடம் கையேந்தும் நிலைக்கு விட்டுவிட்டார்கள்.

 மாநில எல்லை பிரிக்கும்போதும், வாக்குறுதிகள் பெறப்பட்ட போதும் தலைமையில் இருந்தவர்கள் ஏனோ தானோ என்றே இருந்திருக்கிறார்கள், அதனை நாம் உணராததன் விளைவு, ஈழம் மட்டும் அல்ல தமிழ்நாட்டிற்கே அழிவுகாட்ட நினைக்கிறார்கள். இத்தனை பிரச்சனைகளுக்கும் முக்கிய நோக்கம் தமிழன் தலையெடுக்க கூடாதென்றும் அப்படி  ஓர் இனமே இருந்ததன் அடையாளம் இருக்கக் கூடாதென்று இருப்பதாய் புரிகிறது.



 ஈழப் பிரச்சனைக்கும், கூடங்குளப் பிரச்சனைக்கும் இந்தியன் நான் இந்தியன் என்று வரிந்துகட்டிக் கொண்டு வந்தோரெல்லாம் இபோழுது எங்கே சென்றார் என்று தெரியவில்லை. இதோ பாருங்கள், இந்தியன் என்று பெருமைபேசி தமிழன் உணர்வுக்கு அணைபோட்டவர்களே பாருங்கள் "தமிழனின் உயிர் அணை" இன்று இல்லாமல் போகும் நிலை, இதற்க்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

 இந்தியனாய் இருந்து ஈழத்திற்கு ஒன்றும் செய்ய  முடியவில்லை?, இந்தியனாய் இருந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை?, பத்தாயிரம் கோடிக்குமேல் செலவுசெய்து ஆரம்பித்த சேது சமுத்திர திட்டம் முடிக்க இயலவில்லை?, காவிரியில் தண்ணீர்கொண்டு வரமுடியவில்லை?, இப்பொழுது வெடித்திருக்கிறது முல்லைபெரியறு அதனை அணைக்க முடியவில்லை? 

              

 ஐந்து மாவட்டங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி, பல்லாயிரம் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக் குறி? இத்தனைக் கேள்விக் குறிகளை எப்பொழுது நிமிர்த்தி அச்சரியக் குறிகளாக்கப்போகிறோம்?                             

 இன்னும் இந்த இறையாண்மை ஒற்றுமை என்று பேசிப் பயனில்லை என்று ஆர்ப்பரிக்கிறது தமிழகம். எங்கு திரும்பினும் போராட்டம், மக்கள் வெள்ளம், இத்தனை மக்களுக்கு இருக்கும் உணர்வு போதும், இதுவரை இல்லாத இந்த எழுச்சிபோதும், தமிழனின் தலையெழுத்தை மாற்றியமைப்போம்,

 ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்
 காவிரி பிரச்சனை போராட்டம்
 ஒக்கேனைக்க
ல் குடிநீர்த் திட்டப் போராட்டம் 
தமிழ் ஈழமக்களுக்கான போராட்டம்      
 தமிழக மீனவர்களுக்கான போராட்டம்
 மூவர் தூக்கிற்கு எதிரான போராட்டம்
 கூடன்குள அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டம்
 முல்லைபெரியாறு போராட்டம்

இன்னும் எத்தனை போராட்டம் நடத்த வேண்டும், தமிழன் தனது உரிமையை காக்க இத்தனைப் போராட்டமா? இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்காவது இத்தனை பிரச்சனை உண்டா? எல்லாவற்றிலும் போராட்டம் நடத்தவேண்டிய நிலைமையில் தமிழன் மட்டுமே இருக்கிறான் ஏன்?  



 யார் உணர்ந்தாலும் உணராவிட்டாலும் தமிழன் உணர்ந்துவிட்டான் என்பது உண்மை, உணர்ந்தவன் மட்டுமே உண்மைத் தமிழன், இனி தமிழருக்கு எதிராய் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும், விளைவுகள் விளைந்ததே தீரும். அகிம்சையில் நடக்கும் இப்போராட்டங்கள் அவமதிக்கப்பட்டால் விளைவுகள் வேறுவழியில் வெளிப்படும்.

 ஒன்று மாநில எல்லை மறுஆய்வு நடத்த வேண்டி வரும் இல்லை என்றால் தனி நாட்டிற்க்கான எல்லை பற்றிய ஆய்வு நிறைவேற்ற வேண்டி வரும். எதற்கும் ஓர் எல்லை உண்டு, என்பதை நிருபிக்க வேண்டியும் வரும்.  



 ஓ........... இந்தியன் என்போரே, ஆர்ப்பரிக்கும் தமிழ்நாடு பாரிர்
தன்னை உணர்ந்துகொண்ட தமிழனைப் பாரிர்
வாழ்வாதாரம் காக்க போராடும் தன்மான மக்களின் அடையாளம் பாரிர்
உரிமையை நிலைநாட்ட உணர்ச்சிபொங்கி ஓரணியில் திரளும் எம்மக்களை பாரிர்
இனியும் இந்தியன் என்ற முகமூடி எதற்கு உமக்கு
உண்மைத்தமிழனாய் இரு ஆயிரம் இந்தியாவை நாம உருவாக்கலாம்.




Friday, December 23, 2011

முல்லைப் பெரியாறு அணையைக் காக்க சென்னைக்கு வாங்க... ~ வேடந்தாங்கல்

முல்லைப் பெரியாறு அணையைக் காக்க சென்னைக்கு வாங்க... ~ வேடந்தாங்கல்

பயணம் மட்டும் தொடரும்...


பாய்ந்தோடிய நீர்மத்தின்
நுண்மமாயிருன்தே
மற்றவைக்கு அறுதியிட்டு
போட்டியிட்டு
எல்லையோடி
எழும்பிவந்து
உயிர்ப்படைந்து
பிண்டமாகி
இருப்புக்கொண்டேன்
இருட்டினில்

காலம்

இழுத்துத் தள்ளியது
கண்ணீரில் கரைந்து
தொடர்ந்த பயணம்
இன்றும் தொடர
நானறியேன்
இலக்கு எதுவோ?

நிச்சயம் ஆகுவேன்

மீண்டும்
நீர்மமாகவோ
துகளாகவோ
காற்றாகவோ
கனலாகவோ
பயணம் மட்டும் தொடரும்...

Thursday, December 22, 2011

போகிறபோக்கில்


அருவி நீர்ப்போல் உன்னருகில் வருவது காதலுக்காக

ஒரு துருவ காந்தம்போல் நீ விலகிபோவது எதற்காக????


---------------------------------------------------------------------------------------------------------------------------

நெருப்பையும் உறிஞ்சும்
நீரையும் உறிஞ்சும்
உயிரையும் உறிஞ்சும்

சிகரெட்
 

----------------------------------------------------------------------------------------------------------------------------

ஒன்று இரண்டு மூன்று நன்கு ஐந்து ஆறு
ஒன்று இரண்டு மூன்று நன்கு ஐந்து ஆறு
..........................................
.......................

இப்படிக்கு கைதி
 

------------------------------------------------------------------------------------------------------------------------------

பாதளம் வரை வேண்டாம்
என் வீட்டு பீரோ வரை
போதும்
 

-------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் அடிக்கடி
பயன்படுத்தும் பொய்

"நான் நலம்"
 

-------------------------------------------------------------------------------------------------------------------------------

 ரசம் மங்கிய கண்ணாடியிலும்
அழகாய் தெரிகிறது உன் முகம்


--------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜனவரி மாதம்
எனக்கும் அவளுக்கும் திருமணம்

எனக்கு மதுரையில்
அவளுக்கு சென்னையில்
 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கனச்சதுரமாக இருந்தாலும்
கனச்செவ்வகமாக இருந்தாலும்
கனஉருளையாக இருந்தாலும்

அது குண்டுதான்
வெடிகுண்டு கலாச்சாரத்தில்
 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆசைகள் அனைத்தும் அச்சுப் பிசகாமல்
அரங்கேற்றிக்கொள்ளும் தருணம்
கனவு காணும் தருணம் மட்டுமே


--------------------------------------------------------------------------------------------------------------

இன்று முர்ச்செடிகளாய் என்னுள்
அன்று நீ விதைத்துபோன
காதல் நினைவு விதைகள்


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் இழக்கும் தருணத்தை
நொடித்துக்காட்டும் உண்மை இயந்திரம்
இயங்கிக்கொண்டிருக்கும் என் கடிகாரம் 


----------------------------------------------------------------------------------------------------------------------------------

முற்றுப்பெறாத தேவைகள்
தேவைகளின் தேடல்கள்
கலந்த பிணைப்பின் தொகுப்பே
வாழ்க்கை


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

திறமைக்கு பணம் தரப்பட்டது அன்று
பணத்திற்காக திறமை வளர்க்கப் படுகிறது இன்று


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

பாவம் மட்டுமே செய்யுங்கள்
அப்பொழுதும் இறைவனை அடையலாம்


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கடவுளும் மிருகமும் கலந்திருப்பதை விட
மிருகமாய் மட்டுமே இருப்பது மேல்


------------------------------------------------------------------------------------------------------------------------------------

அடிமைகளை விட
அனாதைகள் சிறந்தவர்கள்
 
 
 

Tuesday, December 20, 2011

உயிரம்புகள்...


ஒவ்வொரு முறையும் தாக்கப்படுகிறேன்

மிகமிகச் சரியாக மிகத்துல்லியமாக


தாக்கப்படும் ஒவ்வொருமுறையும்


வீழ்ச்சி காண்கிறேன் ரம்மியமாக


தாக்கிய அம்புகுவியல் மேல் நின்று


எண்ண முயல்கிறேன் அம்புகளை அல்ல


வீழ்ச்சிகளை மட்டும் தான்


சில அம்புகள் நீளமானவை


சில அம்புகள் அகலமானவை


சில கூரானவை, பல நேரானவை


மழுங்கியது சில, ஒடிந்தது சில


குருதிக்கரையுடன் சில அம்புகள்


பலரை தாக்கிய அடையாளம் தாங்கி


இவையணைத்தும் என்னைத் தாக்கிய


உயிரம்புகளே
...

 

Sunday, December 18, 2011

காகிதம்...













வெண்மையாய் இருந்த வெற்றுக் காகிதம்

ஆணிகளால் அரையப் பட்டிருந்தாலும்


அமைதி காத்தது அழகாகவே


தூரிகை துவலத்துவல நிறமேறியது


பச்சை வர்ணம் பளிச்சிட்டது


சிவப்பு வர்ணம் ஆங்காங்கே சிதறியது


நீல வர்ணம் நீண்டது


மஞ்சள் வர்ணம் மருகியது


கருப்பு வர்ணம் கனமின்றி பெருகியது


அங்கும் இங்கும் வர்ணக்கலவை


பெயரிட இயலா புதுப்புது வர்ணம்


காகிதத்தை காதலன் போல்


தொட்டு முடித்தது தூரிகை


அழகாய்த்தான் இருந்தது ஓவியம்


தனித்தன்மை இழந்தது காகிதம்


 

Saturday, December 17, 2011

எனதருமை ஈழத்து உறவுகளே...

 
சமீபமாக வலைத்தளங்களில் பல பதிவுகளை காண்கிறேன். உணர்வின் மேல் எழுச்சியால், தொலைத்து விட்டோமே, இழந்துவிட்டோமே என்னும் உணர்வால் பலர் எழுதும் பாடல்களும், பதிவுகளும் உங்களை காயப்படுத்துவதை நன்கு உணர்கிறேன்.

 ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சிலர் எழுத்துக்களால் உங்களுக்கு ஏற்ப்பட்ட வலிக்கு நான் மன்னிப்பு கோருகிறேன். அதே நேரம் இவர்களை போன்றவர்களால் இன்று உண்மை உணர்வோடு போராடுபவர்களும்  எழுதுபவர்களும், அவர்களின் உணர்வுகளும் உதாசீனப் படுவதையும் நான் எடுத்துரைக்க விரும்புகிறேன்.





 ஈழத்தில் போர்தான் முடிந்திருக்கிறதே தவிர நம்மை அழிக்க பின்னப்பட்ட சதிவலை இன்னும் வலிமையாகவே இருக்கிறது என்பதை உணரவேண்டிய கட்டாயத்தில் இன்று ஒவ்வொரு தமிழனும் இருக்கிறான். அதன் எதிரொலிதான் தமிழகத்திலும் இன்று ஒலிக்கிறது.

 இன்று நாம் வாங்கியிருக்கும் வலிகள், அடைந்திருக்கும் துன்பம் கொஞ்சம் நிஞ்சமல்ல, அதை சொல்லியும் மாலாது. வாழ வழியில்லை அகிமசையில் என்று போராடினோம், அடுக்குமுறையும் அழிப்பும் அதிகரிக்கவே ஆயுதம் ஏந்தினோம், அதிலும் அடிவாங்கி இன்று கேட்க நாதியின்றி அனாதையாய் முல்வேளிக்குள் முடங்கிக் கிடக்கிறோம்.



 உரிமை கேட்டுத்தான் போராடினோமே ஒழிய பெருமைக்கோ அல்லது பேராசைக்கோ அல்ல, அடிமை வாழ்வு வேண்டாம் என்றுதானே போராடினோம் இன்று வீழ்ந்திருக்கிறோம் வலிகான்கிறோம், ஆனால் நாம் வலிமையாய்  இருந்தகாலத்தில் காட்டிய ஒற்றுமையை விட, இப்பொழுது ஒற்றுமையையுடன் இருக்கவேண்டியது மிக மிக அவசியம். வேற்றுமை கண்டு, வேற்றுமை கண்டு நாம் இழந்தது உயிர்களை நம் சொந்தங்களை.


 ஆயதப் போராட்டம் அடங்கி இருக்கிறதே தவிர நமது போராட்டம் இன்னும் ஒடுங்கவில்லை. காலத்தின் மற்றம் தமிழ்நாடுகூட இதே சூழ்நிலை சந்திக்கலாம். அதனால் இனி தமிழர்களிடம் வேறுபாடு இருக்க வேண்டாம், ஈழத்தமிழன், தமிழ்நாட்டு தமிழன், புலம்பெயந்த தமிழன் என்று எவ்வித பாகுபாடும் சொன்னாலும் நாம் அனைவரும் தமிழர்களே என்று மனதில் கொள்வோம்.

 காலம் மாறும் நிச்சயம் நமக்கு ஓர்நாள் விடிவு வரும், அது ஆயதப் போராட்டமாய்த்தான் இருக்கவேண்டிய அவசியம் இல்லை, ஆனால் தமிழனுக்கு என்று தனிநாடு அமைத்து சுதந்திரமாய் வாழத்தொடங்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்று உறுதிகொள்வோம்.

  நம் மக்களின் இழப்பின் வலியை இன்று தமிழகத்தில் பலர் உணர்ந்திருப்பதையும், அதனால் தமிழ்நாட்டு மக்கள் பலர் எண்ணத்தில் எழுச்சி கண்டிருப்பதையும் காண முடிகிறது. இன ஒற்றுமையின் வலிமையையும், அதன் சிந்தனையும் மீண்டும் தமிழர்களிடம் அதீத வளர்ச்சி அடைந்திருப்பதை உணரமுடிகிறது.

 நம்மை அழிக்க பின்னப்பட்ட வலை உடையும் வரை பொருத்திருப்போம், காலம் கனியும் வரை காத்திருப்போம். அதுவரை நாம் ஒற்றுமையாய் இருக்கவேண்டியது அவசியம், காயப் படுத்துப் படி எழுதுவோரையோ, உணர்வை வைத்து அரசியல் செய்பவரையோ அல்லது ஈழத்தை சொல்லி பிழைப்பு நடத்தும் கயவரையோ கண்டுகொள்ள வேண்டாம்.

 நம்மால் முடிந்தவரை பாதிக்கப்பட்டோருக்கு உதவோம், ஆறுதல் சொல்வோம், அதேநேரம் நம்பிக்கை இழக்காமல் போராடுவோம். எதிரி நம்மை அழிப்பது சூழ்ச்சி, நமக்கு நாமே ஒற்றுமை இழந்து நம்மை அழித்துக் கொள்வது முட்டாள் தனம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பட்டுவிட்டோம், இனியும் இதுபோன்ற சில்லறை பரதேசிகள் செய்யும் ஈனபிறவிகளின் செய்களை கண்டுகொள்ளாமலும், உணர்ச்சிவசப் படாமலும் நாம் நமது இல
ட்சியத்தை நோக்கி பயணிப்போம்.

 பாதைகள் மாறலாம்,
இலக்குகள் மாறலாம்,
லட்சியமும் அதற்காக கொண்ட உறுதியும் என்றும் மாறக் கூடாது.                                                            

Thursday, December 15, 2011

அது மட்டுமே...


அது
அதுவாய் இருக்கிறது


அனைத்தும் அதற்க்குள்ளே
அனைத்தும் அதனாலே


அனைத்தும் அதற்கே
அதுவே அனைத்தும்


அதுவே ஆக்கம்
அதுவே ஆக்கும்
அதுவே அழிக்கும்


அதுவே மாறும்
அதுவே மாற்றும்

அதுவே நிலைக்கும்

அது நமக்கு நன்மை
அதுவே நமக்கு தீமை


அதுவே நமக்கு நேர்மறை
அதுவே நமக்கு எதிர்மறை
அதற்கு அல்ல நன்மை தீமை
அதற்கு அல்ல நேர்மறை எதிர்மறை


நாமும் அதாலே
நாமும் அதனுள்ளே
நாமும் அதுவாய்
அதுவாய் நாமும்


அது மட்டுமே உண்மை

Tuesday, December 13, 2011

மாவீரன் செண்பகராமன்







இந்திய சுதந்திரப் போராட்டம் என்றால் நமக்கு வெகுசிலரை தவிர வேறு யாரும் நினைவுக்கு வருவதில்லை, இதுகூடப் பரவாயில்லை, பலரை யாரென்றே பலருக்கு தெரியவில்லை என்றால் அதுவும் சுபாஷ் சந்திரபோசுக்கு இணையானவர் ஒருவரை பற்றி தெரியாமல் போனதும் அதிலும் அவரர் ஒரு தமிழர் என்பது தெரிந்துகொண்டபின்பு எனக்கு அழுவதா இல்லை சிரிப்பதா என்றே தெரியவில்லை.

அந்த மாவீரனின் பெயர் "செண்பகராமன்"

இவரை "ஜெய்ஹிந்த் செண்பகராமன்" என்றும் அழைப்பார்கள். முதமுதலில் ஜெய் ஹிந்த் என்று முழங்கியவர் இவரே என்னும் காரணத்தால் இப்பெயர் பெற்றார் என்று சொல்லப் படுகிறது

உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோர வைத்தார் அதுவும் எழுத்து வடிவமாக என்பதை அறியும்பொழுது நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் இயலவில்லை.

இதைவிட இன்னும் சுவாரசியம் எம்டன் என்று நாம் சொல்லும், ஹம்டன் கப்பல் சென்னையை தாக்கியபோது அதன் உதவி பொறியாளராக இருந்தவரும் இந்த செண்பகராமன் என்றால் ஆச்சர்யத்தில் மூழ்கிப்போனேன்.

இன்றைய செய்தி நாளிதழ் ஒன்றில் மாவீரன் செண்பகராமன் பற்றிய வரலாற்றை பாடத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை செய்தி வெளியானதை படித்தேன்.



இப்படிப்பட்ட மாவீரனை பற்றிய ஒரு புத்தகம்

யோகா பாலச்சந்திரன் என்னும் ஈழத்து பெண் எழுத்தாளர் வெகு ஆண்டுகளுக்கு முன் எழுதிய "மாவீரன் செண்பகராமன்" புத்தகம் சமீபத்தில் கிடைக்கநேர்ந்தது

படித்த பிறகுதான் தெரிந்தது நாம் எவ்வளவு பெரிய வரலாற்றை இழந்திருக்கிறோம், என்னும் எவ்வளவு மறைக்கப் பட்டுள்ளதோ? என்று எதிர்மறை எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

"போதிதர்மரை" மறந்ததாவது ஒரு கணக்கில் கொள்ளலாம், 1500 வருடங்கள் என்பதால், ஆனால் "செண்பகராமன் வரலாறு" 18-19 ஆம் நூற்றண்டுதானே, இவரை எப்படி மறந்தோம் என்றும் தான் எனக்கு தெரியவில்லை? உண்மையில் தமிழன் எங்கு சென்றுகொண்டிருக்கிறான் என்பதை நினைக்கும்போது வெக்கப் படுவதை தவிர வேறு எதுவும் தோன்ற வில்லை.

 இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

http://www.noolaham.org/wiki/index.php?title=மாவீரன்_செண்பகராமன்

Saturday, December 10, 2011

அரசியல் நயவஞ்சகம்...

 அரசியல் என்னும் வார்த்தையில் ஒளிந்திருக்கும் மறைபொருள் நயவஞ்சகமே. அதிகார வர்கத்தின் அடக்குமுறையும், ஜனநாயம் என்னும் போலி முகமூடியில் ஏமாற்று, பித்தலாட்ட, ஆதிக்க வெறியே மிஞ்சுகிறது.

 காங்கிரசு சென்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்து இலவசங்களி வாரி வழங்கியதன் உள்நோக்கம். தமிழ்ஈழ அழிப்பு. தமிழகத்துக்கு இலவசங்களையும், இலங்கைக்கு ராணுவ உதவிகளையும் வாரி வழங்கி கொன்றொழித்தது தமிழ் இனத்தை.

 கூடங்குளத்தை எதிர்த்து நாம் போராட, திரு. அப்துல் கலாமை ஆயுதமாய் பயன்படுத்தியதோடு இல்லாமல், மதவாதம், வெளிநாட்டு சதி என்று பலவாறு திரிக்க முயல்கிறது.

 கேரளாவில் தனது ஆட்சி என்பதால் முல்லை பெரியாறு பிரச்னையை தூண்டி தமிழக கேரள மக்களிடையே விரோதத்தை வளர்க்கவும், கூடங்குள பிரச்சனையையும், இதையும் ஒப்பிட்டு ஏமாற்றவும், கேரள அரசியல் வாதிகளை தூண்டிவிட்டு அமைதி காக்கிறது.

 இதனுடன் கூட்டணி வைத்திருக்கும்  தி.மு.க, கனிமொழி ஜாமீனில் வெளி வரும் வரை வெறும் அறிக்கையை விட்டு விட்டு ஜாமீன் கிடைத்தவுடன் போராட்டம் என்று அறிவித்ததோடு மட்டும் இல்லாமல், காங்கிரசுடன் கூட்டணி பாதிப்பில்லை என்று வேறு சொல்லிக் கொள்கிறது. மக்களுக்கு எதிராக செயல்படும் கட்சியுடன் என்ன கூட்டணி வேண்டி இருக்கு, இது யாரை ஏமாற்றும் நாடகம்?

2G அலைக்கற்றை ஊழலில் பா.சிதம்பரம் சம்பத்தப் பட்டுள்ளதாக பிரச்சனை எழுந்துள்ள போதும், இன்னும் மொவுனம் காப்பது எதனால்? கூட்டணிக் கட்சியின் ராஜா, கனிமொழி மட்டும் கைது செய்யப் பட்டு சிதம்பரம் பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்? இது யாரை முட்டாளாக நினைக்கும் வேளை?

இவ்வளவு நயவஞ்சகமான செயல்கள் செய்து ஆட்சியை காப்பாற்றி இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? மக்களுக்கு நல்லது செய்யவா? இல்லை இன்னும் கொள்ளையடிக்கவா?

இது எதிர்த்து பிஜேபி குரல் கொடுத்தாலும், இந்த செயல்கள் அவர்களுக்கும் பொருந்தும்.

 என்னதான் தினமலர் முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழர்களுக்கு சாதகமாய் எழுதினாலும், கூடங்குலப் பிரச்சனையைப் பற்றி எழுதி தமிழ் மக்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட விளைவால் ஏற்ப்பட்ட சறுக்கலை சமாளிக்கவே அன்றி தமிழ் மக்கள் மீது உண்மையான பற்றோ அல்லது நடுநிலமையான செய்தியை வழங்கவோ அல்ல என்பது தான் உண்மை. சறுக்கலை சரிகட்ட கொஞ்சநாள் நல்லவிதமாக செய்தி வெளியிட்டுவிட்டு மீண்டும் தன புத்தியை காண்பிப்பது என்பது இந்த பத்திரிக்கைக்கு புதிதல்ல. 

என்னதான் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இந்த அதிமுக தீர்மானங்கள் போட்டாலும் சமச்சீர் கல்வியை தடை செய்ய முயன்றது ஏன்? புதிய தலைமை செயலகத்தை பயன்படுத்தாமல் கிடப்பில் போடுவது ஏன்? சிறந்த ஒரு நூலகத்தை அகற்ற முயல்வது ஏன்?

 அண்ணா ஹோசரேவேன் மசோதாவால் ஊழலை ஒழிக்க முடியாதெனில் அதை ஒழிக்க நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேள்வி கேட்க வழியில்லை. இப்படி சொல்வதே ஒரு அரசியல்வாதி என்னும் பொழுது இவர்களை என்ன செய்தால் தகும்.

என்ன சொன்னாலும் மக்கள் முட்டாளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் அதிலும் மோசமாக இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.      

Friday, December 9, 2011

முகமூடியோடு...

 
மூடி மறைத்த முகத்தோடு ஓடுகிறேன்
என் உண்மை முகத்தைத் தேடி
என்றாவது கண்டுப்பிடித்து விடுவேன்
என்ற முகமூடியோடு
----------------------------------------






கடவுளாய் இருக்க முயற்ச்சித்தேன்
கயவன் என்றது உலகம்


பதறி ஓடினேன்
பைத்தியக்காரன் என்றது அதே உலகம்


எதுவும் தடுக்கவில்லை என் கருணையை
காசைத்தவிர
-----------------------------------------



இறந்தகால நினைவுகளை இழுத்து
நிகழ்காலத்தை இறக்கச் செய்யும்
என் தனிமை
-----------------------------------------




எந்திர வாழ்க்கையில்
சிக்கி சிதையும் பூக்களாய்
மகிழ்ச்சி




நன்றி - படங்கள் Google

Friday, December 2, 2011

மருந்தாகியது... (மீள்பதிவு)

அறியா மனது
மண்டியிட்டக் கால்கள்

செய்யாத் தவறு
அடிவாங்கியக் கைகள்

கோணாத மனம்
குட்டுப்பட்டத் தலை

காதல் வலி
கதறிய நெஞ்சம்

தோல்வியின் தொடர்ச்சி
கலங்கியக் கண்கள்

வெற்றியில் வீழ்ச்சி
ஏங்கிய நெஞ்சம்

உணர்வின் ஏக்கம்
கசிந்தக் கண்ணீர்

அழிந்த இனம்
நரக வேதனை

புரிந்த மனம்
பொய்யான சோதனை

மறைந்த உறவு
உறைந்த தாக்கம்

குலைந்த நட்பு
 விளைந்த நோக்கம்

மருந்தாகியது காலம்...