Thursday, December 22, 2011

போகிறபோக்கில்

அருவி நீர்ப்போல் உன்னருகில் வருவது காதலுக்காக

ஒரு துருவ காந்தம்போல் நீ விலகிபோவது எதற்காக????

---------------------------------------------------------------------------------------------------------------------------

நெருப்பையும் உறிஞ்சும்
நீரையும் உறிஞ்சும்
உயிரையும் உறிஞ்சும்

சிகரெட்
 
----------------------------------------------------------------------------------------------------------------------------

ஒன்று இரண்டு மூன்று நன்கு ஐந்து ஆறு
ஒன்று இரண்டு மூன்று நன்கு ஐந்து ஆறு
..........................................
.......................

இப்படிக்கு கைதி
 
------------------------------------------------------------------------------------------------------------------------------

பாதளம் வரை வேண்டாம்
என் வீட்டு பீரோ வரை
போதும்
 
-------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் அடிக்கடி
பயன்படுத்தும் பொய்

"நான் நலம்"
 
-------------------------------------------------------------------------------------------------------------------------------

 ரசம் மங்கிய கண்ணாடியிலும்
அழகாய் தெரிகிறது உன் முகம்

--------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜனவரி மாதம்
எனக்கும் அவளுக்கும் திருமணம்

எனக்கு மதுரையில்
அவளுக்கு சென்னையில்
 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கனச்சதுரமாக இருந்தாலும்
கனச்செவ்வகமாக இருந்தாலும்
கனஉருளையாக இருந்தாலும்

அது குண்டுதான்
வெடிகுண்டு கலாச்சாரத்தில்
 
------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆசைகள் அனைத்தும் அச்சுப் பிசகாமல்
அரங்கேற்றிக்கொள்ளும் தருணம்
கனவு காணும் தருணம் மட்டுமே

--------------------------------------------------------------------------------------------------------------

இன்று முர்ச்செடிகளாய் என்னுள்
அன்று நீ விதைத்துபோன
காதல் நினைவு விதைகள்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் இழக்கும் தருணத்தை
நொடித்துக்காட்டும் உண்மை இயந்திரம்
இயங்கிக்கொண்டிருக்கும் என் கடிகாரம் 

----------------------------------------------------------------------------------------------------------------------------------

முற்றுப்பெறாத தேவைகள்
தேவைகளின் தேடல்கள்
கலந்த பிணைப்பின் தொகுப்பே
வாழ்க்கை

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

திறமைக்கு பணம் தரப்பட்டது அன்று
பணத்திற்காக திறமை வளர்க்கப் படுகிறது இன்று

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

பாவம் மட்டுமே செய்யுங்கள்
அப்பொழுதும் இறைவனை அடையலாம்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கடவுளும் மிருகமும் கலந்திருப்பதை விட
மிருகமாய் மட்டுமே இருப்பது மேல்

------------------------------------------------------------------------------------------------------------------------------------

அடிமைகளை விட
அனாதைகள் சிறந்தவர்கள்
 
11 comments:

  1. நல்ல குறும் வரிகள். வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  2. ஜனவரி மாதம்
    எனக்கும் அவளுக்கும் திருமணம்

    எனக்கு மதுரையில்
    அவளுக்கு சென்னையில்
    யதார்த்தம் அருமை .

    ReplyDelete
  3. @வேதா. இலங்காதிலகம். - தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  4. @sasikala - உங்கள் கருத்துரைப்பிர்க்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  5. நல்லாவே ரசிக்கும்படி எழுதியிருக்கீங்க சகோ.நன்றி.

    ReplyDelete
  6. Paavam enru thodangum karuthil mattum enakku udan paadu illai. Matravai anaithum arumai Sago. Thodaravum.

    ReplyDelete
  7. ரசனை மிகு (க)விதைகள்

    ReplyDelete
  8. @ரா.செழியன். - பாராட்டிற்கு மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  9. @துரைடேனியல் - கருத்துரைப்பிர்க்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  10. @சாய் பிரசாத் - தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete

உங்கள் கருத்தை நான் அறிய