Tuesday, December 13, 2011

மாவீரன் செண்பகராமன்







இந்திய சுதந்திரப் போராட்டம் என்றால் நமக்கு வெகுசிலரை தவிர வேறு யாரும் நினைவுக்கு வருவதில்லை, இதுகூடப் பரவாயில்லை, பலரை யாரென்றே பலருக்கு தெரியவில்லை என்றால் அதுவும் சுபாஷ் சந்திரபோசுக்கு இணையானவர் ஒருவரை பற்றி தெரியாமல் போனதும் அதிலும் அவரர் ஒரு தமிழர் என்பது தெரிந்துகொண்டபின்பு எனக்கு அழுவதா இல்லை சிரிப்பதா என்றே தெரியவில்லை.

அந்த மாவீரனின் பெயர் "செண்பகராமன்"

இவரை "ஜெய்ஹிந்த் செண்பகராமன்" என்றும் அழைப்பார்கள். முதமுதலில் ஜெய் ஹிந்த் என்று முழங்கியவர் இவரே என்னும் காரணத்தால் இப்பெயர் பெற்றார் என்று சொல்லப் படுகிறது

உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோர வைத்தார் அதுவும் எழுத்து வடிவமாக என்பதை அறியும்பொழுது நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் இயலவில்லை.

இதைவிட இன்னும் சுவாரசியம் எம்டன் என்று நாம் சொல்லும், ஹம்டன் கப்பல் சென்னையை தாக்கியபோது அதன் உதவி பொறியாளராக இருந்தவரும் இந்த செண்பகராமன் என்றால் ஆச்சர்யத்தில் மூழ்கிப்போனேன்.

இன்றைய செய்தி நாளிதழ் ஒன்றில் மாவீரன் செண்பகராமன் பற்றிய வரலாற்றை பாடத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை செய்தி வெளியானதை படித்தேன்.



இப்படிப்பட்ட மாவீரனை பற்றிய ஒரு புத்தகம்

யோகா பாலச்சந்திரன் என்னும் ஈழத்து பெண் எழுத்தாளர் வெகு ஆண்டுகளுக்கு முன் எழுதிய "மாவீரன் செண்பகராமன்" புத்தகம் சமீபத்தில் கிடைக்கநேர்ந்தது

படித்த பிறகுதான் தெரிந்தது நாம் எவ்வளவு பெரிய வரலாற்றை இழந்திருக்கிறோம், என்னும் எவ்வளவு மறைக்கப் பட்டுள்ளதோ? என்று எதிர்மறை எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

"போதிதர்மரை" மறந்ததாவது ஒரு கணக்கில் கொள்ளலாம், 1500 வருடங்கள் என்பதால், ஆனால் "செண்பகராமன் வரலாறு" 18-19 ஆம் நூற்றண்டுதானே, இவரை எப்படி மறந்தோம் என்றும் தான் எனக்கு தெரியவில்லை? உண்மையில் தமிழன் எங்கு சென்றுகொண்டிருக்கிறான் என்பதை நினைக்கும்போது வெக்கப் படுவதை தவிர வேறு எதுவும் தோன்ற வில்லை.

 இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

http://www.noolaham.org/wiki/index.php?title=மாவீரன்_செண்பகராமன்

2 comments:

  1. @கொல்லான் - தங்கள் வருகைக்கும் கருத்துரைப்பிர்க்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete

உங்கள் கருத்தை நான் அறிய