சமீபமாக வலைத்தளங்களில் பல பதிவுகளை காண்கிறேன். உணர்வின் மேல் எழுச்சியால், தொலைத்து விட்டோமே, இழந்துவிட்டோமே என்னும் உணர்வால் பலர் எழுதும் பாடல்களும், பதிவுகளும் உங்களை காயப்படுத்துவதை நன்கு உணர்கிறேன்.
ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சிலர் எழுத்துக்களால் உங்களுக்கு ஏற்ப்பட்ட வலிக்கு நான் மன்னிப்பு கோருகிறேன். அதே நேரம் இவர்களை போன்றவர்களால் இன்று உண்மை உணர்வோடு போராடுபவர்களும் எழுதுபவர்களும், அவர்களின் உணர்வுகளும் உதாசீனப் படுவதையும் நான் எடுத்துரைக்க விரும்புகிறேன்.
ஈழத்தில் போர்தான் முடிந்திருக்கிறதே தவிர நம்மை அழிக்க பின்னப்பட்ட சதிவலை இன்னும் வலிமையாகவே இருக்கிறது என்பதை உணரவேண்டிய கட்டாயத்தில் இன்று ஒவ்வொரு தமிழனும் இருக்கிறான். அதன் எதிரொலிதான் தமிழகத்திலும் இன்று ஒலிக்கிறது.
இன்று நாம் வாங்கியிருக்கும் வலிகள், அடைந்திருக்கும் துன்பம் கொஞ்சம் நிஞ்சமல்ல, அதை சொல்லியும் மாலாது. வாழ வழியில்லை அகிமசையில் என்று போராடினோம், அடுக்குமுறையும் அழிப்பும் அதிகரிக்கவே ஆயுதம் ஏந்தினோம், அதிலும் அடிவாங்கி இன்று கேட்க நாதியின்றி அனாதையாய் முல்வேளிக்குள் முடங்கிக் கிடக்கிறோம்.
உரிமை கேட்டுத்தான் போராடினோமே ஒழிய பெருமைக்கோ அல்லது பேராசைக்கோ அல்ல, அடிமை வாழ்வு வேண்டாம் என்றுதானே போராடினோம் இன்று வீழ்ந்திருக்கிறோம் வலிகான்கிறோம், ஆனால் நாம் வலிமையாய் இருந்தகாலத்தில் காட்டிய ஒற்றுமையை விட, இப்பொழுது ஒற்றுமையையுடன் இருக்கவேண்டியது மிக மிக அவசியம். வேற்றுமை கண்டு, வேற்றுமை கண்டு நாம் இழந்தது உயிர்களை நம் சொந்தங்களை.
ஆயதப் போராட்டம் அடங்கி இருக்கிறதே தவிர நமது போராட்டம் இன்னும் ஒடுங்கவில்லை. காலத்தின் மற்றம் தமிழ்நாடுகூட இதே சூழ்நிலை சந்திக்கலாம். அதனால் இனி தமிழர்களிடம் வேறுபாடு இருக்க வேண்டாம், ஈழத்தமிழன், தமிழ்நாட்டு தமிழன், புலம்பெயந்த தமிழன் என்று எவ்வித பாகுபாடும் சொன்னாலும் நாம் அனைவரும் தமிழர்களே என்று மனதில் கொள்வோம்.
காலம் மாறும் நிச்சயம் நமக்கு ஓர்நாள் விடிவு வரும், அது ஆயதப் போராட்டமாய்த்தான் இருக்கவேண்டிய அவசியம் இல்லை, ஆனால் தமிழனுக்கு என்று தனிநாடு அமைத்து சுதந்திரமாய் வாழத்தொடங்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்று உறுதிகொள்வோம்.
நம் மக்களின் இழப்பின் வலியை இன்று தமிழகத்தில் பலர் உணர்ந்திருப்பதையும், அதனால் தமிழ்நாட்டு மக்கள் பலர் எண்ணத்தில் எழுச்சி கண்டிருப்பதையும் காண முடிகிறது. இன ஒற்றுமையின் வலிமையையும், அதன் சிந்தனையும் மீண்டும் தமிழர்களிடம் அதீத வளர்ச்சி அடைந்திருப்பதை உணரமுடிகிறது.
நம்மை அழிக்க பின்னப்பட்ட வலை உடையும் வரை பொருத்திருப்போம், காலம் கனியும் வரை காத்திருப்போம். அதுவரை நாம் ஒற்றுமையாய் இருக்கவேண்டியது அவசியம், காயப் படுத்துப் படி எழுதுவோரையோ, உணர்வை வைத்து அரசியல் செய்பவரையோ அல்லது ஈழத்தை சொல்லி பிழைப்பு நடத்தும் கயவரையோ கண்டுகொள்ள வேண்டாம்.
நம்மால் முடிந்தவரை பாதிக்கப்பட்டோருக்கு உதவோம், ஆறுதல் சொல்வோம், அதேநேரம் நம்பிக்கை இழக்காமல் போராடுவோம். எதிரி நம்மை அழிப்பது சூழ்ச்சி, நமக்கு நாமே ஒற்றுமை இழந்து நம்மை அழித்துக் கொள்வது முட்டாள் தனம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பட்டுவிட்டோம், இனியும் இதுபோன்ற சில்லறை பரதேசிகள் செய்யும் ஈனபிறவிகளின் செய்களை கண்டுகொள்ளாமலும், உணர்ச்சிவசப் படாமலும் நாம் நமது இலட்சியத்தை நோக்கி பயணிப்போம்.
பாதைகள் மாறலாம்,
இலக்குகள் மாறலாம்,இலட்சியமும் அதற்காக கொண்ட உறுதியும் என்றும் மாறக் கூடாது.
உண்மைதான் சகோ.பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteதேவையான நேரத்தில் தேவையான பதிவை
ReplyDeleteஎழுதியுள்ளீர்!
நன்றி! அன்பரே!
புலவர் சா இராமாநுசம்
@ரா.செழியன். - கருத்துரைப்பிர்க்கு மிக்க நன்றி சகோ
ReplyDelete@புலவர் சா இராமாநுசம் - தங்கள் வருகைக்கும் கருத்துரைப்பிர்க்கும் மிக்க நன்றி ஐயா
ReplyDeletenalla pathivu
ReplyDeleteமிக்க நன்றி சகோ
ReplyDelete