Friday, October 14, 2011

நீங்கள் கூடங்குளத்தில் வாழத்தயார் என்றால்????



எவ்வளவு சொன்னாலும் திருந்தாத தினமலர்.....

செய்வதை எல்லாம் செய்ய வேண்டியது., பிறகு எதாவது சொல்லிவிட்டால் மட்டும் குதிக்க வேண்டியது. இந்த பார்ப்பன ஆதிக்க நாளிதழை ஒழிக்காதவரை தமிழ் மக்களுக்கு விடிவுகாலம் என்பதே கிடையாது. இத்துணை மக்கள் உண்ணாவிரதம் இருந்து நடத்தும் போராட்டத்தை மதிக்காமல் அசிங்கப் படுத்தும் விதமாக செய்தி வெளியிட்டு தமிழ் மக்களின் விரோதத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறது இந்த நாளிதழ். உண்மையை சொன்னால் பத்திக்கொண்டு எரிகிறது இவர்களுக்கு, ஆனால் செய்வதெல்லாம் திருட்டுத்தனம்.

கூடங்குளம் மக்களின் எதிர்ப்பு நிகழ்வு, வெறும் இரண்டாயிரம் மெகவாட் மின்சாரத்தில் தமிழகத்தின் ஒட்டுமொத்த பிரச்சனையும், மின்வெட்டும் தீர்ந்துவிடும் என்பதுபோலவும், பத்து வருடமாக கட்டி முடிக்கும் வரை இருந்து விட்டு இப்பொழுது போராடுவது சுயநலம் என்பது போலவும் செய்தி வெளியுட்டுள்ளதை யார் யார் வக்காலத்து வாங்க போகிறார்கள் இப்பொழுது?



அட முட்டாள்களா, ஜப்பானில் சுனாமியினால் ஏர்ப்பட்ட அணுஉலை பாதிப்பு சம்பவம் இப்பொழுது தானே நடந்தது, பத்துவருடம் முன்பா நடந்தது? இல்லை கல்பாக்கம் கட்டி முடிக்கப்பட்டு இயங்கத் தொடங்கும் போது இதுபோல் போராட்டம் நடத்தினோமா? சொல்லுங்கள் அறிவாளிகளே.


செருப்பால் அடித்தாலும் திருந்தாத தினமலர் - என்று நான் அன்று பதிப்பிட்ட பதிப்பு தவறு என்பது போல தமிழ்மனத்திலிருந்து நீக்கப் பட்டது. இப்பொழுது அதே போல் ஒரு பதிவு தான் இது இதை இப்பொழுது மறுக்கப் போகுறீர்களா? தமிழக முதல்வரே மக்கள் போராட்டக் குழவில் ஒருவராக இருந்து போராடுவேன் என்று அறிக்கை தரும் பொழுது, இந்த பார்ப்பன பத்திரிகை அதைத் தவறு என்றும், ஜெயலலிதாவை நேரடியாக தாக்காமலும், கூடங்குள போராட்ட மக்கள் மீது நடவடிக்கை அரசங்கத்தால் எடுக்க முடியவில்லை என்று போராட்ட குழு தமிழ் நாட்டிற்கே துரோகம் செய்வதுபோலவும் திரித்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எண்ணத்திற்கு எதிராகவும், தமிழ் உரிமை போராட்ட மக்களின் உணர்வுகளை கேவலப் படுத்தியும் செய்து வெளியிடும் இந்த பார்ப்பன பத்திரிக்கையை என்ன செய்யப் போகிறீர்கள்?

பார்ப்பனனை எதிர்த்தால் அவன் கருப்பு சட்டை அணிந்த நாத்திக திராவிட கழக தொண்டனாகத்தான் இருக்க வேண்டுமா? கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பார்ப்பனர்களை எதிர்க்க மாட்டார்களா? இல்லை பார்ப்பனர்கள்தான் கடவுளா?

அன்று என்பதிவை தமிழ் மனத்திலிருந்து தூக்கிவிட்டார்கள், இன்று அந்த பத்திரிகை மீண்டும் மீண்டும் தமிழ் மக்களின் உணர்வுகளை கேவலப் படுத்திக்கொண்டே இருக்கிறது. இதற்க்கு என்ன செய்யப் போகுரீர்கள் தமிழ் உணர்வாளர்களே?

இறுதியாக ஒன்று சொல்கிறேன் களைஎடுக்காதவரை பயிர் வீடு வந்து சேராது.

கூடங்குளம் வேண்டும் என்று சொல்லும் வாய்ச் சொல் வீரர்கள், நாட்டுப் பற்றாளர்கள் அனைவரையும் நான் கேட்பது - நீங்கள் கூடங்குளத்தில் வாழத்தயார் என்றால் நாங்களும் அனுமதிக்கத் தயார்.



இப்பொழுது சொல்லுங்கள் மேதாவிகளே யார் யார் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட வேண்டும் என்று ஆசைப் படுகுரீர்கள்?

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய