Tuesday, October 11, 2011

ஐயயோ இன்னொரு ர(த்)த யாத்திரையா?

இந்த அரசியல் வாதிகள் ஒவ்வொரு முறை அரசியல் நாடகம் செய்யும் போதெல்லாம் அடிவயிற்றில் பகீர் பகீர் என்று இருக்கிறது. அதிலும் இந்த பி.ஜே.பி நடத்தும் நாடகத்தின் போதெல்லாம் பயம் இன்னும் கொஞ்சம் எகிரவே செய்கிறது.

வாழ்க்கையில் சாவதற்குள் பல பேரைக் கொன்றுவிட வேண்டும்... இல்லை இல்லை பிரதமராகி விடவேண்டும் என்னும் ஆசையில் மீண்டும் ஒரு ரத யாத்திரையை கிளப்ப இருக்கிறார் இந்த அத்வானி. ஏர்க்கனவே போன ரத யாத்திரையில் தெறித்த ரத்தம் இந்தமுறையும் தெறிக்காமல் இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்.



ஊழலுக்கு எதிராக ரத யாத்திரையாம். இவரது இத்துனை கால அனுபவத்திலும், அரசியல் வாழ்க்கையிலும் இதுவரை தோன்றாத இந்த ஊழல் எதிர்ப்பு போராட்ட எண்ணம் இப்பொழுது தோன்றி இருப்பதுதான் அதிசயம்.


அண்ணா கோசரே ஏற்றிய நெருப்பில் இந்த நரி குளிர்காய நினைக்கிறது. எப்படி இருந்தாலும் தமிழ் நாட்டிலும் சரி இந்தியாவின் மத்திய அரசிலும் சரி இவன் இல்லை என்றால் அவன், அவன் இல்லை என்றால் இவன் தான் என்று தலையெழுத்து, இதில் கொடுமை இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதுதான்.

நாளை இந்த பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தாலும் ஒழல் ஒழிப்பு மசோதாவை நிறைவேற்ற போவதில்லை, கருப்பு பணத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்போவதுமில்லை, ஆனால் இந்த காங்கிரஸ் போராட்டத்தில் இறங்கும் என்பது உறுதி. இன்னும் எத்தனைநாளைக்குத்தான் இந்த முட்டாள் தனத்தை நாம் செய்யப் போகிறோம் என்பதுதான் கேள்வி.

இதுவரை அண்ணா கோசரேவை, இவர்கள் விட்டு விட்டு வைத்திருப்பதே உலக அதிசயம். இதை சொல்வதால் யாரும் கோவப்பட வேண்டாம்! தன்னை எதிர்த்துப் போராடிய காந்தியை ஆங்கிலேயன் பத்திரமாய் வைத்திருந்தான், நமக்காக போராடிய அவரைக் கொன்றவர் நாம்தானே?

எது எப்படி இருந்தாலும், மத்தியில் யார் ஆட்சி செய்தாலும் இவர்களால் தமிழனுக்கு விடிவு காலம் வரப்போவதில்லை, மீனவர் கொல்லப்படுவது தடுக்கப் படப் போவதுமில்லை. ஆனால் அவர் ரத யாத்திரை போவதை பெருமையாய் பீத்திக்கொள்ளும் பார்ப்ப ஏடு மத்தியில் பாரதிய ஜனதாவும், தமிழ்நாட்டில் அ.திமு.க வும் ஆட்சி செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இருக்கிறது.

காங்கிரஸ் இல்லை என்றால் பாரதிய ஜனதா, தி.மு.க இல்லை என்றால் அ.தி.மு.க இப்படி இருக்கின்ற சூழ் நிலையில் கருணாநிதி, ஜெயலலிதா, அத்வானி, மோடி போன்ற அரசியல் வேடதாரிகளையும் அவர்கள் போடும் வேடங்களையும் மக்கள் புரிந்துகொண்டாலும் மக்களுக்கு வேறு வழி இல்லை என்பது மட்டுமே உண்மை.


அத்வானி ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை:

யாத்திரை போவது இருக்கட்டும், சுவிஸ் வங்கியில இருக்குற உங்க கணக்க என்ன பண்ண போறீங்க?

------------------------------------------------------------------------------------
ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம்: அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் அராஜகம் இல்லை.

அப்டின்னா கோவை கல்லூரி மாணவிகள் பேருந்துடுடன் எரிப்பு சம்பவம், காரைக்குடி துப்பாக்கி சூடும் எந்த ஆட்சியில் நடந்ததுன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?


------------------------------------------------------------------------------------
கருணாநிதி - தி.மு.க இரும்புக் கோட்டை:

அப்படித்தான் இருந்துச்சு, நீங்க இருந்த உண்ணாவிரதம் தான் அத சுக்குநூறா ஒடச்சு இப்போ துரும்புக் கோட்டையா ஆகிடுச்சு.

------------------------------------------------------------------------------------
தயாநிதி, கலாநிதி மாறன் வீட்டில் சிபிஐ சோதனை:

ஆப்பசைத்தக் குரங்கின் வால் மாட்டிய கதை எப்போவோ படிச்சது. இப்போ தெளிவா நடக்குது. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய