Friday, September 16, 2011

யாரு அதிக இலவசம் தராங்க... (மீள் பதிவு)

கல்வியை இலவசமாக கொடுக்க வக்கில்லை, விளையாட்டு வாய்ப்புகளில் ஊழல், பாரபட்சம், பணப்பட்டுவாட போன்றவற்றை ஒழித்து நேர்மையாய் நடத்தி திறமையான வீரர்களை கண்டுபிடிக்க துப்பில்லை. விலைவாசி குறைய வழியில்லை இலவசம் தருகிறார்களாம் இலவசம்

மக்கள் நலத்திட்டத்துக்க கொடுக்கபப்டும் யாவும் இலவசம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் முதல்வருக்ககவும், இதுபோன்ற அரசியல் வாதிகளுக்கு வக்காளத்துவாங்கி தலையாட்டிக் கொண்டிருக்கும் ஆட்டு மந்தைகளுக்கும் இதோ ஒரு மீள் பதிவு.

யாரு அதிக இலவசம் தராங்க.....
யாரு அதிக இலவசம் தராங்களோ அந்தக் கட்சி ஜெயிக்குது ஏன்?

தருவதனால் மக்கள் வாங்குகிறார்களா? இல்லை மக்கள் வாங்குவதால் அவர்கள் தருகிறார்களா?. பொருள் வாங்குபவர் விரும்பி வாங்கினால்தானே கடைக்காரர் விற்க முடியும். யாரும் வாங்காமல் இருந்தா? கடைய மூடிட்டு போய்டுவான் இல்லியா?

இப்பொழுது தவறு யாரிடம் இருக்கிறது? அரசியல் வாதியிடமா? இல்லை மக்களிடமா?

நாம உண்மையா சிந்திக்கிறதா இருந்தா யார மாத்தணும்? யாரா குறைசொல்லனும்? அவன் கொடுக்கிறான், கொடுக்கிறான்னு சொல்லி சொல்லி எல்லாத்தையும் வாங்கிட்டு. எதாவது ஒரு கட்சிக்கு ஓட்ட போட்டுட்டு வேலைய பார்க்கப் போய்டறது.

என்ன அரசியல் நடக்குது இங்க? ஒன்னும் மட்டும் நல்ல தெருஞ்சுக்குங்க எதுவுமே இங்க இலவசம் இல்ல. நீங்க வாங்குற ஒவ்வொரு பொருளுக்கும், எப்டியாவது ஒரு வழியில நீங்க பணம் குடுத்துதான் ஆகணும்.

அடுத்தது விலை வாசி- பெட்ரோல் விலை 50 - 60 ரூபாய்க்கு உயர்ந்துட்டா, உடனே எல்லா பொருளோட விலையும் ஏறும் சரி, விலை குறைஞ்சா எத்தனப் பேரூ விலைய குறைக்கிறாங்க சொல்லுங்க?. இதுக்கும் அரசியல்வாதி காரணமா? இல்ல மக்களோட பேராசக் காரணமா? சரி ஒரு பொருளை பதுக்கல்பண்ணி விலையேற்றம் ஆகவைத்து பிறகு சந்தைக்கு அதிக விலைக்கு கொண்டு வாராங்களே, அதுவும் அரசியல் வாதியா?

நீங்க வேண்டாம்னு சொன்னா யாரும் உங்கள மிரட்டப்போவதில்லை? மிரட்டவும் முடியாது?

அது என்ன? எல்லாரும் ஒருத்தரை மாத்திரம் குறை சொல்றீங்க, போன தேர்தல்ல யாருதான் அறிவிக்கல. எப்படியும் எல்லாரும் அறிவிக்கப் போறாங்க, அதுல யாராவது கண்டிப்பா வரப்போறாங்க, இதுல என்ன ஒருத்தர மட்டும் எல்லாரும் குறை சொல்றது. என்னமோ இப்போ அவரத்தவிர மத்தவங்க எல்லாம் காமராஜர் மாதிரி?

நான் அவருக்கு வக்காலத்து வாங்குவதாக யாரும் நினைக்க வேண்டாம், இதுவே MGR கொடுத்தப்ப பொன்மனச் செம்மல் அப்படீன்னு சொன்னது ஏன்? எனக்கு புரியல?

இன்னொன்னு நல்ல தெரிஞ்சுக்குங்க எல்லாரும் பேசும்போது, அவங்களையும் அவங்க பொருளாதரத்தை மட்டும் மனசுல வச்சு மட்டும் பேசக் கூடாது. இன்னமும் ஒரு கிலோ ஒரு ரூபாய் அரிசிய நம்பி நிறைய குடும்பங்கள் இருக்கு, காப்பீட்டுத் திட்டத்த வச்சு ஒருவேளை மாத்திர வாங்க வழியில்லாத எத்தனையோ மக்கள் நல்ல குனமடைஞ்சு இருக்காங்க. அறிவித்த அல்லது நிறைவேற்றிய திட்டம் பத்துல நாலு தப்பா அத புறந்தள்ளுங்க, ஆறு சரியா? அதப் பாராட்டுங்க? எல்லாமே தப்பா? ஆட்சிய மாத்தி ஓட்டுப் போடுங்க.

முக்கியமாக மக்களாகிய நாம் உணர வேண்டியது, கல்வி, மருத்துவம், விவசாயம், விளையாட்டு, உணவு ஆகிய துறைகளை தவிர வேறு எதுவொன்றை இலவசமாக கொடுத்தாலும் புறந்தள்ளுங்கள்.

எல்லாரும் அவங்க நினைக்கிற கட்சி ஜெயிக்கனும், அவங்க நினைக்கிற தலைமை இருக்கணும், இதுதான் அவுங்க அவுங்க ஆசை. அது யாரு? அவுங்க தியாகம் என்ன? மக்களுக்காக அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்களின் பூர்விகம் என்ன? என்று எதைப் பற்றியும் கவலையில்லை, இந்த தமிழ்நாட்டின் கேவலமான நிலைமை என்ன என்றால் வருபவன், போவபவன், கூத்தாடுபவனல்லாம் தலைவன், முதல்வன்.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய