Saturday, September 3, 2011

கிரிக்கெட் இந்தியாவிற்கு ஒரு சாபக்கேடு

கிரிக்கெட் இன்று இந்தியாவின் முதன்மையான விளையாட்டு. இந்தியாவின் பெருமையை புகழின் உச்சிக்கு இரண்டுமுறை கொண்டுசென்றதும் அதுவே. எனக்கும் கிரிக்கெட் என்றால் உயிர் என்றுகூட சொல்லலாம்.

இத கிரிக்கெட்டிற்காக என்னுடைய பள்ளிவாழ்க்கை முற்றிலும் மாறியதும் அதன் விளைவுகள் பல எதிர்மறையாக இருந்ததும் உண்மை. இரவுபகல் பாராமல் சோறு தண்ணி இல்லாமல் ஈடுபடும் அளவிற்கு கிரிக்கெட் என் வாழ்க்கையை ஆக்கிரமித்திருந்த நாட்களும் உண்டு. கனவிலும் நினைவிலும் என்று இருபத்தி நான்குமணி நேரமும் அதே சிந்தனைதான்.

ஆனால் நான் இங்கு சொல்லவந்தது கிரிக்கெட்டை பற்றி எனது பார்வையில் இருந்து அல்ல, நாட்டின் பார்வையிலிருந்தும் எதிர்கால இந்தியாவின் வளமான விளையாட்டுத்துறை பற்றிய பார்வையிலிருந்தும் பதிக்கிறேன்.

இந்தியாவின் வருமானத்தை உயர்த்தும் அசைக்கமுடியாத தனித்தன்மையோடு விளங்கிறது இந்திய கிரிக்கெட். இருப்பினும் கிரிகெட் மட்டுமே இந்தியாவின் உயிர்ப்பு இல்லை என்பது என் கருத்து. இந்தியாவின் தேசிய விளையட்டு ஹாக்கி இன்று முடங்கிக் கிடக்கும் இடம் தெரியவில்லை. இந்தியா ஆஸ்திரேலியாவை வெற்றி பெற்றுவிட்டால் மகிழ்கிறோம், ஆனால் இன்று ஹாக்கியில் அவர்களின் கொடி பறக்கிறது. கால்பந்தில் அவர்கள் உலகக்கோப்பையில் பங்கெடுக்கிறார்கள், நாம் தகுதிச் சுற்றில் வெற்றிபெற்றாலே பெருமையாக பேசுகிறோம், கைபந்தில், கூடைபந்தில், நீச்சல், குண்டு எறிதல், தட்டு எறிதல், ஓடப்பந்தயம் இப்படி அனைத்திலும் சிறு சிறு நாடுகள் பதக்கங்களை அளிக் குவிக்கிறது ஆனால் நாம் மட்டும் ஒரு வெண்கலப் பதக்கமாவது கிடைக்காதா? பதக்கப் பட்டியலில் இந்தியா இடம்பெறுமா? என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறோம்.

அனைத்து விளையாட்டுகளிலும் மற்ற நாடுகளின் வீரர்கள் ஒருவர் இல்லை என்றால் இன்னொருவர் என்று புதிது புதிதாக வந்துகொண்டே இருக்கிறார்கள், ஆனால் இந்தியாவில் குறிஞ்சிப் பூ பூப்பதுபோல எப்போதாவது ஒரு ஓட்டப் பந்தய வீரங்கனை, ஒரு பேட்மிட்டன் வீரர் வீராங்கனை, ஏதோ ஒன்றிண்டு மல்யுத்தம், துப்பாக்கி, சதுரங்கம், அம்பெறிதல் என்று இருக்கிறார்களே தவிர ஒலிம்பிக் போட்டியள் இடம்தெரியாமல் போகின்றனர், அதிலும் நீச்சல், உயரம் தாண்டுதல், குண்டெரிதல், வட்டெரிதல், ஈட்டிஎரிதல் இவரில் எல்லாம் சாதித்தவர்கள் என்று எவருமே தென்படவில்லை ஏன்?

நூருகோடிபேரைக் கொண்ட அறுபதாண்டு சுதந்திர இந்தியாவின் ஒட்டுமொத்த சாதனையே இவ்வளவுதான்

1 Gold National team 1948 London Field hockey Men's competition
1 Gold National team 1952 Helsinki Field hockey Men's competition
3 Bronze Khashaba Dadasaheb Jadhav 1952 Helsinki Wrestling Men's freestyle bantamweight
1 Gold National team 1956 Melbourne Field hockey Men's competition
2 Silver National team 1960 Rome Field hockey Men's competition
1 Gold National team 1964 Tokyo Field hockey Men's competition
3 Bronze National team 1968 Mexico Field hockey Men's competition
3 Bronze National team 1972 Munich Field hockey Men's competition
1 Gold National team 1980 Moscow Field hockey Men's competition
3 Bronze Leander Paes 1996 Atlanta Tennis Men's singles
3 Bronze Karnam Malleswari 2000 Sydney Weightlifting Women's 69 kg
2 Silver Rajyavardhan Singh Rathore 2004 Athens Shooting Men's double trap
1 Gold Abhinav Bindra 2008 Beijing Shooting Men's 10m air rifle
3 Bronze Sushil Kumar 2008 Beijing Wrestling Men's 66 kg freestyle
3 Bronze Vijender Singh 2008 Beijing Boxing Men's 75 kg


இந்த மானக்கெட்ட பெருமைக்கு வருடம் ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு.

http://indiabudget.nic.in/ub2009-10%28I%29/eb/sbe105.pdf

காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்த இருபத்தெட்டாயிரம் கோடி இதற்கு ஒரு துறை, அதற்க்கு ஒரு மந்திரி அதில் ஊழல்.

சரி இதுதவிர சிலர் கூறுவது இன்னும் வெக்கேடு இந்தியாவில் திறமை சாலிகளே இல்லையாம்?

இதுவரை விளையாட்டில் புகழ்பெற்ற அனைத்து வீர்களையும் நாம் பாராட்டியே தீரவேண்டும், ஏன் என்றால் நம் நாடு மற்ற நாடுகளைப் போல் எந்தொரு முயச்சியிலும் வீரர்களை உருவாக்குவதில்லை. வீரர்கள் அனைவரும் அவர்களாகவே உருவாக்கிக் கொண்டவர்கள்.

இதில் பல இடங்களில் திறமை மறைக்கப் படுகிறது, பல இடங்களில் கண்டுபிடிக்கப் படுவதில்லை. அதிலும் மக்கள் விளையாட்டு துறையை நம்பி இறங்கப் பயப்படும் அளவிற்கு ஒருதலைப் பட்ச்சமாக நடத்தப் படுகிறது. குறிப்பாக சாதிவாரியாக, சிபாரிசு வரியாக, பணத்தின் மூலமாக என்று நாட்டின் திறமையயும், பெருமையையும் கெடுத்து வைத்துள்ளனர்.

இதில் பெரும்பான்மையான துறைகள் தன்னாட்ச்சியாக, சுயாட்ச்சியாக இருக்க காரணமென்ன கிரிக்கெட் உட்பட? அவர்கள் அரசாங்கத்தின் கட்டுப்பட்டிற்குள் வரமறுப்பதன் காரணமென்ன? தின்று கொழுத்த பன்றிகள் திருடித்திங்க முடியாதென்றா?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவர முயற்சி செய்தால், தடுமாறி ஓடுவதேன் அறுபது வருடங்களாக தன்னாட்ச்சியாக, சுயாட்ச்சியாக இருந்து சாதிக்க முடியாதவர்கள் இனிதான் சாதிக்கப் போகிறார்களா?

இதுவரை விளையாட்டு என்ற பெயரில் இவர்கள் கொள்ளையடித்து போதும். திருடித் தின்று உலக அரங்கில் இந்தியர்களின் மானத்தை காற்றில் விட்டது போதும். இனி அனைத்து விளையாட்டுத் துறையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழுமே இயங்க வேண்டும்.

ஒதுக்கப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கான கணக்கினை இந்தியக்குடிமக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு பகுதிவாரியாக நடக்கும் அனைத்துப் போட்டிகளின் முடிவுகளும், வீரர்களின் விவரங்களும் அவர்கள் தேர்ந்தெடுக்க மற்றும் நீக்கப் படுவதற்கான புள்ளி விபரங்களும் வெளிப்படியாக வெளியிடப்பட வேண்டும்.

இவ்வாறு நடந்தால் மட்டுமே உலக அரங்கில் இந்தியா விளையட்டு வீரர்கள் வெற்றிக்கொடி நாட்ட முடியும். இந்தியா வல்லரசாகப் போகிறதாம்? கூரைஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போகப் போகிறார்களா?

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய