வாழ்க்கையில் சில சம்பவங்களை மறக்க முடியாது, அதிலும் பிறரை கிண்டல் செய்வதிலும்(பார்ரா....), பிறர் கேலிக்கு ஆளாவதிலும்(இப்ப சொல்றியே இது கரெக்ட்....) ஒரு சுகம் இருக்கத்தான் செய்யும். என் நண்பன் ஒருவனுக்கு நான் தினமும் ஒரு பல்பு கொடுக்கவிடில் என் தலை சுக்குநூறாக சிதறிவிடும்(அவன் ஆயிரம் பல்பு குடுப்பான?), என்ன செய்வது நமக்கு வாய்த்த அடிமை அவன் ஒருவன்தான்.
எல்லாவற்றையும் மனதில் வைத்து எத்தனைநாள் திட்டம் போட்டானோ தெரியாது,
வழக்கம்போல் இன்றும் பல்பு கொடுக்கலாம் என்று
"மச்சான் பிசிய?" என்றேன்
"இல்ல ஏண்டா?" என்றவனிடம்
"கொஞ்சம் இங்க வா, ஒரு உதவி பண்ணுடா ரொம்ப முக்கியம்" என்றேன் மூன்று மேசைகள் தள்ளி அமர்ந்திருந்தவனை.
எனக்காக தான் செய்துகொண்டிருந்த வேலையை விட்டு என்னிடம் வந்தவனை
"இல்ல மச்சி இந்த பேப்பரை இந்த குப்பைதொட்டியில போடணும், நீயே கொஞ்சம் போடேன்" என்று சொன்னேன் சிரிக்காமல் கையில் பேப்பருடன் என் அருகில் இருந்த குப்பைத் தொட்டியை சுட்டிக்காட்டியபடி.
அருகில் இருந்த அனைவரும் சிரிக்கும் முன், என்கையிலிருந்த பேப்பரை பிடுங்கி என்தலையில் போட்டுவிட்டு கூலாக சொன்னான் சண்டாளன் "மச்சா குப்பையில போட்டுட்டேன் டா" அப்பொழுது அனைவரின் சிரிப்பைவிட என் காதில் ஒலித்தது சந்தானத்தின் டயலாக் "அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்".
Monday, August 30, 2010
Friday, August 27, 2010
நிலையை என்னச் சொல்ல?

நிலையை என்னச் சொல்ல?
தண்ணீர் கொடுக்க தரம்கெட்ட
நிலையை என்னச் சொல்ல?
உச்சநீதி மன்றத்தை உதாசினப்படுத்தும்
நிலையை என்னச் சொல்ல?
குறுவைச் சாகும்
நிலையை என்னச் சொல்ல?
முல்லை பெரியாறு முடக்கப்படும்
நிலையை என்னச் சொல்ல?
விளைநிலம் தரிசாகும்
நிலையை என்னச் சொல்ல?
விவசாயின் விதியின்
நிலையை என்னச் சொல்ல?
சோறுடைத்த பொன்னாடு!
நீரின்றி வாடும்
நிலையை என்னச் சொல்ல?
நான் தான் ஏது செய்ய?
கட்டுண்ட எனது கரங்கள்
கருகி வீழட்டும்.
Labels:
(க)விதை
வித்தானவைதான்..
வித்தானவைதான்..
ஒவ்வொரு வெற்றிக்கும்
உழைப்புகள் வித்தானவைதான்..
உழைப்பிற்கு கொண்ட
உறுதிகள் வித்தானவைதான்..
வெல்லும் உறுதிக்கு
நம்பிக்கைகள் வித்தானவைதான்..
இன்றே நம்பிக்கை வித்திடு
வெற்றியின் விளிம்பை தொட்டிடு........
ஒவ்வொரு வெற்றிக்கும்
உழைப்புகள் வித்தானவைதான்..
உழைப்பிற்கு கொண்ட
உறுதிகள் வித்தானவைதான்..
வெல்லும் உறுதிக்கு
நம்பிக்கைகள் வித்தானவைதான்..
இன்றே நம்பிக்கை வித்திடு
வெற்றியின் விளிம்பை தொட்டிடு........
Labels:
(க)விதை
இனியும் சொல்லாதீர்கள்....
இனியும் சொல்லாதீர்கள்....
நாம் ஓர் இனம்
நாம் ஓர் குலம்
என்று.....
அழிவை தந்துவிட்டு
கண்ணீர் அஞ்சலி
ஒரு கேடு
துக்கம் தந்துவிட்டு
மனத்துயரம் ஒரு கேடு
மதிகெட்ட மாந்தர்களே.........
நாம் ஓர் இனம்
நாம் ஓர் குலம்
என்று.....
அழிவை தந்துவிட்டு
கண்ணீர் அஞ்சலி
ஒரு கேடு
துக்கம் தந்துவிட்டு
மனத்துயரம் ஒரு கேடு
மதிகெட்ட மாந்தர்களே.........
Labels:
(க)விதை
Thursday, August 26, 2010
போடா போடா புண்ணாக்கு.....
மாதக்கடைசி கைல காசு இல்ல, கடைசியா இருந்த ஐம்பது ரூபாய்க்கும் டாப்-அப் பண்ணியாச்சு, டாப்-அப் ஆனா குறுஞ் செய்தியை தொடர்ந்து வந்தது ஒரு மிஸ்டு கால்,
அமுதா... காலிங்....
உடனே நான் கால் செய்ய "ஹலோ என்னப்பா?"
"டேய் நாளைக்கு ஆபீஸ் ஆடிட்டிங்.................
........................................................................
......................................................................"
"ஓகே bye bye"
(யுவர் பேலன்ஸ் - 39.00 ருபீஸ்)
இம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........! "#@%$%#@#!"
மீதி 39.00 ரூபாய் இருக்கே என்று நினைத்த நேரத்தில் அடுத்த மிஸ்டு
கால் "ஷீலா கல்லிங்......"
நான் கால் செய்ய "என்ன ஷீலா?"
" இல்லடா சும்மாதான், நேத்து படத்துக்கு போறன்னு.....................................................
........................................................................
......................."
"இம் இம் bye bye "
(யுவர் பேலன்ஸ் - 22.00 ருபீஸ்)
ஆஹா!!!!!!!!!!!!!!!!!!!!!!!! என்பதற்குள் வந்தது அடுத்த மிஸ் கால்
"நிலா காலிங்...."
மீண்டும் நானே கால் செய்ய
"சொல்லு நிலா interview என்னாச்சு?"
"போடா! கம்பெனியா டா அது? கேள்வி கேட்கிறேன்னு கழுத்த அருத்துட்டான்"
"அப்டியா?"
" ஆமாண்டா, ....................................................
........................................................................
.........................................................................
........................................."
(யுவர் பேலன்ஸ் - 1.08 ருபீஸ்)
ஐயய்யோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! (அட மூதேவிங்கலா?)
ஆஹா! லதாவுக்கு ஆபீஸ் ஆடிட்டிங் டீடைல்ஸ் சொல்லனுமே, அவளுக்கு ஒரு மண்ணும் தெரியாதே!!!!!!!!!!!!!!!
சரி லதாவுக்கு மிஸ் கால் குடுக்கலாம்
பாடியது "போடா போடா புண்ணாக்கு.." கட் பண்ணிவிட்டு காத்திருந்தேன்..
லதாவிடம் இருந்து கால் வந்து
("லதா காலிங்.....")
??????????
??????????
"1 மிஸ்டு கால்" (போங்ங்ங்ங்ங்கடங்ககக........)
இப்போது நான் கால் பண்ணாமலே அந்த பாடல் ஒலித்தது
("போடா போடா புண்ணாக்கு.. போடாத தப்புக் கணக்கு.....")

லொள்ளு
Tuesday, August 24, 2010
வணக்கம்
வணக்கம்
அன்பு பிளாக்கர்கள் எல்லோருக்கும் பிளாக்கிக்கிறேன். (மன்னிக்கவும்) அன்பு நண்பர்கள் எல்லாரையும் வணங்கிக்கிறேன். என்னடா தொடங்கிய உடனே மன்னிப்பு கேட்கிறேன்னு நினைக்காதீங்க.
மன்னிக்க தெரிஞ்சவன் மனிதன்
மன்னிப்பு கேட்பவன் கடவுள்
(கொஞ்சம் ஓவரா தான் இருக்கு என்னபன்றது சிலவிசயங்கள மாத்தமுடியதுல்ல சரி விசயத்துக்கு வருவோம்)
இது எனது முதல்படி (அப்ப ரெண்டாவது படி இன்னொரு பிளாக்கான்னு கேட்கக்கூடாது), என்னுடைய (மொக்கைகளை) பதிவுகளை பெரிய மனதுடன் படித்து பின்னூட்டத்தில் பின்னியெடுத்து என்னை வாழ்வில் வளமடைய செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி நன்றி நன்றிங்கோ.................................

அறிமுகம்
Subscribe to:
Posts (Atom)