சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டு எழுத்தாளர்களும் கலையுலக கலைங்கர்களும் ஈழத்தை வியாபார நோக்குடன் அணுகுவதை கண்டித்து ஈழ உறவு (பதிவர்) பலர் வலியுடன் பதிவிட்டனர். அதற்காக மன்னிப்பு கோரியும் வியாபார நோக்குடயவரை தவிர்த்து உண்மை உணர்வாளர்களும் அதில் அலட்சியப் படுத்துத்த பட்டுவிடக் கூடாதே என்னும் நோக்கில் நான் எனதருமை ஈழத்து உறவுகளேயென்று ஒரு பதிவிட்டேன்,
அதில் தவறு செய்தவர்களுக்காக நான் மன்னிப்பு கோரியும், அதே வேலையில் உண்மை உணர்வாளர்களை காயப்படுத்தி விட வேண்டாம்யென்று கேட்டிருன்தேன், ஆனால் அதே பதிவிற்கு சில புல்லுருவிகள் என்னை வெறுப்பேற்றி, என் எண்ணத்தினை பிறழ்வு செய்வதாய் நினைத்து பின்னூட்டம் போட்டனர் அனானிமஸ் பெயரில்.
என்னே அவர்கள் வீரம், யார் இவர்கள்? ஈழம் பற்றி பேசினால் இவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது? நம்மை நோக்கி பின்னப்பட்ட சதிவலை இன்னும் இருக்கிறது யென்று சொன்னால் இவர்கள் ஏன் ஆதங்கப் படுகிறார்கள்? நான் புலிகளை மட்டும் ஆதரித்தோ, அல்லது போர் ஒன்றுதான் மீண்டும் வழி என்றோ பதிவிட்டிருந்தால் கூட இவற்றை பிடிக்காத யாராவது சிலர் எதிர்க்க காரணம் உண்டு, அப்படியே எதிர்த்தாலும் கூட அனாநிமசாய் வந்து வீரம் காட்டவேண்டிய அவசியம் இல்லை. அப்டி பட்ட இந்த மாவீரர்கள் ஏன் கோபப் படுகிறார்கள்?
அப்டிஎன்றால் இவர்கள் யார்? தமிழ் ஈழ கட்டமைப்பை பற்றியோ அல்லது தமிழர் ஒற்றுமையை பற்றியோ இவை இல்லாமல் ஒருமைபாட்டை வெளிக்காட்டும் வகையான பொதுவான, தமிழர் அல்லது ஈழத்தமிழர் என்று சொன்னாலோ இவர்களுக்கு இவ்வளவு கோபம் வரவேண்டிய அடிப்படைக் காரணம் என்ன?
இவர்கள் இடும் பின்னூட்டம் எல்லாம் பிரிவினையை தோற்றுவிக்க வேண்டும் என்ற நோக்கிலோ அல்லது இணைய ஊடகத்தில் தமிழ் ஈழ கட்டமைப்பை, ஈழமக்களின் நம்பிக்கையின் ஒற்றுமையை குலைக்கும் நோக்கிலோ இருப்பதாய் தோன்றுகிறது.
இதுபோன்ற கயவர்களின் கைகரியமே நமக்கெதிராய் பின்னப்பட்ட சதி வலை கண்ணுக்குத் தெரியாத இழையினூடாய் இருப்பது புலப்படுகிறதே. இவர்கள்தான் அந்த சதிவலையின் சிலந்திக் குட்டிகள். அதில் சிக்குபவரை சின்னாபின்னப் படுத்துவதும், வலை எங்கேனும் பலமிழந்தால் அதை பலப் படுத்துவதுமே இந்த குட்டி சிலந்திகளின் தலையாய வேலை.
இதற்கான தலைமை கைக்கூலியாய் இருக்கும் தின்று கொழுத்த விசசிலந்திகள் இலங்கையிலோ, மேற்கத்திய நாடுகளிலோ ஏன் தமிழ்நாட்டிலோ கூட இருக்கலாம், அனால் எங்கு இருந்துகொண்டு என்ன சதி செயல்கள் செய்தாலும் அநியாயம் என்றுமே வென்றதில்லை.
தமிழனின் நம்பிக்கையே நீதியும், நியாயமும் என்றைக்கும் சாவதில்லை என்பதுதான். அப்படி பட்ட நீதியும் நியாயமும் அவனுக்கு கிடைக்காமல் போய்விடுமா என்ன? உங்களால் முடிந்தவரை எவ்வளவு வஞ்சகமும் நரித்தனமும் செய்ய முடியுமோ செய்துபாருங்கள். ஆனால் ஒன்றுமட்டும் சொல்லிவிடுகிறேன் காலம் இப்படி போகாது, நிச்சயம் மாறும் விடிவு ஓர்நாள் வந்தே தீரும். அன்று இந்த சிலந்திகள் இருக்கும் இடம், தடம் தெரியாமல் போகும்.
* தமிழக மக்கள் பிரச்சனயில் மவுனம் காக்கும் ரஜினி. சினிமா பைத்தியம் பிடித்து அலையும் தமிழ் ரசிகர்கள் புத்தியில் ஆணிதான் அடிக்கவேண்டும்
ReplyDelete* ரஜினி, கமல், ஜெய் ஆகாஷ்! ஆயுதப்போராட்டம்! நடிகர் ரஜினி, கமல் முதல் ஜெய் ஆகாஷ் போன்ற நடிகர்கள் வரை தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும்
* அன்னா ஹசாரேயின் வேஷம் கலைந்தது! நாட்டை பாதுகாக்க நடக்கும் யுத்தத்தில் பங்கு கொள்ளாமல் ஒளிந்து கொண்ட ஒரு கோழை ராணுவவீரர்தான் அன்னா ஹஸாரே
ஒன்றுமட்டும் சொல்லிவிடுகிறேன் காலம் இப்படி போகாது, நிச்சயம் மாறும் விடிவு ஓர்நாள் வந்தே தீரும். அன்று இந்த சிலந்திகள் இருக்கும் இடம், தடம் தெரியாமல் போகும். unmaithane
ReplyDeleteஇந்த புல்லுருவி களுக்கு எல்லாம் நாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்கக் கூடாது உண்மையில் இந்த புல்லுருவிகள் கூலிக்காக வருகிறவர்கள் எனது இடுகையிலும் வருவார்கள் இதுகளை ஒதுக்கி நமது ஒற்றுமையை முன்னிறுத்த வேண்டும் ...
ReplyDelete@PUTHIYATHENRAL - மிக்க நன்றி
ReplyDelete@மாலதி - //இந்த புல்லுருவி களுக்கு எல்லாம் நாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்கக் கூடாது உண்மையில் இந்த புல்லுருவிகள் கூலிக்காக வருகிறவர்கள் எனது இடுகையிலும் வருவார்கள் இதுகளை ஒதுக்கி நமது ஒற்றுமையை முன்னிறுத்த வேண்டும் ...//
ReplyDeleteஅவர்கள் கனவு ஒருபோதும் பலிக்கப்போவதில்லை. கருத்துரைப்பிர்க்கு மிக்க நன்றி சகோ
இனிய வணக்கம் நண்பா,
ReplyDeleteஇன்று தான் உங்கள் வலைக்கு முதன் முதலில் வந்தேன்.
இப்படியான இணையத்தில் வீரம் காட்டுவோர் நம்மிடையே பலர் உலவுகின்றார்கள். அனானி கமெண்ட் ஆப்சனை நீக்கி விடுங்கள் நண்பா..
@நிரூபன் - நீங்கள் எனது வலைப் பதிவிற்கு வருகை தந்து மிக்க மகிழ்ச்சி நிருபன்.
ReplyDeleteநீங்கள் கூறுவதுபோல் முதலில் நீக்கிவிடலாம் என்றுதான் நினைத்தேன், ஆனால் இவர்களைப் போன்றவர்களின் எண்ணோட்டத்தையும், வீரத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிசெய்து அப்படியே வைத்திருக்கிறேன்.
இன்னும் அவர்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்.
கருத்துரைப்பிர்க்கு மிக்க நன்றி நிருபன்
சிங்கள கைக்கூலிகள் போன்ற நரிகளின் குரைப்பிற்கு அஞ்சாமல், நீங்கள் இனத்திற்கான
ReplyDeleteநல்ல நோக்கத்திற்கான பயணத்தை தொடருங்கள் சகோ,துணையிருப்போம் நாங்கள்.இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
@ரா.செழியன் - எவருக்கும் அஞ்சோம் நாம், ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சகோ
ReplyDelete