Tuesday, December 27, 2011

ஓ..... இந்தியன் என்போரே, ஆர்ப்பரிக்கும் தமிழ்நாடு பாரிர்


ஒவ்வொருவன் உயிருக்குள்ளும் ஒரு உணர்விருக்கிறது. உணர்வு என்றால் என்ன என்றும் கிலோ எவ்வளவு? எங்கு கிடைக்கும்? என்று கேட்பவர்கள் எத்தனையோ பேர்.

 இருப்பினும் தமிழன் தன் உணர்வை இன்னும் இழந்துவிடவில்லை, அது அழிந்தும் விடவில்லை என்பதை நிருபித்துக் கொண்டிருக்கிறான். ஈழம் முதல் இமையம் வரை தமிழனுக்கு பிரச்சனை. காரணம் தன்மானம், சுயகவுரவம், தனக்கென்று தனி அடையாளம், பெருமைகள், திறமைகள் என்று இருப்பதும், இவை இல்லாமல் அண்டிப் பிழைக்கும் சிலருக்கு அல்ல பலருக்கு இது கண்ணை உறுத்துவதே காரணம்.

 தரணியில் தனித்தன்மையாய் விளங்குபவனே தமிழன். இதுபோன்ற தன்மைகளை எதுவும் இல்லாதவர்கள் கையில் இன்று அதிகாரம், ஆணவச் செருக்குடன் இருப்பதால், அவர்கள் அடிவாரத்தை ஆட்டிப் பார்க்கிறார்கள்.

 இதுவரை வந்தவனையெல்லாம் வாழவைத்து, வாழ்ந்தவனையெல்லாம் நல்லவன் என்று நம்பியே இருந்த காரணத்தால், இன்று இவனுக்கு வாழ்வாதாரம் அழிந்துபோகும் நிலை உள்ளது. கண்டவன் நாட்டை ஆண்டு, இன்று நம்மை பிறரிடம் கையேந்தும் நிலைக்கு விட்டுவிட்டார்கள்.

 மாநில எல்லை பிரிக்கும்போதும், வாக்குறுதிகள் பெறப்பட்ட போதும் தலைமையில் இருந்தவர்கள் ஏனோ தானோ என்றே இருந்திருக்கிறார்கள், அதனை நாம் உணராததன் விளைவு, ஈழம் மட்டும் அல்ல தமிழ்நாட்டிற்கே அழிவுகாட்ட நினைக்கிறார்கள். இத்தனை பிரச்சனைகளுக்கும் முக்கிய நோக்கம் தமிழன் தலையெடுக்க கூடாதென்றும் அப்படி  ஓர் இனமே இருந்ததன் அடையாளம் இருக்கக் கூடாதென்று இருப்பதாய் புரிகிறது.



 ஈழப் பிரச்சனைக்கும், கூடங்குளப் பிரச்சனைக்கும் இந்தியன் நான் இந்தியன் என்று வரிந்துகட்டிக் கொண்டு வந்தோரெல்லாம் இபோழுது எங்கே சென்றார் என்று தெரியவில்லை. இதோ பாருங்கள், இந்தியன் என்று பெருமைபேசி தமிழன் உணர்வுக்கு அணைபோட்டவர்களே பாருங்கள் "தமிழனின் உயிர் அணை" இன்று இல்லாமல் போகும் நிலை, இதற்க்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

 இந்தியனாய் இருந்து ஈழத்திற்கு ஒன்றும் செய்ய  முடியவில்லை?, இந்தியனாய் இருந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை?, பத்தாயிரம் கோடிக்குமேல் செலவுசெய்து ஆரம்பித்த சேது சமுத்திர திட்டம் முடிக்க இயலவில்லை?, காவிரியில் தண்ணீர்கொண்டு வரமுடியவில்லை?, இப்பொழுது வெடித்திருக்கிறது முல்லைபெரியறு அதனை அணைக்க முடியவில்லை? 

              

 ஐந்து மாவட்டங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி, பல்லாயிரம் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக் குறி? இத்தனைக் கேள்விக் குறிகளை எப்பொழுது நிமிர்த்தி அச்சரியக் குறிகளாக்கப்போகிறோம்?                             

 இன்னும் இந்த இறையாண்மை ஒற்றுமை என்று பேசிப் பயனில்லை என்று ஆர்ப்பரிக்கிறது தமிழகம். எங்கு திரும்பினும் போராட்டம், மக்கள் வெள்ளம், இத்தனை மக்களுக்கு இருக்கும் உணர்வு போதும், இதுவரை இல்லாத இந்த எழுச்சிபோதும், தமிழனின் தலையெழுத்தை மாற்றியமைப்போம்,

 ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்
 காவிரி பிரச்சனை போராட்டம்
 ஒக்கேனைக்க
ல் குடிநீர்த் திட்டப் போராட்டம் 
தமிழ் ஈழமக்களுக்கான போராட்டம்      
 தமிழக மீனவர்களுக்கான போராட்டம்
 மூவர் தூக்கிற்கு எதிரான போராட்டம்
 கூடன்குள அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டம்
 முல்லைபெரியாறு போராட்டம்

இன்னும் எத்தனை போராட்டம் நடத்த வேண்டும், தமிழன் தனது உரிமையை காக்க இத்தனைப் போராட்டமா? இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்காவது இத்தனை பிரச்சனை உண்டா? எல்லாவற்றிலும் போராட்டம் நடத்தவேண்டிய நிலைமையில் தமிழன் மட்டுமே இருக்கிறான் ஏன்?  



 யார் உணர்ந்தாலும் உணராவிட்டாலும் தமிழன் உணர்ந்துவிட்டான் என்பது உண்மை, உணர்ந்தவன் மட்டுமே உண்மைத் தமிழன், இனி தமிழருக்கு எதிராய் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும், விளைவுகள் விளைந்ததே தீரும். அகிம்சையில் நடக்கும் இப்போராட்டங்கள் அவமதிக்கப்பட்டால் விளைவுகள் வேறுவழியில் வெளிப்படும்.

 ஒன்று மாநில எல்லை மறுஆய்வு நடத்த வேண்டி வரும் இல்லை என்றால் தனி நாட்டிற்க்கான எல்லை பற்றிய ஆய்வு நிறைவேற்ற வேண்டி வரும். எதற்கும் ஓர் எல்லை உண்டு, என்பதை நிருபிக்க வேண்டியும் வரும்.  



 ஓ........... இந்தியன் என்போரே, ஆர்ப்பரிக்கும் தமிழ்நாடு பாரிர்
தன்னை உணர்ந்துகொண்ட தமிழனைப் பாரிர்
வாழ்வாதாரம் காக்க போராடும் தன்மான மக்களின் அடையாளம் பாரிர்
உரிமையை நிலைநாட்ட உணர்ச்சிபொங்கி ஓரணியில் திரளும் எம்மக்களை பாரிர்
இனியும் இந்தியன் என்ற முகமூடி எதற்கு உமக்கு
உண்மைத்தமிழனாய் இரு ஆயிரம் இந்தியாவை நாம உருவாக்கலாம்.




6 comments:

  1. //இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்காவது இத்தனை பிரச்சனை உண்டா?// உமக்கு எப்படி தெரிந்தது வேறு மாநில்த்துக்கு பிரச்னைகளே இல்லை என்று! சுயபச்சாதாபத்துக்கு அளவேயில்லை...இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒரு லட்சம் பேரை பலி கொடுத்தாச்சு...உசுப்பேத்தினவன் போய் சேர்ந்துட்டான். அவன் தப்பை மறைக்க இப்ப தமிழ்நாட்டு மக்களை உசுப்பேத்தணும்...

    ReplyDelete
  2. சிந்திக்க வைக்கும் பதிவு

    நன்றி

    ReplyDelete
  3. தங்கள் வருகைக்கும் கருத்துரைப்பிர்க்கும் மிக்க நன்றி அனானிமஸ்

    ReplyDelete
  4. சிறந்த பதிவு . நன்றி

    ReplyDelete
  5. @sasikala - தங்கள் வருகைக்கும் கருத்துரைப்பிர்க்கும் மிக்க நன்றீங்க

    ReplyDelete

உங்கள் கருத்தை நான் அறிய