Monday, November 29, 2021

மாநாடு (திரைவிமர்சனம்)

நான் வெகுநாள் பிறகு தியேட்டரில் பார்த்த சிலம்பரசன் படம்... மாநாடு.. 

Edge of tomorrow படத்தின் இரண்டாவது பாகம் என்று சொன்னாலும்... அது இது என்று எதைச்சொன்னாலும்...

தமிழ் படங்களில் ஒரு வித்தியாசமான நல்ல படம் என்பதை ஒருபோதும் மறுக்க இயலாது...

வெல்டன் வெங்கட் பிரபு...

வெங்கட் பிரபுவின் சினிமா வாழ்வில் கவிஞர் வாலி ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டர் என்பதை அவரின் மறைவுக்கு பிறகு எல்லா படங்களிலும் போடும் miss you title card சொல்கிறது...

திரைக்கதை அமைப்பு... லாஜிக் மீராத வண்ணம் மிக நேர்த்தி மிக தெளிவு...

எப்படி சில சுயநல அரசியல்வாதிகளால் ஒரு குறிப்பிட்ட மதம் பலிகடா ஆக்கப்படுகிறது என்பதை மிக நேர்த்தியாகவும், அதே நேரத்தில் வாரிசு அரசியலை சீண்டும் திரைக்கதை வசனத்தையும், மதக்கலவரங்கள் நடப்பதன் உள்நோகத்தையும் தைரியத்துடன் அதுவும் குறிப்பாக கோவயை கதைக்களமாக்கி சொல்லியுள்ள வெங்கட் பிரபுக்கு இன்னும் வாழ்த்துக்கள்... 

சிலம்பரசனின் நடிப்பு மிக அழகாக அற்ப்புதமாக குறிப்பாக எந்த கதாபாத்திரத்தையும் திறம்பட தன்னால் செய்ய இயலும் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதற்க்கு பாராட்டுகள்....

சிலம்பரசன், SA சந்திரசேகர், வாகை சந்திர சேகர், மனோஜ் பாரதிராஜா, டேனி, YG மஹேந்திரன் என எல்லோரும் போட்டி போட்டு நடித்திருந்தாலும்.... இவர்கள் அனைவரையும் ஓரம் கட்டும் அளவிற்க்கு மிக அற்புத கதாபாத்திரமும் அதன் வரம்பு மீராதா நடிப்பும் SJ சூரியா வின் வசமாகிறது.... படமுழுக்க அவரே வியாபிக்கிறார்... கைத்தட்டுகளை அள்ளுகிறார்...

அதோடு ஒரே ஒரு பாடல் தான் படத்தில்... மனதில் நிற்க்கவில்லை... ஆனாலும் பின்னனி இசையில் இன்னொருமகுடம் யுவனுக்கு... யுவன் எப்போதும் முடிசூடா மன்னன் இசையில்...

மொத்தத்தில் மாநாடு... தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு இன்னொரு மாபெரும் சினிமா மாநாடு...