ஒவ்வொரு முறையும் தாக்கப்படுகிறேன்
மிகமிகச் சரியாக மிகத்துல்லியமாக
தாக்கப்படும் ஒவ்வொருமுறையும்
வீழ்ச்சி காண்கிறேன் ரம்மியமாக
தாக்கிய அம்புகுவியல் மேல் நின்று
எண்ண முயல்கிறேன் அம்புகளை அல்ல
வீழ்ச்சிகளை மட்டும் தான்
சில அம்புகள் நீளமானவை
சில அம்புகள் அகலமானவை
சில கூரானவை, பல நேரானவை
மழுங்கியது சில, ஒடிந்தது சில
குருதிக்கரையுடன் சில அம்புகள்
பலரை தாக்கிய அடையாளம் தாங்கி
இவையணைத்தும் என்னைத் தாக்கிய
உயிரம்புகளே...
அருமை சகோ.
ReplyDeleteதமிழ்மணம் வாக்கு 1.
@துரைடேனியல் - மிக்க நன்றி சகோ
ReplyDeletegood
ReplyDelete@Anonymous - மிக்க நன்றி
ReplyDeleteஎண்ணிப்பார்க்கிறேன்....
ReplyDeleteகவிதையோடு எனது தழும்புகளையும் தடவியவாறே!
அருமை... பதிவிற்கு நன்றிகள் நண்பரே!