ஒவ்வொரு இனத்திற்கும் பலவிதமான குறைபாடுகள் உண்டு. அதில் சில அவற்றிற்கு பெருமளவில் பாதிப்பை உண்டாக்குவதில்லை. ஆனால் சில இனங்களின் பலவீங்களாக இருக்கும் சிறு சிறு குறைபாடுகள் அந்த இனத்தையை அழிக்கும் நிலைக்கு தள்ளிச் செல்கிறது. அது புரியாமல் இன்னும் அதே பலவீனங்களை கட்டிக்கொண்டு அழும் பாழாய் போன இனங்களில் இப்பொழுது தமிழினமும் இணைந்துவிட்டதோ? என்று நினைக்கத் தோன்றுகிறது.
சாதியம் - ஆலமரத்தை அடியோடு சாய்க்கும் ஆணிவேர் வியாதியாய், தமிழினம் தன் அருமை பெருமைகளை இழந்து, ஒற்றுமை இல்லாமல் ஒவ்வொரு கிளை ஒடிந்து விழுவதைப் போல சிறுகச் சிறுகச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பிரச்சனைக்காக ஒரு போராட்டம் நடக்கிறது, அது ஐந்து மாவட்ட மக்களின் வாழ்க்கை கேள்விக் குறியாவதால் அந்தப் போராட்டம், அதில் தலைமையாய் இருக்கும் இருவர் இரண்டு குறிப்பிட்ட சாதியினர் (நன்றாக படியுங்கள் - இருவரும் வேறு வேறு சாதி) இருப்பதால் இது மூன்றாவது சாதியினருக்கு எதிரான போராட்டம் என்று புறந்தள்ளுகிறது ஒரு கும்பல் சாதி என்னும் பெயரால். பாதிக்கப் படப் போகும் அந்த ஐந்து மாவட்டத்தில் உன் சாதி என்று சொல்லிக்கொள்ளும் குடும்பம் ஒன்றாவது இருக்காதா என்ன?
தாழ்ந்த வகுப்பை சார்ந்த ஒரு தலைவன் ஈழமக்களுக்காக போராட்டம் நடத்தினால் பிற சாதியின் பெயரால் இருக்கும் கும்பல் அதை அந்த தலைவனின் பெயரால் அல்ல அந்த தலைவரின் சாதியின் பெயரால் புறக்கணிக்கிறது.
அப்படி பார்த்தால் கூட தமிழன் எவன் ஒருவன் தலைவனாய் இருந்தாலும் அவன் எதாவது ஒரு சாதியை சேர்ந்தவனாய்த்தானே இருக்க வேண்டும்?. அதனால்தான் பலநாளாய் தமிழ நாட்டிற்கும் ஒரு தமிழன் தலைவனாய் இல்லையோ?
மதம் - சாதியம் தாண்டினால் மதம், மதம்.. மதம்... மதம்.. எப்படி இந்த சாதியப்பேய் தமிழனை கிறுக்கனாக்குகிறதோ, அதேபோல் இந்த மதம் அவனை மதம் பிடிக்கச் செய்கிறது.
கிறுக்கன் என்றாலே தாங்கமுடியாது, அதிலும் மதம் பிடித்த கிறுக்கன் என்றால் நினைத்துப் பாருங்கள். அப்படித்தான் இருக்கிறான் இன்றைய தமிழன்.
ஆயிரம் மக்களின் போராட்டம், அணுஉலை வேண்டாம் என்று, அந்தப் போராட்டத்தை உடைக்க எதிரி எடுக்கிற முதல் ஆயுதம், இந்த மதம் தான். இம்முறை அது செயலிழந்து போயிருந்தாலும், கர்ணம் தப்பினால் மரணம் என்பது போலத்தான். இங்கு நான் சொல்லவந்தது எதிரிக்கு வேண்டிய ஆயுதத்தை நாமே அவனுக்கு கொடுக்கிறோம் என்பதைத்தான்.
பொறமை - இது செல்லரிக்கும் புற்றுநோயைப்போல ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் அவனை அறியாமல் வளர்த்துக் கொள்வது. இது இப்பொழுது தமிழனிடம் அதிகமாகவே உள்ளது. நம் அண்டை மாநிலத்தவரை அப்படி இப்படி ஏளனம் செய்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை பார்த்து ஏளனம் செய்வது ஒன்றே ஒன்றுதான், இந்த பொறாமையினால் வரும் ஒற்றுமையின்மையைத்தான்.
உண்மையில் உங்களுக்கு அனுபவம் வேண்டுமானால் வெளிநாடுகளில் சென்று பணிசெய்து பாருங்கள். நான் சொல்வது உண்மையா? இல்லையா? என்று தெரியும்.
எவன் எப்படி வளர்ந்தாலும் பரவயில்லை, தன்னோடு இருக்கும் தமிழன் வளரக்கூடாது என்று ஒவ்வொரு தமிழனுக்கும் எண்ணம் எப்படித்தான் வருகிறதோ தெரியவில்லை? ஆனால் அவர்களோ உள்ளுக்குள் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும், நம் இனத்தானைத் தவிர வேறு ஒருவன் வந்துவிடக் கூடாது என்றுதான் நினைக்கிறான். அதனால்தான் அவன் ஆள்கிறான், நாம் அடிமைப் பட்டு அழுகிறோம்.
காட்டிக்கொடுக்க ஒரு கூட்டம், அதற்க்கு காரணம்கற்பிக்க ஒரு கூட்டம், பிரபாகரன் அவர்களை கைகாட்டும் இவர்கள், அல்பர்ட் துரையப்பா, கதிர்காமர், டக்லஸ் தேவானந்தா, மாத்தையா, கருணா போன்றோரை ஒன்றும் சொல்வதில்லை ஏன்? இவர்கள் இல்லாவிட்டால் பிரபாகரன் உருவாகியிருக்கவும் மாட்டார், இன்று கண்மறைந்திருக்கவும் மாட்டார். ஆனால் இந்த மக்கள் அழிவு மட்டும் கணடிப்பாக நடந்திருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக.
இந்தமாதரியான கோடரிக்காம்புகள் எண்ணங்களிலும் செயலகளிலும் உருவாவதேன்?
இப்படி பல.... தடைகளை தன் வாழ்வியல் ஆதாரமாய் கொண்டு வாழும் இன்றையத் தமிழன் இன்னும் எத்தனைத் தலைமுறைக்கு தாக்குப் பிடிப்பான்???????????
பி.கு. என்னை திட்ட நினைப்போர் திட்டலாம், தாராளமாய்
எதிரிகளும், துரோகிகளும் உன்னை தூற்றினால் நீ செல்லும் பாதை சரியான பாதை - தந்தை பெரியார்
vanakkam thiru thanganivas ungaludaiya thamizhanai patriya padhivu migundhdha manavedhanaiyai tharugindradhu edharkkum oru vzhi irruppadhu pol idhdharkkum oru vazhiyai kandupidippon thalaimurai kaapon nandri
ReplyDeleteமுற்றிலும் உண்மை
ReplyDeleteஅருமையான பதிவு
இந்தநிலை தொடர்ந்தால் தமிழினம் என்று ஒன்று இருந்தது என்ற அடையாளக் கல்வெட்டுக்கூட இல்லாமல் போகும்
ReplyDelete@mundagakkannan - நிச்சயம் விடியல் வரும், தமிழன் மீண்டும் தலையெடுப்பான் தமிழன் மீண்டும் தழைத்தோங்கும், தங்கள் வருகைக்கும் கருத்துரைப்பிர்க்கும் மிக்க நன்றி சகோ
ReplyDelete//முற்றிலும் உண்மை
ReplyDeleteஅருமையான பதிவு //
கருத்துரைப்பிர்க்கும் மிக்க நன்றி Anonymous
//இந்தநிலை தொடர்ந்தால் தமிழினம் என்று ஒன்று இருந்தது என்ற அடையாளக் கல்வெட்டுக்கூட இல்லாமல் போகும்//
ReplyDeleteஅப்படி ஒரு நிலை வராமல் காத்து நிற்ப்போம்
கருத்துரைப்பிர்க்கும் மிக்க நன்றி Anonymous
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
ReplyDelete******* மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம். ********
.
சாதியம் - ஆலமரத்தை அடியோடு சாய்க்கும் ஆணிவேர் வியாதியாய், தமிழினம் தன் அருமை பெருமைகளை இழந்து, ஒற்றுமை இல்லாமல் ஒவ்வொரு கிளை ஒடிந்து விழுவதைப் போல சிறுகச் சிறுகச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.
ReplyDeleteஅருமையான பதிவு
@sasikala - தங்கள் வருகைக்கும் கருத்துரைப்பிர்க்கும் மிக்க நன்றீங்க
ReplyDeleteதமிழினம் தன்னை உணருமா?
ReplyDeleteநன்றி
maika nalla pathivu
ReplyDelete//தமிழினம் தன்னை உணருமா?
ReplyDeleteநன்றி //
நிச்சயம் உணரும் என்று நம்புவோம்
கருத்துரைப்பிர்க்கு மிக்க நன்றி அனானிமஸ்
//maika nalla pathivu //
ReplyDeleteகருத்துரைப்பிர்க்கு மிக்க நன்றி அனானிமஸ்
* தமிழக மக்கள் பிரச்சனயில் மவுனம் காக்கும் ரஜினி. சினிமா பைத்தியம் பிடித்து அலையும் தமிழ் ரசிகர்கள் புத்தியில் ஆணிதான் அடிக்கவேண்டும்
ReplyDelete* ரஜினி, கமல், ஜெய் ஆகாஷ்! ஆயுதப்போராட்டம்! நடிகர் ரஜினி, கமல் முதல் ஜெய் ஆகாஷ் போன்ற நடிகர்கள் வரை தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும்
* அன்னா ஹசாரேயின் வேஷம் கலைந்தது! நாட்டை பாதுகாக்க நடக்கும் யுத்தத்தில் பங்கு கொள்ளாமல் ஒளிந்து கொண்ட ஒரு கோழை ராணுவவீரர்தான் அன்னா ஹஸாரே