Showing posts with label லொள்ளு. Show all posts
Showing posts with label லொள்ளு. Show all posts

Thursday, December 22, 2011

போகிறபோக்கில்


அருவி நீர்ப்போல் உன்னருகில் வருவது காதலுக்காக

ஒரு துருவ காந்தம்போல் நீ விலகிபோவது எதற்காக????


---------------------------------------------------------------------------------------------------------------------------

நெருப்பையும் உறிஞ்சும்
நீரையும் உறிஞ்சும்
உயிரையும் உறிஞ்சும்

சிகரெட்
 

----------------------------------------------------------------------------------------------------------------------------

ஒன்று இரண்டு மூன்று நன்கு ஐந்து ஆறு
ஒன்று இரண்டு மூன்று நன்கு ஐந்து ஆறு
..........................................
.......................

இப்படிக்கு கைதி
 

------------------------------------------------------------------------------------------------------------------------------

பாதளம் வரை வேண்டாம்
என் வீட்டு பீரோ வரை
போதும்
 

-------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் அடிக்கடி
பயன்படுத்தும் பொய்

"நான் நலம்"
 

-------------------------------------------------------------------------------------------------------------------------------

 ரசம் மங்கிய கண்ணாடியிலும்
அழகாய் தெரிகிறது உன் முகம்


--------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜனவரி மாதம்
எனக்கும் அவளுக்கும் திருமணம்

எனக்கு மதுரையில்
அவளுக்கு சென்னையில்
 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கனச்சதுரமாக இருந்தாலும்
கனச்செவ்வகமாக இருந்தாலும்
கனஉருளையாக இருந்தாலும்

அது குண்டுதான்
வெடிகுண்டு கலாச்சாரத்தில்
 

------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆசைகள் அனைத்தும் அச்சுப் பிசகாமல்
அரங்கேற்றிக்கொள்ளும் தருணம்
கனவு காணும் தருணம் மட்டுமே


--------------------------------------------------------------------------------------------------------------

இன்று முர்ச்செடிகளாய் என்னுள்
அன்று நீ விதைத்துபோன
காதல் நினைவு விதைகள்


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் இழக்கும் தருணத்தை
நொடித்துக்காட்டும் உண்மை இயந்திரம்
இயங்கிக்கொண்டிருக்கும் என் கடிகாரம் 


----------------------------------------------------------------------------------------------------------------------------------

முற்றுப்பெறாத தேவைகள்
தேவைகளின் தேடல்கள்
கலந்த பிணைப்பின் தொகுப்பே
வாழ்க்கை


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

திறமைக்கு பணம் தரப்பட்டது அன்று
பணத்திற்காக திறமை வளர்க்கப் படுகிறது இன்று


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

பாவம் மட்டுமே செய்யுங்கள்
அப்பொழுதும் இறைவனை அடையலாம்


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கடவுளும் மிருகமும் கலந்திருப்பதை விட
மிருகமாய் மட்டுமே இருப்பது மேல்


------------------------------------------------------------------------------------------------------------------------------------

அடிமைகளை விட
அனாதைகள் சிறந்தவர்கள்
 
 
 

Wednesday, March 2, 2011

சுவாரசியமான சம்பவம்...

நேற்றிரவு ஒரு சுவாரசியமான சம்பவம் நண்பர்களே (அத நாங்க சொல்றோம் நீ கதைய சொல்லு டா),

மாலை 6:00 மணிக்கு அலுவலகம் முடிந்ததும் (வெட்டிமுரிக்குறாரு??) நேராக ரூமுக்கு சென்று குளித்து முடித்துவிட்டு (இத நம்பனுமா?) துணி மாற்றிக்கொண்டு சாப்பிட போனா(அதான),

மணி 6:40 ஆகிடுச்சு. சரின்னு சாப்டு முடிச்சுட்டு திரும்ப அறைக்கு போகலாம்னு திரும்பி போனே. அப்ப நம்ப பசங்க ரெண்டுபேரூ mobil ல பேசிகிட்டு இருந்தாங்க,

சரி அவங்கள தொந்தரவு பண்ண வேணாம்னு கொஞ்ச நடந்துபோய் திரும்பினா அங்க வழிஇல்ல, எப்டி இருக்கும் அதன் என்னோட ரூம் கதவாச்சே அதவும் பூட்டிவேற இருக்குது. சரி கதவ தொரக்கலாம்னு சாவிய தேடுனா பைல சாவிய காணும் ஒருநிமிஷம் பகீர்னு ஆகிடுச்சு,

எப்டியோ மனச தைரியபடுதிக்கிட்டு இனொரு பைல தேடுனா சாவி இருக்கு, அப்டியே கதவ மெல்ல தொரந்து உள்ள போய் மறுபடியும் கதவ சத்தமில்லாம பூட்டிட்டு லைட் ஆப் பண்ணிட்டு

அப்புறம் என்ன படுத்து தூங்கிட்டேன். போ போ போய் வேலைய பாருங்கப்பா!!!!!!!!!!!!!!! வெட்டி கத பேசிகிட்டு

Saturday, February 19, 2011

வாழ்க்கைப் பாதையில்...

வாழ்க்கைப் பாதையில்
எத்தனையோ சுவாரசியம்
நொடிக்கு நொடி ஆச்சர்யம்
எத்தனைத் தோல்விகள்
எத்தனைத் தடைகள்
எத்தனை எத்தனை வெற்றிகள்
எவ்வளவு இழிச்சொற்கள்
எப்படிப்பட்ட கேவலப் பார்வைகள்
தூற்றல்கள்
வன்சொற்கள்

இவையனைத்தையும் கடந்த பிறகும்
தெளிந்த பிறகும்
அடர்ந்தக் காட்டில்
விழும் பூப்போல்
கடலில் விழும்
ஒருதுளி நீர் போல்
மனதில் எங்கோ
ஒரு மூலையில்
ஒரு சிறு அழுத்தம்
இல்லை வருத்தம்
இல்லை இல்லை குறை
இம்ஹும் அதுவுமில்லை
நிறைவேராத ஒரு ஆசை
இன்னும் சரியாகச் சொல்லமுடியவில்லை

பேனாமுனை பந்துபோல்
ஒரு சிறு உறுத்தல் இன்னும்
உருண்டுகொண்டுதான் இருக்கிறது.

வேலை பளுவா?
அது நமக்கு கைவந்தக் கலைதான்
அதையும் ஊதியகிவிட்டது.

காதலா?
மூன்றுவருடமாக மூடிவைத்ததை
துப்பியகிவிட்டது.
இன்னும் அந்த உறுத்தல்
மறைந்தபாடில்லை
அது என்னவென்றும்
நான் அறிந்தபாடில்லை.

என்ன செய்ய நான்
ஐயோ தலை வெடித்துவிடும் போல் உள்ளதே
ஒருவேளை
நண்பன் புது வண்டி வாங்கினானே?
அதுவா கிடையாது கிடையாது
பொறாமை படும் பழக்கம் நமக்கில்லை
அப்படி என்றால் வேறென்ன?

புது வீடு கட்டிவிட்டேன்
வங்கியில் பணம் தேவைக்கு உள்ளது
சேமித்து விட்டேன்
வழக்கமாய் வீட்டுக்கு அனுப்பும்
பணத்தையும் அனுப்பிவிட்டேன்
இல்லை இல்லை
இது எதுவும் இல்லை
அது வேறு, அது இவையெதுவும் இல்லை.

அந்த உறுத்தல் இன்னும்
என்னை விட்டபாடில்லை
ஐயோ எனக்கு
பைத்தியம் பிடித்துவிடும்போல் உள்ளதே
ஒன்றுமே புரியவில்லை
என்ன இது இப்படி
என்னை வதைக்கிறதே

ஆ..... கண்டுபிடித்துவிட்டேன்.......
கண்டுபிடித்துவிட்டேன்.....

பதிப்பிட ஒன்றுமே கிடைக்கவில்லை........
அதுதான் இது

அப்பாடி................................

Monday, August 30, 2010

அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்....

வாழ்க்கையில் சில சம்பவங்களை மறக்க முடியாது, அதிலும் பிறரை கிண்டல் செய்வதிலும்(பார்ரா....), பிறர் கேலிக்கு ஆளாவதிலும்(இப்ப சொல்றியே இது கரெக்ட்....) ஒரு சுகம் இருக்கத்தான் செய்யும். என் நண்பன் ஒருவனுக்கு நான் தினமும் ஒரு பல்பு கொடுக்கவிடில் என் தலை சுக்குநூறாக சிதறிவிடும்(அவன் ஆயிரம் பல்பு குடுப்பான?), என்ன செய்வது நமக்கு வாய்த்த அடிமை அவன் ஒருவன்தான்.

எல்லாவற்றையும் மனதில் வைத்து எத்தனைநாள் திட்டம் போட்டானோ தெரியாது,
வழக்கம்போல் இன்றும் பல்பு கொடுக்கலாம் என்று

"மச்சான் பிசிய?" என்றேன்

"இல்ல ஏண்டா?" என்றவனிடம்

"கொஞ்சம் இங்க வா, ஒரு உதவி பண்ணுடா ரொம்ப முக்கியம்" என்றேன் மூன்று மேசைகள் தள்ளி அமர்ந்திருந்தவனை.

எனக்காக தான் செய்துகொண்டிருந்த வேலையை விட்டு என்னிடம் வந்தவனை
"இல்ல மச்சி இந்த பேப்பரை இந்த குப்பைதொட்டியில போடணும், நீயே கொஞ்சம் போடேன்" என்று சொன்னேன் சிரிக்காமல் கையில் பேப்பருடன் என் அருகில் இருந்த குப்பைத் தொட்டியை சுட்டிக்காட்டியபடி.

அருகில் இருந்த அனைவரும் சிரிக்கும் முன், என்கையிலிருந்த பேப்பரை பிடுங்கி என்தலையில் போட்டுவிட்டு கூலாக சொன்னான் சண்டாளன் "மச்சா குப்பையில போட்டுட்டேன் டா" அப்பொழுது அனைவரின் சிரிப்பைவிட என் காதில் ஒலித்தது சந்தானத்தின் டயலாக் "அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்".

Thursday, August 26, 2010

போடா போடா புண்ணாக்கு.....

மாதக்கடைசி கைல காசு இல்ல, கடைசியா இருந்த ஐம்பது ரூபாய்க்கும் டாப்-அப் பண்ணியாச்சு, டாப்-அப் ஆனா குறுஞ் செய்தியை தொடர்ந்து வந்தது ஒரு மிஸ்டு கால்,

அமுதா... காலிங்....
உடனே நான் கால் செய்ய "ஹலோ என்னப்பா?"

"டேய் நாளைக்கு ஆபீஸ் ஆடிட்டிங்.................
........................................................................
......................................................................"

"ஓகே bye bye"

(யுவர் பேலன்ஸ் - 39.00 ருபீஸ்)

இம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........! "#@%$%#@#!"
மீதி 39.00 ரூபாய் இருக்கே என்று நினைத்த நேரத்தில் அடுத்த மிஸ்டு

கால் "ஷீலா கல்லிங்......"
நான் கால் செய்ய "என்ன ஷீலா?"
" இல்லடா சும்மாதான், நேத்து படத்துக்கு போறன்னு.....................................................
........................................................................
......................."

"இம் இம் bye bye "

(யுவர் பேலன்ஸ் - 22.00 ருபீஸ்)
ஆஹா!!!!!!!!!!!!!!!!!!!!!!!! என்பதற்குள் வந்தது அடுத்த மிஸ் கால்

"நிலா காலிங்...."

மீண்டும் நானே கால் செய்ய

"சொல்லு நிலா interview என்னாச்சு?"

"போடா! கம்பெனியா டா அது? கேள்வி கேட்கிறேன்னு கழுத்த அருத்துட்டான்"

"அப்டியா?"

" ஆமாண்டா, ....................................................
........................................................................
.........................................................................
........................................."

(யுவர் பேலன்ஸ் - 1.08 ருபீஸ்)

ஐயய்யோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! (அட மூதேவிங்கலா?)

ஆஹா! லதாவுக்கு ஆபீஸ் ஆடிட்டிங் டீடைல்ஸ் சொல்லனுமே, அவளுக்கு ஒரு மண்ணும் தெரியாதே!!!!!!!!!!!!!!!

சரி லதாவுக்கு மிஸ் கால் குடுக்கலாம்
பாடியது "போடா போடா புண்ணாக்கு.." கட் பண்ணிவிட்டு காத்திருந்தேன்..

லதாவிடம் இருந்து கால் வந்து
("லதா காலிங்.....")
??????????
??????????

"1 மிஸ்டு கால்" (போங்ங்ங்ங்ங்கடங்ககக........)

இப்போது நான் கால் பண்ணாமலே அந்த பாடல் ஒலித்தது

("போடா போடா புண்ணாக்கு.. போடாத தப்புக் கணக்கு.....")