கனவுகள் மெய்பட வேண்டும் என்றான் கவி
மெய்பட்டதா கனவு
இல்லை பொய்பட்டாத?
தினம் தினம் எத்தனை கனவு
அத்தனையும் பொய்யாய் போகுது!
என் தேசமே!!
நான் என்ன செய்வேன் ஏதுசெய்வேன்
வெந்தேன் எனை நானே நொந்தேன்
கனவு என்பது இடற்று பிழையால்
களவு என்பது ஆனது ஏனோ?
ஒழுக்கம் என்பது என் தேசத்தை விட்டு
போனது தானோ? ஏனோ?
மதவெறி இனவெறி பெருகியதிங்கே
மனு நெறிதான் போனது எங்கே?
காசை காணத் தெறியுது இங்கே
பாசம் நேசம் போனது எங்கே?
எதரி வந்தால் ஒற்றுமை காணுது
இல்லை என்றால் வேற்றுமை பேணுது
மாநிலம் முழுதும் சாதியில் வேற்றுமை
தேசம் முழுதும் இதில்தான் ஒற்றுமை
வேற்றுமை என்பது வார்த்தையில் இல்லை
ஒற்றுமை என்பது உள்ளத்தில்(உண்மையில்)இல்லை
எங்கோ போகுது தேசம்
இட்டுகட்டி போடுது பல வேசம்
தண்ணீர் கொடுக்க தரம்கெட்டு கிடக்குது
தாய்க்காவிரி அங்கே சிறைப்பட்டு கிடக்குது
உண்மயில் சொன்னால் வெட்க்கக்கேடு
என்று மறையும் இந்த சாபக்கேடு
விடிவு ஒருநாள் வருமா? என்றேன்
கனவுகள் மெய்பட வேண்டும்
என்றான் கவி
கனவு நிச்ச்சயம் மெய்ப்படும்,, கவிதை நன்று,நன்றி சகோ.
ReplyDelete@ரா.செழியன் - பாராட்டிற்கு மிக்க நன்றி சகோ
ReplyDelete'கனவு' ரெண்டு சுழி 'ன' வரணும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமன்னிக்கவும், இப்பொழுது தவறு திருத்தப்பட்டது, சுட்டிகாட்டியமைக்கு நன்றி
ReplyDelete