அரசியல் என்னும் வார்த்தையில் ஒளிந்திருக்கும் மறைபொருள் நயவஞ்சகமே. அதிகார வர்கத்தின் அடக்குமுறையும், ஜனநாயம் என்னும் போலி முகமூடியில் ஏமாற்று, பித்தலாட்ட, ஆதிக்க வெறியே மிஞ்சுகிறது.
காங்கிரசு சென்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்து இலவசங்களி வாரி வழங்கியதன் உள்நோக்கம். தமிழ்ஈழ அழிப்பு. தமிழகத்துக்கு இலவசங்களையும், இலங்கைக்கு ராணுவ உதவிகளையும் வாரி வழங்கி கொன்றொழித்தது தமிழ் இனத்தை.
கூடங்குளத்தை எதிர்த்து நாம் போராட, திரு. அப்துல் கலாமை ஆயுதமாய் பயன்படுத்தியதோடு இல்லாமல், மதவாதம், வெளிநாட்டு சதி என்று பலவாறு திரிக்க முயல்கிறது.
கேரளாவில் தனது ஆட்சி என்பதால் முல்லை பெரியாறு பிரச்னையை தூண்டி தமிழக கேரள மக்களிடையே விரோதத்தை வளர்க்கவும், கூடங்குள பிரச்சனையையும், இதையும் ஒப்பிட்டு ஏமாற்றவும், கேரள அரசியல் வாதிகளை தூண்டிவிட்டு அமைதி காக்கிறது.
இதனுடன் கூட்டணி வைத்திருக்கும் தி.மு.க, கனிமொழி ஜாமீனில் வெளி வரும் வரை வெறும் அறிக்கையை விட்டு விட்டு ஜாமீன் கிடைத்தவுடன் போராட்டம் என்று அறிவித்ததோடு மட்டும் இல்லாமல், காங்கிரசுடன் கூட்டணி பாதிப்பில்லை என்று வேறு சொல்லிக் கொள்கிறது. மக்களுக்கு எதிராக செயல்படும் கட்சியுடன் என்ன கூட்டணி வேண்டி இருக்கு, இது யாரை ஏமாற்றும் நாடகம்?
2G அலைக்கற்றை ஊழலில் பா.சிதம்பரம் சம்பத்தப் பட்டுள்ளதாக பிரச்சனை எழுந்துள்ள போதும், இன்னும் மொவுனம் காப்பது எதனால்? கூட்டணிக் கட்சியின் ராஜா, கனிமொழி மட்டும் கைது செய்யப் பட்டு சிதம்பரம் பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்? இது யாரை முட்டாளாக நினைக்கும் வேளை?
இவ்வளவு நயவஞ்சகமான செயல்கள் செய்து ஆட்சியை காப்பாற்றி இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? மக்களுக்கு நல்லது செய்யவா? இல்லை இன்னும் கொள்ளையடிக்கவா?
இது எதிர்த்து பிஜேபி குரல் கொடுத்தாலும், இந்த செயல்கள் அவர்களுக்கும் பொருந்தும்.
என்னதான் தினமலர் முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழர்களுக்கு சாதகமாய் எழுதினாலும், கூடங்குலப் பிரச்சனையைப் பற்றி எழுதி தமிழ் மக்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட விளைவால் ஏற்ப்பட்ட சறுக்கலை சமாளிக்கவே அன்றி தமிழ் மக்கள் மீது உண்மையான பற்றோ அல்லது நடுநிலமையான செய்தியை வழங்கவோ அல்ல என்பது தான் உண்மை. சறுக்கலை சரிகட்ட கொஞ்சநாள் நல்லவிதமாக செய்தி வெளியிட்டுவிட்டு மீண்டும் தன புத்தியை காண்பிப்பது என்பது இந்த பத்திரிக்கைக்கு புதிதல்ல.
என்னதான் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இந்த அதிமுக தீர்மானங்கள் போட்டாலும் சமச்சீர் கல்வியை தடை செய்ய முயன்றது ஏன்? புதிய தலைமை செயலகத்தை பயன்படுத்தாமல் கிடப்பில் போடுவது ஏன்? சிறந்த ஒரு நூலகத்தை அகற்ற முயல்வது ஏன்?
அண்ணா ஹோசரேவேன் மசோதாவால் ஊழலை ஒழிக்க முடியாதெனில் அதை ஒழிக்க நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேள்வி கேட்க வழியில்லை. இப்படி சொல்வதே ஒரு அரசியல்வாதி என்னும் பொழுது இவர்களை என்ன செய்தால் தகும்.
என்ன சொன்னாலும் மக்கள் முட்டாளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் அதிலும் மோசமாக இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

0 comments:
Post a Comment
உங்கள் கருத்தை நான் அறிய