அனைத்தும் அறிந்துவிட்டதாய்
துள்ளிக்குதிக்கிறது ஆணவம்
வக்கிரமும் வாஞ்சையும்
வரிசைகட்டி வந்து நிற்க
தேவையைமிஞ்ச தேடுகிறது ஆசை
அதனை மிஞ்சும் பேரசை
வன்மம் என்பதும் அதர்மம் என்பதும்
பிறப்பெடுக்கும் தருணம்
இதுவாகவே இருக்க
கோபம் பொறாமை கொடிகட்டி நிற்க
மனம் வாடி, துன்பம் தேடி
வாழ்க்கையை உணராமல் வாழ்வதற்கு
ஆறுக்கும் குறைவே நலம்
அருமை
ReplyDeleteவணக்கம் நிவாஸ் நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பணிகள்.
ReplyDelete