Thursday, October 20, 2011

பார்ப்பனியம் என்பது மட்டுமே எதிர்க்கப்படுகிறது

என்னைப் பொறுத்தவரை தனி ஒரு மனிதன் எதிர்ப்போ அல்லது குறிப்பிட்ட இனத்தவரில் அனைவரும் கெட்டவர்கள் என்றோ சொல்ல முயன்றதில்லை. பார்ப்பனியம் ஒரு சிலரால் மட்டுமே செயல்படுத்தப் படுகிறது. ஆனால் தனிமனிதனாய் அது பிடிக்காவிட்டாலும் அவர்களால் அதை தவறு என்று சொல்ல முடிவதில்லை. அப்படி எதிர்த்து குரல் கொடுத்தவர்கள், தமிழுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் பாரதி, தமிழ் தத்தா உ.வே. சுவாமிநாத ஐயர் போன்ற ஒரு சிலரே. இவர்கள் பிறப்பால் பிராமின் குளத்தை சேர்ந்தவர் என்றாலும் இவர்களை தமிழ்நாடும் தமிழர்களும் என்றுமே தனித்துப் பார்த்ததில்லை.

பாரதி என்பவர் ஒரு மகாகவி, பார்ப்பனியத்தை எதிர்த்த ஒரு மாமனிதன். பிறப்பால் ஒரு பார்ப்பனராய் இருந்தாலும் தமிழால், தமிழ்மீது கொண்ட பற்றால் தமிழனாய், கவிங்கனாய், சுதந்திர போராட்ட வீரனாய், மனிதனாய் வாழ்ந்தவர்.

பார்ப்பனிய அடக்கு முறைகளையும், மூட நம்பிக்கைகளையும் உடைத்தெறிந்தவர். நிறவெறி, சாதிவெறி என்ற அடிமைத் தனத்தை அகற்றிட முயன்றவர். தாழ்த்தப்பட்டோருக்கு பூணுல் அணிவித்தார், பெண்கள் சுதந்திரம் கிடைக்க வழிவகை செய்தார். இவரை என்றுமே தமிழனோ, தமிழ் மக்களோ ஒதுக்கியதில்லை, தலையில் வைத்து கொண்டாடுகிறோம்.

ஆனால் வானமே எல்லை என்று ஒரு படம். பாலச்சந்தர் அவர்களது சமூக சிந்தனையுள்ள, இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும் படம். அதில் ஒரு காட்சி சமூகத்தால் பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவன் பாரதி சிலையின் கீழ் அமர்ந்து அந்த சிலையை பார்த்து சொல்லும் ஒரு வசனத்தின் வரி

"ஐயரே என்ன ஐயரே? " என்று ஆரம்பிக்கும்

இப்பொழுது சொல்லுங்கள் சாதியே கூடாதென்று போராடிய பாரதி ஒரு பார்ப்பனர் என்று காட்டவேண்டிய அவசியம் என்ன? அவருக்கு தந்த மரியாதைதான் என்ன? இதைத்தான் பார்ப்பனியம் என்று சொல்கிறேன். இதைத்தான் நாங்கள் எதிர்க்க முயல்வது.


19ம் நூற்றாண்டின் தமிழ்ச் சேவையில் தமிழ் தாத்தா உ.வே.சுவாமிநாத ஐயரின் சேவைக்கு தமிழினம் என்றென்றும் கடமை பட்டது. இவரும் ஒரு பார்ப்பனியர் என்று தமிழினம் ஒதுக்கிவிடாது மதிப்பளித்துக் கொண்டுதான் இருக்கிறது. தமிழ் இருக்கும் வரை இவர்கள் பெயரும் நிலைத்திருக்கும். இவரை எம்மினம் பார்ப்பனராக பார்க்கவில்லை நினைக்கவில்லை தமிழர் என்று மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

எனக்கும் பிராமின் நண்பர்கள் பலர் உண்டு. அவர்களும் எனக்கு தெரிந்தவரை பழக்க வழக்கங்களில் வேறுபாடு காண்பதில்லை. சாப்பிட்டு, தூங்கி, பல நாட்கள் தங்கி இருந்து என் மனம் கோணாமல், நான் நினைத்துவந்தது தவறு என்று என் எண்ணத்தை உடைத்தெறிந்த பிராமின் குடும்பங்களையும் நான் பார்த்து பழகி இருக்கிறேன், பழகிக் கொண்டும் இருக்கிறேன்.

பழக்க வழக்கங்களில் எப்பொழுதும் பிரச்சனை என்று எனக்கு தோன்றியதில்லை ஆனால் வாழ்க்கையில் சில முக்கியமான சூழ்நிலைகளில், சந்தர்ப்பங்களிலும் எவ்வளவு பழகியவர் ஆனாலும் பார்ப்பனர் அல்லாதவர் என்னும் பச்சத்தில் கழட்டி விடப்படுவார்கள், நானும் கழட்டிவிடப் பட்டுள்ளேன், பல விடயங்களில் காட்டிக் கொடுக்கவும் பட்டிருக்கிறேன்.

திறமை இருந்தும் பழகிய, உயிர் நட்பு என்று சொல்லிய பார்ப்பனிய நண்பனே என்னை ஒதுக்கிவிட்டு திறமையில்லாத, முன்பு எப்போதும் பழகியிருந்திராத வேறு ஒரு பர்ப்பனியனை தூக்கிவிட்டான், இதுபோல் இன்னும் ஆயிரம் ஆயிரம் அனுபவங்கள். இதைத்தான் நாங்கள் பார்ப்பனியம் என்கிறோம், எதிர்க்கிறோம்.

தமிழனைப் பொறுத்தவரையில் தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் செய்பவர்கள் எந்த இனத்தவராய் இருந்தாலும் அனைவரும் தமிழரே, பிறப்பால் தமிழனாய் இருந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கு துரோகம் செய்பவன், தமிழனே இல்லை என்பதை முழுமையாக நம்புபவன் நான்.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய