உலக வரலாற்றில் இதுவரை மனிதனுக்கு சொல்லப்பட்டதெல்லாம் மிகப் பெரிய வல்லரசோ, பேரரசோ உண்டென்றால் அதன் பின்னால் மிகப் பெரிய துரோகச் செயல்களும், வஞ்சகங்களும் நிச்சயாமாக வெளி உலகிற்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ அரங்கேற்றப் பட்டிருக்க வேண்டும்.
இது போன்ற துரோகங்களும், வஞ்சகங்களும், ஈவு இரக்கமற்ற மக்கள் அழிப்புகளும் இல்லாமல் ஒரு வல்லரசு உருவாக முடியாது என்பதே இதுநாள் வரையில் வரலாறு சொல்லும் உண்மை.
அலெக்சாண்டர், முகமதுமூர், செங்கிஸ்கான், கிரேக்கப் பேரரசு, மங்கோலியர் ஆட்சி, டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேய ஆட்சி, முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், வியட்நாம் போர், கொரியா போர் என்று அனைத்து காலகட்ட வல்லரசுகளும் மிகப் பெரிய அழிவுகளையும், நாசங்களையும் விளைவித்தே உருவாகின.
இதில் முதல் உலகப்போரில் இருந்து இரண்டாம் உலகப்போர் வரை அதிகம் செலுத்திய ஜெர்மனியின் நாசிக் கட்ச்சியின் வல்லரசு ஆட்சிக்கு காரணம் தன் சொந்த நட்டு மக்களின் இன அழிவுக்கு பின்னரே.
ரஷ்யா என்னும் வல்லரசு உருவானது ஜெர்மனியின் அழிவில்தான். அமெரிக்க என்னும் வல்லரசு உருவானது ஜப்பானின் ஐந்துலட்ச மக்களில் கொடூர சாவில்தான். அதுவும் போர்ல் ஹார்பர் என்னும் துறைமுகத்தை தாக்கியதற்கும், உலக யுத்தம் முடிந்த பின்னர் அணுகுண்டை பரிசோதித்து பார்க்கவும் ஐந்துலச்ச மக்களை கொன்று அமெரிக்கா வல்லரசானது.
சீனாவும், அமெரிக்காவும் தங்களின் வல்லரசு ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும், தங்கள் ஆளுமைப் போட்டிக்காகவும் ஏற்படுத்தப் பட்டதே கொரியா போர். சீனா வட கொரியாவிற்கும், அமெரிக்கா தென்கொரியாவிற்கும் சாதகமாய் இருப்பதுபோல் இருநாடுகளும் தங்களில் யார் பெரியவன் என்று நிருபிக்க அந்த இரு நாடுகள் அழிவில் மூழ்கிப்போயின.
இதே போல் இன்று இந்தியாவும் தெற்காசியாவில் தான் ஒரு மிகப் பெரிய வலிமை வாய்ந்த நாடு என்பதை நிருபிக்க பல அழிவு செயல்களை சத்தமில்லாமல் அரங்கேற்றியது.
பாக்கிஸ்தானிடம், சீனாவிடம் எல்லைப் பிரச்சனை என்று இருக்கும் அதே வேலையில். பங்களாதேஷை பாக்கிஸ்தானிடம் இருந்து பிரித்துக் கொடுத்தது. இலங்கைக்கும், சீனாவிற்கு இடையில் உள்ள உறவு பெரும் பிரச்சனையாய் இருக்க, இலங்கையில் இருந்த ஈழத்தமிழர் பிரச்சனையில் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி கொடுத்து, ஆயுதங்கள் வழங்கி உதவிசெய்தது.
பின்னாளில் அதே இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தமிட்டுக்கொண்டு அமைதிப் படையனுப்பி புலிகளையும் தமிழ் மக்களையும் அழிக்க முயன்றது. தமிழ்நாட்டு மக்களின் போராட்டத்தை தொடர்ந்து அமைதிப்படையை திரும்பப் பெற்றுக்கொண்ட இந்தியா, ராஜீவ் காந்தியின் கொலைக்கு பின்னர் புலிகள் இயக்கத்தை தடை செய்ததோடு முற்றிலும் தமிழ் ஈழ மக்களுக்கும் தமிழ் நட்டு மக்களுக்கும் எதிராக செயல்படத் தொடங்கியது.
அன்றுமுதல் விடுதைப் புலிகளுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் எண்ணங்களுக்கும், வேண்டுகோளுக்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உதவி செய்து, புலிகளையும், ஈழமக்களையும், அழித்தொழித்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வெறுப்பில் நீந்துவதோடு இல்லாமல் சொந்த நட்டு மீனவர்களை கொலை செய்யும் இலங்கை அரசை கண்டிக்காமல் அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் செயல் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலாகும்.
இப்படி தன நாட்டு மக்களில் ஓர் இனத்தை உதாசீனப் படுத்தி, அதே இன மக்களை அழித்தொழிக்க உதவி செய்த ஈவு இரக்கமற்ற இந்த இந்தியா நிச்சயம் ஒரு வல்லரசு நாடுதான் என்பதில் துளியும் ஐய்யமில்லை.
ஆனால் ஒன்று மட்டும் நினைவில் கொள்ளவேண்டியது இந்தியாவிற்கு மிக அவசியமாகிறது. இப்பொழுது வல்லரசாய் திகழும் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் ஒரே மக்கள் ஒரே மொழி ஆனால் இந்தியா அப்படி இல்லை உண்ணும் உணவில் இருந்து பேசும் மொழி வரை அனைத்தும் வேறுபட்டு இருக்கிறது என்பதை மறக்காமல் நினைவில கொள்ள வேண்டும்.
அதேபோல் ஒரே மொழி ஒரே மக்களாக இருந்து வல்லரசாய் திகழ்ந்த ரஷியாவே இன்று சிதறிக் கிடக்கிறது என்பதை இந்தியா உதாரணம் கொள்ளவேண்டும். இல்லையென்றால் இந்தியா வல்லரசு என்பது...........................?
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தை நான் அறிய