Wednesday, September 21, 2011

நாம் இந்துக்களே அல்ல

இன்றை திராவிட நாட்டின், திராவிட மக்களின் அழிவிற்கு முக்கிய காரணம் இந்த இந்துத்துவாவும் என்றால் மிகையாகாது. குறிப்பிட்ட வகுப்பினரால் புகுத்தப் பட்ட இந்த இந்துத்துவாவினால் வளர்ந்தது மூட நம்பிக்கைகள் மட்டுமே.

கடவுளை காட்டி உயிர் பயமும், வாழ்க்கை பயமும் கொணர்ந்து, சாதிகள் பிரிக்கப்பட்டு தெய்வத்தின் பெயரால் நாம் அடிமை படுத்தப் பட்டுள்ளோம். உழைப்பு என்பதை உயிர் மூச்சாய் கொண்டிருக்கும் நம்மை உழைக்காமல் உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு பிறரை ஏய்த்துப் பிழைக்க கற்றுக்கொண்டது ஒருகூட்டம்.

உதாரணமாய் பொங்கல் பண்டிகையில் அவர்கள் முன்னுரிமை கொடுப்பது மாட்டுப் பொங்கலுக்கே, பெரும்பொங்கலுக்கு அல்ல ஏன்? அவர்களைப் பொறுத்தவரை விவசாயம் என்பது பாவத்தொழில். அதே போல் எந்த ஒரு பார்ப்பனர் வீட்டிலும் கருப்பு சாமியையோ, ஐய்யநாரையோ, முனிசுவரனையோ, மாடசமியையோ அல்லது சங்கிலிக் கருப்பனையோ வைத்து வணங்கியதுண்டா. இவ்வளவு நம்மை இழிவு படுத்தும் அவர்களது கோவில், கடவுள், இதிகாசங்களை நாம் ஏன் தலை வைத்து தூக்கி வைத்து ஆட வேண்டும். காவிரிப் பிரச்னைக்கு போராட வருவார்களா? சேதுசமுத்திர பிரச்னைக்கு? தமிழீழ பிரச்னைக்கு? எந்தபிரச்சனைக்கும் வராத பார்பனர்கள் பிரச்சனைக்கு இந்துக்கள் என்ற பெயரில் முட்டாள் தனமாய் காலத்தில் குதித்து இறப்பது நாம மக்களே அவர்கள் இல்லையே? சூத்திரன் என்று நம்மையும் நமது கலாச்சாரத்தை ஒதுக்கித்தள்ளும் அவன் பிரச்சனை என்று வந்தால் இந்துக்கள் என்று நம்மை செய்த்துக் கொள்கிறான். இந்த பித்தலாட்ட நாடகத்தில் நசிங்கிப் போவது நம் மக்களே, அந்த வஞ்சகர் கூட்டம் இல்லையே.

பெரியார் கடவுளை இல்லை என்று சொன்னதன் காரணமும் இதுதான். கடவுளை கொணர்ந்தவன் பாகுபாட்டை விதைத்தான். பார பட்சம் பார்ப்பவர் கடுவுளா? மனிதனை வேறுபடுத்தி பார்ப்பவர் கடவுளா? நாம் தொடக்கூடாது அவர்கள் மாட்டும் தொடலாம் என்றால் அது எப்படி உண்மையான கடவுளாக இருக்க முடியும்?

நமது மொழி அவருக்கு புடிக்காது, இந்த மொழிதான் பிடிக்கும், இந்த மொழியில் அர்ச்சனை செய்தால் தான் ஆசி வழங்குவார் என்றால் அது கடவுளா? இல்லை கடவுளின் பெயரால் நம்மை ஏமாற்றி திங்கப் பார்க்கும் கயவர் கூட்டத்தின் கட்டுக்கதையா?

சாதிகள் மன்னர்கள் காலத்தில் உருவாக்கப் பட்டதுதான். அவை சாதிகளாக பார்க்கப் படவில்லை அரசின் மேலாண்மைக்கும், ஆளுமைக்கும் பகுக்கப்பட்ட அங்ககள் ஆகும். பணிகளை பிரித்து விரைவில் முடிக்கவும், மக்களுக்கு செயலபாடுகள் அதிவிரைவில் சென்றடையவும், ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு வகுப்பு பிரிக்கப்பட்டு, தலைமுறை தலைமுறையாக தொடர்ந்தனர் அதை அவர்கள் பெருமையாகவும் கருதி வந்தனர். ஆனால் இந்த பிரிவுகளில் ஏற்ற இறக்கம் கொணர்ந்து உயர்வு தாழ்வை உருவாக்கி, தீண்டாமை, நிறக் கொள்கை என்று பிற்காலத்தில் கடவுளின் பெயராலும், மூட நம்பிக்கைகளாலும் ஒவ்வொரு மனதிலும் விதைக்கப்பட்டது.

அந்த விதை நச்சு விதைகளாக மற்றப் பட்டு பிரினை வாதம் முளைவிடத் தொடங்கியது. நாம் ஒற்றுமையாய் இருந்த காலத்தில் அவர்கள் வைணவம், சைவம் என்று அடித்துக்கொண்டார்கள். பிற்காலத்தில் சாதிகளின் மூலம் நம்மை அவர்கள் பிர்த்துவிட்டு இன்று அவர்கள் ஒற்றுமையை இருந்துகொண்டு சாதி, மதம் இரண்டையும் பயன்படுத்தி பிரிவினையில் அவர்கள் குளிர்காய்கின்றனர்.

காவல் துறையில், ராணுவத்தில், விவசாயத்தில் அவர்களைக் காண்பது அரிது. ஆனால் ஆளும் வர்க்கப் பதவிகளில் மட்டும் அவர்களுக்குத்தான். போதும் மறைமுக அடிமையாய் நாம் இருந்தது போதும் இந்த பாகுபாடு வேண்டாம், சாதி வெறி வேண்டாம், இந்த இந்துமதம் என்கிற கண்கட்டு வேண்டாம். அப்படி உங்களால் விட முடிய வில்லை என்றால் உங்கள் வீட்டுக் குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள், வெளியில் கொணர வேண்டாம்.

ஏற்கனவே நம் வரலாறு மற்றும் பண்பாடுகள் பல அழிக்கப் பட்டு விட்டன. தமிழ்ப் புத்தாண்டு எது என்று தமிழனுக்கே குழப்பம், நமது சல்லிக்கட்டிற்கு தடை விதித்தாயிற்று, தமிழின மக்கள் சோமாலியர்கள் என்று புதுக்கதை திணிக்கப் படுகிறது. சாதியை கொணர்ந்தது சோழர்கள் என்று நம் மீதே பழி போடத் தொடங்கிவிட்டனர்,

இலங்கை என்பது வேறு நாடு அதற்கும் இந்தியா என்பதற்கும் தொடர்பில்லை என்று தமிழனே பேசும் அளவிற்கு வரலாறு மறைக்கப் பட்டு விட்டது. இன்றைய தமிழ் மக்கள் பெரும்பாலானோருக்கு தெரிந்தது எல்லாம் ராஜராஜன் சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டினார், ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுர கோயிலை கட்டினார், பாண்டியன் மதுரை மீனாச்சி அம்மன் கோயிலை கட்டினார், பல்லவர் மகாபல்லிபுறக் கோயிலை வடித்தார், 1947 சுதந்திரப் போராட்டம் இந்திய 15 சுதந்திரம் வாங்கியது. இதுதான் ஒட்டுமொத்த தமிழ் வரலாறா? இல்லை இவ்வளவுதான் உண்மையா? தமிழனுக்கே சந்தேகம். தமிழன் ஒன்று பட்டு விடக் கூடாதென்றும், தமிழன் தன்னை உணர்ந்து விடக் கூடாது அப்படி உணர்ந்து விட்டால் அவன் திறமை, நீதி, நேர்மை போன்ற விடயங்களால் பலர்க்கு பல பிரச்சனைகள் வரக்கூடும் என்பதனாலும் நமக்குள் பிரிவினை மீண்டும் மீண்டும் தூண்டப் பட்டு வருகிறது.

நமக்கு ஏன் சாதிக் கட்சிகள், நமக்கு ஏன் தனி இட ஒதுக்கீடுகள். பள்ளிகளில் இன்னமும் ஏன் என்ன சாதி என்ற கேள்வி. அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும் படி செய்துவிட்டால் இட ஒதுக்கீடு என்பதே தேவையில்லை இல்லையா? சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஒரே தரமான பாடங்கள் வசதிகள் இருந்துவிட்டால் தாழ்த்தப் பட்டவர் ஒருக்கப் பட்டவர் பிற்படுத்தப் பட்டவர் என்னும் வேற்றுமை இல்லாமல் அனைவருக்கும் ஒரே விதத்தில் என்று இருந்துவிட்டால் வேறுபாடு குறையுமல்லவா? வேண்டுமானால் ஒரே ஒரு வேறுபாட்டை வைத்துக்கொள்ளலாம் திராவிடர் மற்றும் பார்ப்பனர் என்று.

இந்த ஒரு வேறுபாட்டை மட்டும் புரிந்து கொண்டு நாம் ஒன்றிணைந்தாலே போதும். தமிழ்நாடும், தமிழினமும் தழித்தோங்கும். தமிழ் நாட்டை முதலில் ஒரு தமிழன் ஆளட்டும். தமிழன் தவறு செய்தால் தமிழன் தண்டிக்கட்டும். கண்டவன் வந்து தண்டிக்க தமிழன் தட்டுகெட்டவன் இல்லை என்று நிருபிப்போம். முதலில் ஒரு தமிழன் என்பதை மனதில் கொள்வோம் பிறகு நீ எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுபோ.

மீண்டும் மீண்டும் சொல்வது இதைத்தான், இதுத்துவாவை கொஞ்சம் தள்ளி வைப்போம். மதத்தின் பெயராலும், சாதிகளின் பெயராலும் நாம் அடிமை படுவதை தவிர்ப்போம், தமிழராய் பிறந்தோம், தமிழராய் வாழ்வோம், தமிழராய் சாவோம், தமிழும் தமிழனமும் மட்டும் தழைத்து வாழட்டும் பலகோடி ஆண்டுகள்.


தமிழ்த்தாய் வாழ்த்து


நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!

---------------------------------------------------------------------------------------

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய