Thursday, September 8, 2011

உண்மையான தீவிரவாதம் என்பது இதுதான்


வல்லரசு இந்தியாவின் தலைநகரம் தில்லியில் குண்டு வெடிப்பு. அதுவும் நீதிவேண்டி நிற்கும் உயர்நீதிமன்றத்தில். 11 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் பலர்காயம். ஜனநாயக இந்தியாவின் அமைதியையும், வல்லரசு ஆவதைப் பற்றியும் பேசும் இந்த அரசியல்வாதிகளின் கண்டன அறிக்கையை தவிர நமக்கு கிடைத்தது வேறொன்றும் இல்லை.

இந்த குண்டு வெடிப்பிற்கு காரணம் என்று மீண்டும் பாக்கிஸ்த்தான் மீது திருப்பபட்டாலும். இந்திய பாதுகாப்புத்துறை அதன் மந்திரி ப.சிதம்பரம், காவல்துறை, புலனாய்வுத்துறை இவர்களெல்லாம் என்ன செய்கிறார்கள்? எதற்கு இத்தனை அதிகாரிகள் அவர்களுக்கு வசதிகள், சம்பளம் என்பதெல்லாம் எதற்கு என்று எனக்கு புரியவில்லை?

நான் நினைப்பதெல்லாம், குண்டுவெடிப்பு நடந்தபிறகு அந்த இடத்திற்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கவும், என்ன வகையான குண்டு?, எப்படி வெடித்தது? என்பவற்றை கண்டுபிடிக்கவும், அறிக்கை விடவும், கண்டனம் தெரிவிக்கவும், அப்பாவிகள் யாராவது சிக்கினால் இவர்தான் முழு காரணம் என்று தூக்குதண்டனை கொடுக்கவுமே இவர்கள் இருக்கிறார்களோ? என்று நினைக்க தோன்றுகிறது.



வட இந்தியாவில் எதாவது நடந்தால் பாக்கிஸ்த்தான், மத்திய இந்தியாவில் எதாவது நடந்தால் நக்சலைட், மாவோயிஸ்ட் தென்னிந்தியாவில் எதாவது நடந்தால் விடுதலைப் புலிகள் .... ஓ.... இப்பொழுதுதான் புலிகள் இல்லையே? அப்படி என்றால் தென்னிந்தியாவில் எது நடந்தாலும் தமிழர்கள் தான் காரணம் என்று சொல்வதே ஒரு வழக்கமான பணியாகவே இருக்கிறது இந்த இந்திய பாதுகாப்பு துறைக்கு.

இதை சொல்லிவிட்டு அந்த இனத்தையோ அல்லது குற்றம் செய்தவர்களால் அவர்கள் அறியாமலே சம்மந்தப் பட்டவர்களாகவும் இருந்தால் தூக்கு தண்டனை என்று இப்படியே நீங்கள் நாட்டை ஏமாற்றிக் கொண்டிருந்தால் நாளைக்கு உங்கள் வீட்டில் உள்ளவர்களும் தவறு செய்யாமலே தண்டிக்கப் படலாம்.

எந்த ஒரு விடயமாக இருந்தாலும், எவ்வளவு பெரிய குற்றமாக இருந்தாலும் நடப்பதற்கு முன்பே தடுக்க முயலுங்கள். அதற்காகத்தான் உங்களுக்கு உளவு பயிற்சி, ஆயதப் பயிற்சி, போர்ப்பயிற்சி என்று பலகோடிகள் செலவழித்து செய்யப்ப படுகிறது.


இவை அனைத்தும் தவறுகளை முன்கூட்டியே நடக்காமல் தடுப்பதற்கும், அப்படி நடந்துவிட்டால் நேர்மையாய் விசாரணை செய்து, அந்த குற்றத்திற்க்கான ஆணி வேரை கண்டறிந்து அவர் எவ்வளவு பெரிய அதிகாரியாய் இருந்தாலும், எந்த மதத்தினறாய் இருந்தாலும், உண்மையான தண்டனை வாங்கித்தருவதை விட்டுவிட்டு சாவு எண்ணிக்கையை சொல்லவும், அப்பாவிகளை தூக்கில் ஏற்றவும் இல்லை என்பதை நன்கு புரிந்துகொள்ளுங்கள்.

இல்லை என்றால் இந்த சுப்ரமணிய சுவாமி, சந்திராசுவாமி போன்ற ஆட்கள் நீங்கள் இதற்க்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருப்பார்கள். இதுவே பி.ஜே.பி ஆட்ச்சியகவோ அல்லது இதை செய்தது ஆர்.எஸ்.எஸ் இயக்கமாகவோ இருந்திருந்தால், இவரைப் போன்றவர்கள் எங்கு இருப்பார்கள் என்றே கண்டுபிடிக்க முடியாது.


பாக்கிஸ்த்தான் போன்ற நாடு உருவானதும் இவர்கள் போன்றவர்களால்தான், இந்தியாவில் மதக் கலவரம் உருவானதும் இவர்களால்த்தான், பல அப்பாவி மக்கள் இறந்ததும் இவர்களால்த்தான். செய்வது அத்தனையும் செய்து விட்டு அறிக்கை விடுகிறார்களாம், அறிக்கை.

யாருக்கு வேண்டும் இந்த அறிக்கைகளும், கண்டனங்களும். உண்மையில் அவர்கள் தவறே செய்திருந்தாலும் உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. சட்டமும் நீதியும் செய்யட்டும் கடமையை, உன்னை போன்றவர்கள் தலையிட்டு அதனை கெடுக்காமலோ அல்லது தவறாக பிரயோகம் செய்யாமலோ இருந்தாலே போதும்.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய