Monday, September 5, 2011

ராஜபக்சே நியாயம் பேச உனக்கு அருகதை இல்லை

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்துவிட்டு மனிதஉரிமையை பற்றி பேசக் கூடாது என்று ஐரோப்பிய நாடுகள்மீது இனக் கொலையாளி ராஜபக்சே கொந்தளித்துளார். நீதி நியாயம் நேர்மை தர்மம் பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது மனிதவடிவில் உள்ள மிருகமே.

பேருந்தில் ஒரு வாசகம் அழிக்கப் பட்டதற்கு பலியான உயிர்கள் எத்தனை? அப்பொழுது நீ இலங்கையில் இல்லையா? அதிகாரப் பகிர்வு என்று கேட்ட சிறுபான்மையினறாய் இருந்த எம்மக்கள் கொளுத்தப் பட்டபோது எங்கே போனது உன் தர்மம்? குழந்தைகள் கொள்ளப் பட்டப்போது, பெண்கள் கற்பழிக்கப் பட்டபோது, ஆண்கள் வதைக்கப்பட்டபோது விடுதலைப் புலிகள் இல்லையே? பிரபாகரன் என்ற ஒரு போராளி உருவாகவில்லையே?

நமது அருகில் உள்ள இந்திய தேசம் காந்திய வழியில், அகிம்சை முறையில் விடுதலை கொண்டது, நாமும் அவ்வாறே போராடுவோம் என்று கூறி (அதிகாரப் பகிர்வுக்கு மட்டும் தனி நாடு வேண்டி அல்ல) தந்தை செல்வா தலைமையில் உண்ணாவிரதம் இருந்த கூட்டத்தை அடித்து கொன்று குவித்தபோது விடுதலைப் புலிகள் இல்லையே?

கருப்பு சூலை என்பதை நீ நிச்சயம் அறிந்திருப்பாய், ஏன் நீயே கூட அதில் பங்கெடுத்திருக்கலாம் யார் கண்டது? அப்படி கொடூரத்தை நிகழ்த்திய மக்களின் தலைவனான நீ பேசக் கூடாது, நியாயம் தர்மம் பற்றி. உலகின் கொடூரன் ஹிட்லர் கூட ரஷ்யாவின் மீது குண்டுவீசும்போது நூல் நிலையங்களையோ அல்லது மருத்துவமணைகளையோ தாக்க வேண்டாம் என்று கூறியவன். ஆனால் நீயும் உனது முன்னால் தலைவர்களும், இனவெறி பிடித்த உமது மக்களும் அழித்த தமிழ் நூலகம் எத்தனை அத்தனை? மருத்துவமணைகள் எத்தனை? பள்ளிகள் எத்தனை? அதில் கருகிப்போண பாவமாரியாத இளம் பிஞ்சுகள் எத்தனை?

எம்மினத்தலைவன் இதுவரை அப்படி ஒரு இழிவான காரியத்தை செய்ததில்லையடா கயவனே. மக்களை அழிக்க நீங்கள் ஏவிய ஈவு இறக்க இல்லாத இராணுவத்தையும், அதற்க்கு காரணமானவனை மட்டும்தானடா ஒழித்து மக்களை காக்க முயன்றான். தமிழின மக்கள் வாழும் பகுதியை மட்டும் பாதுகாத்துக் கொண்டானே தவிர உங்க மக்கள் வாழும் பகுதியையும் சேர்த்துபிடித்து அழிக்க நினைக்கவில்லையடா இனவெறி மிருகமே. உனக்கென்ன தகுதி இருக்கிறது நியாயதர்மம் பேச?

கண்ணியம் மாறாமல், கடமை தவறாமல் ஒழுக்கக் கட்டுப்பாட்டோடு இருந்த மக்கள் போராளி இயக்கம் என்றால் இந்த உலகிலேயே விடுதலைப் புலிகள்மட்டும் தானடா கயவனே? உனது ராணுவம் குதறிஎறிந்த தமிழ்ப் பெண்கள் எத்தனை? எம் போராளிகள் எப்பொழுதும் இதுபோல் தரம் தாழ்ந்தவர் இல்லையடா உன் நாய்களைப் போல். தலைவனாய் இருந்தபோதிலும், தான் தொடங்கிய இயக்கம் என்றபோதிலும் சொகுசு வாழ்க்கை வாழாமல் அவரது இயக்க போராளிகளைப் போலவே மாத வருமானம் வாங்கி வாழ்ந்தவன் எங்கள் தலைவனடா எருமையே! யாரை தீவிரவாதி என்கிறாய்?

இதே ராஜீவ் காந்தியை உங்கள் நாட்டில் நீங்கள் கொள்ள முயன்றபோது நீ என்ன செய்து கொண்டிருந்தாய் கேடுகெட்ட ஜென்மமே? நீ என்ன அவர்களை பற்றி பேசுவது?

வெள்ளை கொடிஏந்தி சரணடைய வந்தோரை போர் தர்மமும் இல்லாமல், மனு தர்மும் இல்லாமல் மனிதாபிமானமும் இல்லாமல் சுட்டுக் கொன்ற நீ என்ன சொல்வது அவர்கள் பேசக் கூடாதென்று?

தமிழருக்கு துரகம் செய்த இந்தியாவும், மதத்தின் பிணைப்பில் உள்ள சீனாவும் இல்லையென்றால் உன்னால் விடுதலை புலிகளை வென்றிருக்க முடியுமா? அமெரிக்காவின் பத்துவருட தீவிரவாதப் போராட்டத்தை பழிக்கும் நீ முப்பது வருடம் என்ன செய்தாய் மாவீரனே

தீவிர வத்துக்கும், மக்கள் போராட்டத்திற்கும் வித்தியாசம் தெரியாத அதிபரே பார் தெற்குசூடானை பார் இருபத்தைந்து வருட ஆயதப் போரட்டதிர்க்குபின் இன்று விடிவெள்ளியாய் முளைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிச்சத்தைப்பார். மக்கள் போர்க் குழுவிற்கு கிடைத்த வெற்றியை பார் லிபியாவை பார். யாரை தீவிரவாதி என்கிறாய்? அப்பாவி மக்களை கொன்றுகுவித்து கொக்கரிக்கும் நீ தீவிரவாதி, உன் இனம் தீவிரவாத இனம், உன் மக்கள் தீவிரவாதிகள். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்றுகொல்லும். நீ செய்த இனப் படுகொலைக்கு பாதிக்கப்பட போவது உன் நாடே, அவதிப் படப் போவது உன் மக்களே. எம் மக்களின் அவதியை, அழிவை இன்று ரசிக்கிறாய் அல்லவா? அதையும் நீயே பார்க்கப் போகிறாய்? அப்பொழுதும் உனக்கு உண்மக்களுக்கும் இறக்கம் காட்ட ஒரு தமிழன்தான் இருப்பானடா மூதேவி, இதுதான் தமிழனின் குணம் அதுவே அவனுக்கு அழிவின் பாதை. ஆனால் உனக்கு எந்த ஒரு அருகதையும் இல்லை யாரையும் குறை சொல்ல தகுதியும் இல்லை. செய்த தவறுக்கு தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் நீ. அந்நாளும் வெகு தொலைவில் இல்லை.


0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய