சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டு எழுத்தாளர்களும் கலையுலக கலைங்கர்களும் ஈழத்தை வியாபார நோக்குடன் அணுகுவதை கண்டித்து ஈழ உறவு (பதிவர்) பலர் வலியுடன் பதிவிட்டனர். அதற்காக மன்னிப்பு கோரியும் வியாபார நோக்குடயவரை தவிர்த்து உண்மை உணர்வாளர்களும் அதில் அலட்சியப் படுத்துத்த பட்டுவிடக் கூடாதே என்னும் நோக்கில் நான் எனதருமை ஈழத்து உறவுகளேயென்று ஒரு பதிவிட்டேன்,
அதில் தவறு செய்தவர்களுக்காக நான் மன்னிப்பு கோரியும், அதே வேலையில் உண்மை உணர்வாளர்களை காயப்படுத்தி விட வேண்டாம்யென்று கேட்டிருன்தேன், ஆனால் அதே பதிவிற்கு சில புல்லுருவிகள் என்னை வெறுப்பேற்றி, என் எண்ணத்தினை பிறழ்வு செய்வதாய் நினைத்து பின்னூட்டம் போட்டனர் அனானிமஸ் பெயரில்.

என்னே அவர்கள் வீரம், யார் இவர்கள்? ஈழம் பற்றி பேசினால் இவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது? நம்மை நோக்கி பின்னப்பட்ட சதிவலை இன்னும் இருக்கிறது யென்று சொன்னால் இவர்கள் ஏன் ஆதங்கப் படுகிறார்கள்? நான் புலிகளை மட்டும் ஆதரித்தோ, அல்லது போர் ஒன்றுதான் மீண்டும் வழி என்றோ பதிவிட்டிருந்தால் கூட இவற்றை பிடிக்காத யாராவது சிலர் எதிர்க்க காரணம் உண்டு, அப்படியே எதிர்த்தாலும் கூட அனாநிமசாய் வந்து வீரம் காட்டவேண்டிய அவசியம் இல்லை. அப்டி பட்ட இந்த மாவீரர்கள் ஏன் கோபப் படுகிறார்கள்?
அப்டிஎன்றால் இவர்கள் யார்? தமிழ் ஈழ கட்டமைப்பை பற்றியோ அல்லது தமிழர் ஒற்றுமையை பற்றியோ இவை இல்லாமல் ஒருமைபாட்டை வெளிக்காட்டும் வகையான பொதுவான, தமிழர் அல்லது ஈழத்தமிழர் என்று சொன்னாலோ இவர்களுக்கு இவ்வளவு கோபம் வரவேண்டிய அடிப்படைக் காரணம் என்ன?

இவர்கள் இடும் பின்னூட்டம் எல்லாம் பிரிவினையை தோற்றுவிக்க வேண்டும் என்ற நோக்கிலோ அல்லது இணைய ஊடகத்தில் தமிழ் ஈழ கட்டமைப்பை, ஈழமக்களின் நம்பிக்கையின் ஒற்றுமையை குலைக்கும் நோக்கிலோ இருப்பதாய் தோன்றுகிறது.
இதுபோன்ற கயவர்களின் கைகரியமே நமக்கெதிராய் பின்னப்பட்ட சதி வலை கண்ணுக்குத் தெரியாத இழையினூடாய் இருப்பது புலப்படுகிறதே. இவர்கள்தான் அந்த சதிவலையின் சிலந்திக் குட்டிகள். அதில் சிக்குபவரை சின்னாபின்னப் படுத்துவதும், வலை எங்கேனும் பலமிழந்தால் அதை பலப் படுத்துவதுமே இந்த குட்டி சிலந்திகளின் தலையாய வேலை.

இதற்கான தலைமை கைக்கூலியாய் இருக்கும் தின்று கொழுத்த விசசிலந்திகள் இலங்கையிலோ, மேற்கத்திய நாடுகளிலோ ஏன் தமிழ்நாட்டிலோ கூட இருக்கலாம், அனால் எங்கு இருந்துகொண்டு என்ன சதி செயல்கள் செய்தாலும் அநியாயம் என்றுமே வென்றதில்லை.
தமிழனின் நம்பிக்கையே நீதியும், நியாயமும் என்றைக்கும் சாவதில்லை என்பதுதான். அப்படி பட்ட நீதியும் நியாயமும் அவனுக்கு கிடைக்காமல் போய்விடுமா என்ன? உங்களால் முடிந்தவரை எவ்வளவு வஞ்சகமும் நரித்தனமும் செய்ய முடியுமோ செய்துபாருங்கள். ஆனால் ஒன்றுமட்டும் சொல்லிவிடுகிறேன் காலம் இப்படி போகாது, நிச்சயம் மாறும் விடிவு ஓர்நாள் வந்தே தீரும். அன்று இந்த சிலந்திகள் இருக்கும் இடம், தடம் தெரியாமல் போகும்.

ஆசைகளால் அடுக்கப்பட்ட
வாழ்க்கையிது
முறிக்கப்படும் பொழுதோ!
பறிக்கப்படும் பொழுதோ!
துன்பம் தலைவிரித்தாடும்
துக்கம் தொண்டையடைக்கும்
கனவுகள் கசக்கப்பட்டு
காகிதமாய் குப்பையில்
வீசப்படும்
துயரம் உன்னைத் துரத்தும்
எதுவுமே! எவருமே வேண்டாம்
என்ற எண்ணம் ஊற்றெடுக்கும்
மெய்ஞானம் மெல்ல விடைகொடுப்பதுபோல்
நன்கு நடிக்கும்
சித்தாந்தம் சில நேரம்
தலைகாட்டிச் சிரித்துவிட்டு
சிதறிவிடும்
நமக்காக ஒருவருமில்லை
என்கிற எண்ணம் எழுந்து
மேலே நிற்கும்
அறுபட்ட காத்தாடியாய்
மனம் அலைக்கழிக்கும்
ஆழிப்பேரலையாய்
அத்திரம் ஆர்ப்பரிக்கும்
துள்ளியெழுந்து மேலும்
துயரப்பட்டுவிடாதே
கண்ணீரில் கண்களைக்
கழுவிவிடு சிவந்து போகட்டும்
நாவு வறண்டு போகட்டும்
கண்ணீரை விலைக்கொடுத்து
அமைதியை வாங்கு
ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும்
ஆயிரம் ஆயிரம் நம்பிக்கையை
உருவாக்கும்...
ஒவ்வொரு இனத்திற்கும் பலவிதமான குறைபாடுகள் உண்டு. அதில் சில அவற்றிற்கு பெருமளவில் பாதிப்பை உண்டாக்குவதில்லை. ஆனால் சில இனங்களின் பலவீங்களாக இருக்கும் சிறு சிறு குறைபாடுகள் அந்த இனத்தையை அழிக்கும் நிலைக்கு தள்ளிச் செல்கிறது. அது புரியாமல் இன்னும் அதே பலவீனங்களை கட்டிக்கொண்டு அழும் பாழாய் போன இனங்களில் இப்பொழுது தமிழினமும் இணைந்துவிட்டதோ? என்று நினைக்கத் தோன்றுகிறது.
சாதியம் - ஆலமரத்தை அடியோடு சாய்க்கும் ஆணிவேர் வியாதியாய், தமிழினம் தன் அருமை பெருமைகளை இழந்து, ஒற்றுமை இல்லாமல் ஒவ்வொரு கிளை ஒடிந்து விழுவதைப் போல சிறுகச் சிறுகச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பிரச்சனைக்காக ஒரு போராட்டம் நடக்கிறது, அது ஐந்து மாவட்ட மக்களின் வாழ்க்கை கேள்விக் குறியாவதால் அந்தப் போராட்டம், அதில் தலைமையாய் இருக்கும் இருவர் இரண்டு குறிப்பிட்ட சாதியினர் (நன்றாக படியுங்கள் - இருவரும் வேறு வேறு சாதி) இருப்பதால் இது மூன்றாவது சாதியினருக்கு எதிரான போராட்டம் என்று புறந்தள்ளுகிறது ஒரு கும்பல் சாதி என்னும் பெயரால். பாதிக்கப் படப் போகும் அந்த ஐந்து மாவட்டத்தில் உன் சாதி என்று சொல்லிக்கொள்ளும் குடும்பம் ஒன்றாவது இருக்காதா என்ன?
தாழ்ந்த வகுப்பை சார்ந்த ஒரு தலைவன் ஈழமக்களுக்காக போராட்டம் நடத்தினால் பிற சாதியின் பெயரால் இருக்கும் கும்பல் அதை அந்த தலைவனின் பெயரால் அல்ல அந்த தலைவரின் சாதியின் பெயரால் புறக்கணிக்கிறது.
அப்படி பார்த்தால் கூட தமிழன் எவன் ஒருவன் தலைவனாய் இருந்தாலும் அவன் எதாவது ஒரு சாதியை சேர்ந்தவனாய்த்தானே இருக்க வேண்டும்?. அதனால்தான் பலநாளாய் தமிழ நாட்டிற்கும் ஒரு தமிழன் தலைவனாய் இல்லையோ?
மதம் - சாதியம் தாண்டினால் மதம், மதம்.. மதம்... மதம்.. எப்படி இந்த சாதியப்பேய் தமிழனை கிறுக்கனாக்குகிறதோ, அதேபோல் இந்த மதம் அவனை மதம் பிடிக்கச் செய்கிறது.
கிறுக்கன் என்றாலே தாங்கமுடியாது, அதிலும் மதம் பிடித்த கிறுக்கன் என்றால் நினைத்துப் பாருங்கள். அப்படித்தான் இருக்கிறான் இன்றைய தமிழன்.
ஆயிரம் மக்களின் போராட்டம், அணுஉலை வேண்டாம் என்று, அந்தப் போராட்டத்தை உடைக்க எதிரி எடுக்கிற முதல் ஆயுதம், இந்த மதம் தான். இம்முறை அது செயலிழந்து போயிருந்தாலும், கர்ணம் தப்பினால் மரணம் என்பது போலத்தான். இங்கு நான் சொல்லவந்தது எதிரிக்கு வேண்டிய ஆயுதத்தை நாமே அவனுக்கு கொடுக்கிறோம் என்பதைத்தான்.
பொறமை - இது செல்லரிக்கும் புற்றுநோயைப்போல ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் அவனை அறியாமல் வளர்த்துக் கொள்வது. இது இப்பொழுது தமிழனிடம் அதிகமாகவே உள்ளது. நம் அண்டை மாநிலத்தவரை அப்படி இப்படி ஏளனம் செய்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை பார்த்து ஏளனம் செய்வது ஒன்றே ஒன்றுதான், இந்த பொறாமையினால் வரும் ஒற்றுமையின்மையைத்தான்.
உண்மையில் உங்களுக்கு அனுபவம் வேண்டுமானால் வெளிநாடுகளில் சென்று பணிசெய்து பாருங்கள். நான் சொல்வது உண்மையா? இல்லையா? என்று தெரியும்.
எவன் எப்படி வளர்ந்தாலும் பரவயில்லை, தன்னோடு இருக்கும் தமிழன் வளரக்கூடாது என்று ஒவ்வொரு தமிழனுக்கும் எண்ணம் எப்படித்தான் வருகிறதோ தெரியவில்லை? ஆனால் அவர்களோ உள்ளுக்குள் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும், நம் இனத்தானைத் தவிர வேறு ஒருவன் வந்துவிடக் கூடாது என்றுதான் நினைக்கிறான். அதனால்தான் அவன் ஆள்கிறான், நாம் அடிமைப் பட்டு அழுகிறோம்.

காட்டிக்கொடுக்க ஒரு கூட்டம், அதற்க்கு காரணம்கற்பிக்க ஒரு கூட்டம், பிரபாகரன் அவர்களை கைகாட்டும் இவர்கள், அல்பர்ட் துரையப்பா, கதிர்காமர், டக்லஸ் தேவானந்தா, மாத்தையா, கருணா போன்றோரை ஒன்றும் சொல்வதில்லை ஏன்? இவர்கள் இல்லாவிட்டால் பிரபாகரன் உருவாகியிருக்கவும் மாட்டார், இன்று கண்மறைந்திருக்கவும் மாட்டார். ஆனால் இந்த மக்கள் அழிவு மட்டும் கணடிப்பாக நடந்திருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக.
இந்தமாதரியான கோடரிக்காம்புகள் எண்ணங்களிலும் செயலகளிலும் உருவாவதேன்?
இப்படி பல.... தடைகளை தன் வாழ்வியல் ஆதாரமாய் கொண்டு வாழும் இன்றையத் தமிழன் இன்னும் எத்தனைத் தலைமுறைக்கு தாக்குப் பிடிப்பான்???????????
பி.கு. என்னை திட்ட நினைப்போர் திட்டலாம், தாராளமாய்
எதிரிகளும், துரோகிகளும் உன்னை தூற்றினால் நீ செல்லும் பாதை சரியான பாதை - தந்தை பெரியார்

ஒவ்வொருவன் உயிருக்குள்ளும் ஒரு உணர்விருக்கிறது. உணர்வு என்றால் என்ன என்றும் கிலோ எவ்வளவு? எங்கு கிடைக்கும்? என்று கேட்பவர்கள் எத்தனையோ பேர்.
இருப்பினும் தமிழன் தன் உணர்வை இன்னும் இழந்துவிடவில்லை, அது அழிந்தும் விடவில்லை என்பதை நிருபித்துக் கொண்டிருக்கிறான். ஈழம் முதல் இமையம் வரை தமிழனுக்கு பிரச்சனை. காரணம் தன்மானம், சுயகவுரவம், தனக்கென்று தனி அடையாளம், பெருமைகள், திறமைகள் என்று இருப்பதும், இவை இல்லாமல் அண்டிப் பிழைக்கும் சிலருக்கு அல்ல பலருக்கு இது கண்ணை உறுத்துவதே காரணம்.
தரணியில் தனித்தன்மையாய் விளங்குபவனே தமிழன். இதுபோன்ற தன்மைகளை எதுவும் இல்லாதவர்கள் கையில் இன்று அதிகாரம், ஆணவச் செருக்குடன் இருப்பதால், அவர்கள் அடிவாரத்தை ஆட்டிப் பார்க்கிறார்கள்.
இதுவரை வந்தவனையெல்லாம் வாழவைத்து, வாழ்ந்தவனையெல்லாம் நல்லவன் என்று நம்பியே இருந்த காரணத்தால், இன்று இவனுக்கு வாழ்வாதாரம் அழிந்துபோகும் நிலை உள்ளது. கண்டவன் நாட்டை ஆண்டு, இன்று நம்மை பிறரிடம் கையேந்தும் நிலைக்கு விட்டுவிட்டார்கள்.
மாநில எல்லை பிரிக்கும்போதும், வாக்குறுதிகள் பெறப்பட்ட போதும் தலைமையில் இருந்தவர்கள் ஏனோ தானோ என்றே இருந்திருக்கிறார்கள், அதனை நாம் உணராததன் விளைவு, ஈழம் மட்டும் அல்ல தமிழ்நாட்டிற்கே அழிவுகாட்ட நினைக்கிறார்கள். இத்தனை பிரச்சனைகளுக்கும் முக்கிய நோக்கம் தமிழன் தலையெடுக்க கூடாதென்றும் அப்படி ஓர் இனமே இருந்ததன் அடையாளம் இருக்கக் கூடாதென்று இருப்பதாய் புரிகிறது.


ஈழப் பிரச்சனைக்கும், கூடங்குளப் பிரச்சனைக்கும் இந்தியன் நான் இந்தியன் என்று வரிந்துகட்டிக் கொண்டு வந்தோரெல்லாம் இபோழுது எங்கே சென்றார் என்று தெரியவில்லை. இதோ பாருங்கள், இந்தியன் என்று பெருமைபேசி தமிழன் உணர்வுக்கு அணைபோட்டவர்களே பாருங்கள் "தமிழனின் உயிர் அணை" இன்று இல்லாமல் போகும் நிலை, இதற்க்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
இந்தியனாய் இருந்து ஈழத்திற்கு ஒன்றும் செய்ய முடியவில்லை?, இந்தியனாய் இருந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை?, பத்தாயிரம் கோடிக்குமேல் செலவுசெய்து ஆரம்பித்த சேது சமுத்திர திட்டம் முடிக்க இயலவில்லை?, காவிரியில் தண்ணீர்கொண்டு வரமுடியவில்லை?, இப்பொழுது வெடித்திருக்கிறது முல்லைபெரியறு அதனை அணைக்க முடியவில்லை?


ஐந்து மாவட்டங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி, பல்லாயிரம் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக் குறி? இத்தனைக் கேள்விக் குறிகளை எப்பொழுது நிமிர்த்தி அச்சரியக் குறிகளாக்கப்போகிறோம்?
இன்னும் இந்த இறையாண்மை ஒற்றுமை என்று பேசிப் பயனில்லை என்று ஆர்ப்பரிக்கிறது தமிழகம். எங்கு திரும்பினும் போராட்டம், மக்கள் வெள்ளம், இத்தனை மக்களுக்கு இருக்கும் உணர்வு போதும், இதுவரை இல்லாத இந்த எழுச்சிபோதும், தமிழனின் தலையெழுத்தை மாற்றியமைப்போம்,
ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்
காவிரி பிரச்சனை போராட்டம்
ஒக்கேனைக்கல் குடிநீர்த் திட்டப் போராட்டம்
தமிழ் ஈழமக்களுக்கான போராட்டம்
தமிழக மீனவர்களுக்கான போராட்டம்
மூவர் தூக்கிற்கு எதிரான போராட்டம்
கூடன்குள அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டம்
முல்லைபெரியாறு போராட்டம்
இன்னும் எத்தனை போராட்டம் நடத்த வேண்டும், தமிழன் தனது உரிமையை காக்க இத்தனைப் போராட்டமா? இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்காவது இத்தனை பிரச்சனை உண்டா? எல்லாவற்றிலும் போராட்டம் நடத்தவேண்டிய நிலைமையில் தமிழன் மட்டுமே இருக்கிறான் ஏன்?
யார் உணர்ந்தாலும் உணராவிட்டாலும் தமிழன் உணர்ந்துவிட்டான் என்பது உண்மை, உணர்ந்தவன் மட்டுமே உண்மைத் தமிழன், இனி தமிழருக்கு எதிராய் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும், விளைவுகள் விளைந்ததே தீரும். அகிம்சையில் நடக்கும் இப்போராட்டங்கள் அவமதிக்கப்பட்டால் விளைவுகள் வேறுவழியில் வெளிப்படும்.
ஒன்று மாநில எல்லை மறுஆய்வு நடத்த வேண்டி வரும் இல்லை என்றால் தனி நாட்டிற்க்கான எல்லை பற்றிய ஆய்வு நிறைவேற்ற வேண்டி வரும். எதற்கும் ஓர் எல்லை உண்டு, என்பதை நிருபிக்க வேண்டியும் வரும்.
ஓ........... இந்தியன் என்போரே, ஆர்ப்பரிக்கும் தமிழ்நாடு பாரிர்
தன்னை உணர்ந்துகொண்ட தமிழனைப் பாரிர்
வாழ்வாதாரம் காக்க போராடும் தன்மான மக்களின் அடையாளம் பாரிர்
உரிமையை நிலைநாட்ட உணர்ச்சிபொங்கி ஓரணியில் திரளும் எம்மக்களை பாரிர்
இனியும் இந்தியன் என்ற முகமூடி எதற்கு உமக்கு
உண்மைத்தமிழனாய் இரு ஆயிரம் இந்தியாவை நாம உருவாக்கலாம்.