Tuesday, January 3, 2012

இந்திய மொழிகளில் தமிழே முதன்மை

  தமிழ்
இந்தியாவின் பழங்கால நாகரீகம் சிந்துசமவெளி நாகரீகம். இதன் வயது சுமார் கிமு.2500 மேல் இருக்கும் என்பது ஆராய்ச்சி வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

 இது உலகின் தொன்மையான பல நாகரீகங்களுக்கு இணையானதாகவும், சிறப்பானதாகவும் இருந்திருக்கிறது என்பதில் சிறுதும் ஐயமில்லை. இங்கு கிடைக்கபெற்ற முத்திரைகளும் படிப்பதற்கு மிகக் கடினமாகவும், முத்திரை வடிவ மொழியாகவும் இருக்கிறது.


                                                                      
 இது தமிழ் பிராமி எழுத்துக்களே என்றும் இதுவரை உள்ள ஆராய்ச்சி கூறுகள் அதற்க்கு அத்தாட்சியாவும் இருப்பதை ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் கூறுகிறார்.



 ஐராவதம் மகாதேவன் அவர்கள் திருச்சியில் பிறந்து, செய்தித்தாள் ஆசிரியராக பணிபுரிந்து, ஆராய்ச்சியாளராக சிறப்புபெற்று பத்மஸ்ரீ விருது வாங்கியவர். இவரின் ஆராய்ச்சி கூற்று படி சிந்து சமவெளி நாகரீகத்தின் பயன்பாட்டு மொழியில் இருக்கும் குறியீடுக
ள் வலமிருந்து இடமாக எழுதப்பட்ட தமிழ் பிராமி வட்டெழுத்துக்களே என்றும், அதுவே திராவிட மொழிகளில் முதன்மையானது என்றும் குறிப்பிடுகிறார்.

இது சம்ஸ்கிருத வடிவம் கொண்டது என்னும் இன்னொரு கூற்று இருந்தாலும், அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை, சமஸ்கிருதம் ஆரியர்களால் கொணரப்பட்டது,
 ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்தது கிமு 1500 தான், அதனால் கிமு 2500 சிந்துசமவெளி நாகரீகத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் எவ்வித தொடர்பும் இருக்க முடியாது என்பதற்கு தொல்லியல் சான்றுகள் பல உள்ளன.



 ஆரியர்களின் வாழ்க்கை முறை குறிக்கும் நூலான ரிக்வேதம் கிராமப்புற வாழ்வை குறிப்பதாய் மட்டுமே உள்ளது, ஆனால் சிந்துசமவெளி நாகரீகம் நகரவாழ்க்கை பண்பாட்டை அடிப்படையாக கொண்டது எனவும், ரிக்வேதே அடிப்படியில் சிந்துசமவெளி நாகரீகத்திற்கும், ஆர்யா கலாச்சாரத்திர்க்கும் சம்ஸ்கிருத மொழிக்கும் உள்ள தொலைவு மிக அதிகமாக காணப்படுகிறது.

 அதிலும் முக்கியமாக ஆரிய கலாச்சாரத்தின் சிறப்பாக இருந்த குதிரை, சிந்துசமவெளியில் எங்குமே இடம்பெறவில்லை இந்தியாவில் குரிரை பற்றிய தெரிவு கிமு 1500 க்கு பிறகே வந்திருக்க வேண்டும், ஆதலால் இதுவரை சிந்துசமவெளியில் பயன்படுத்தப்பட்ட மொழி தமிழ் பிராமி வட்டெழுத்து மொழியே என்பதில் சிறிதும் ஐயமில்லை என்பது ஐராவதம் மகாதேவன் போன்ற ஆராய்ச்சியாளர்களின் நிருபிக்கப்பட்ட கூற்றாக இருக்கிறது.




 இதே போல் உலகின் மிச்சிறந்த பழமையும் பெருமையும் வாய்ந்த எகிப்த்து நாகரீகத்தின் அடையாளமாக கண்டெடுக்கப்பட்ட பானை ஒன்றில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்ப பட்டுள்ளன. தாய்லாந்து நாட்டிலும் தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கொண்ட பானை ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.


டிஸ்கி - இவ்வாறான இந்தியாவின் முன்னோடி மொழி தமிழ்மொழி என்றால் போதிதர்மர் மட்டும் எப்படி தமிழனாக இல்லாமல் போனார் என்பது எனக்கு புரியவில்லை.


நன்றி - கிமு கிபி (மதன்), google, விக்கிபீடியா, varalaaru.com 

16 comments:

  1. வணக்கம் நண்பா,
    பண்டைய வரலாறுகளின் அடிப்படையில் எம் தமிழ் மொழியின் வய்தினைச் சொல்லியிருக்கிறீங்க.
    எனக்கும் உங்களைப் போன்றே போதி தர்மர் விடயத்தில் இதே சந்தேகம் உண்டு.

    ReplyDelete
  2. சிறப்பான பகிர்வு

    ReplyDelete
  3. @நிரூபன் - வணக்கம் நிரு

    இது இதுவரை கிடைத்த ஆரய்ச்சி தகவல் படித்தான், இன்னும் வெளிவராத உண்மைகள் எவ்வளவோ யார் அறிவார், அது அந்த தமிழ் மொழிக்கே வெளிச்சம்.

    கருத்துரைப்பிர்க்கு மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  4. சமஸ்கிருத இலக்கியங்கள் வருவதற்கு முன்னரே, சிந்து சமவெளியில் நல்ல நகர்ப்புறம் போன்ற (planned city), அகண்ட தெருக்கள், மண்ணால் ஆன கைவினைப் பொருள்கள் செய்யும் கலை இருந்தது, கடவுள் வழிபாடு இருந்தது. ஆனால் அவர்கள் கல்வெட்டுக்களாக எழுதிய எழுத்துக்களை இதுவரை யாராலும் டீகோட் செய்ய முடியவில்லை என்பது தான் நிஜம்.

    அது தமிழாகவோ அல்லது வேறு ஒரு புதிய இன மொழியாகவோ கூட இருக்கலாம் !

    ReplyDelete
  5. @கபிலன் - உண்மைதான் சகோ, ஆனால் இதுவரை பெயர்த்ததில் அவை தமிழ் பிராமி வட்டெழுத்துக்களுடன் ஒத்துபோகிறது என்றே வல்லுனர்கள் சொல்கிறார்கள்.

    தங்கள் வருகைக்கும் கருத்துரைப்பிர்க்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  6. சிறப்பான கருத்துகளை பதிவு செய்தமைக்கு மிகவும் நன்றியும் பாராட்டுகளும் . சிந்து சமவெளி நாகரீகம் தொடங்கிய காலம் இன்றைக்கு பத்தாயிரம் ஆண்டுக்கு முன்பே என ஆய்வு அறிஞ்சர் நடன காசிநாதன் தெரிவிக்கிறார் . குதிரைகள் நமது நாட்டுக்கு கிபி முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டுகளில் வந்தது . ஆரியர்கள் வருகைக்கு முன்பே சிந்து சமவெளி நாகரீகம் அழிந்து போனது இது வரலாறு .நன்றி .

    ReplyDelete
  7. அருள் கூர்ந்து தமிழ வரலாற்றை ஊன்றி படியுங்கள் அதற்க்கு பின்னர் கருத்துகளை பதவு செய்க கபிலன் அவர்கள் வேறு எதோ மொழி இனம் இருந்து இருக்க கூடு என பின்னூட்டம் இட்டு உள்ளார் தமிழினம்தான் சிந்து மக்கள் . உலகில் முதலில் தோன்றியவன் தமிழனே என கூறிய பாவாணரின் ஆய்வு ஏடுகளை தேடி வாசியுங்கள்.....

    ReplyDelete
  8. @மாலதி - உண்மை சிந்து நாகரீகம், பசுபதி என்னும் கடவுளை வழிபாட்டு வந்துள்ளது, அதுவே சிவன் என்ற ஒரு கூற்றும் உண்டு.

    கருத்துரைப்பிர்க்கு மிக்க நன்றீங்க

    ReplyDelete
  9. உங்கள் கருத்தில் இருந்து முரண்படுகிறேன் மாலதி !

    "India: A History " by John Keay எழுதிய புத்தகத்தில் இது தொடர்பாக விளக்கமாக, படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

    அது தமிழர்களாகவும் இருக்கலாம் என்று தான் சொன்னேன். இதனை உறுதிபடுத்தும் அளவிற்கு ஆதாரங்கள் இல்லை என்பதே என் கருத்து.

    பாவாணர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் படிக்கிறேன் நன்றி!

    ReplyDelete
  10. @sasikala - கருத்துரைப்பிர்க்கு மிக்க நன்றீங்க

    ReplyDelete
  11. //"India: A History " by John Keay எழுதிய புத்தகத்தில் இது தொடர்பாக விளக்கமாக, படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

    அது தமிழர்களாகவும் இருக்கலாம் என்று தான் சொன்னேன். இதனை உறுதிபடுத்தும் அளவிற்கு ஆதாரங்கள் இல்லை என்பதே என் கருத்து. //

    நீங்கள் சொல்வதைப்போல் வைத்துக் கொண்டாலும், இந்தியாவில் இத்தனை மொழிகள் இருக்கும்போதும், சிந்துசமவெளி நாகரிக காலத்தை ஒட்டிய எகிப்து, சுமேரிய, பாபிலோனிய நாகரீகங்களின் மொழிகள் எதனுடவும் அடயாளப் படுத்தப்படாமல் தமிழ் மொழியாக இருக்கலாம் என்று சொல்ல காரணம் என்ன?

    மதனின் கிமுகிபி படித்து பாருங்கள் 78ம் பக்கம், ரஷிய மொழி வல்லுனர்கள் 1973 ஆண்டு வாக்கில் கணினி மூலம் டிகோட் செய்து சிந்துசமவெளி நாகரீகத்தின் மொழி படையத் தமிழாய்த்தான் (தமிழ் பிராமிய வட்டெழுத்துக்கள்) இருக்கமுடியும் என்று உறுதிபடுத்தியுள்ளனர்

    ReplyDelete
  12. Ulagileye isai vadivil paadal punaiya eatra 2 mozhigalil onru Nam Tamil. Matronru Hebrew language. Tamila naga piranthathil Perumai kolvom Sago. Arumaiyana pathivu. Thodaravum.

    Tamilmanam vote 5.

    ReplyDelete
  13. @துரைடேனியல் - நல்ல தகவல் சகோ, தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம். கருத்துரைப்பிர்க்கு மிக்க நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்தை நான் அறிய