காலப் பெருவெளியில்
பாதச்சுவடுகளை மட்டும் விட்டுச்சென்ற
இனங்களின் மத்தியில்
காலூன்றி நின்று போராடும்
என் தமிழினம்
கயவர்கள் பலரால்
காட்டிக் கொடுக்கப்பட்டபின்னும்
கண்டவர்கள் ஆண்டுவிட்டு
சுரண்டி எடுத்த பின்னும்
சுயமாய் வாழத் துடிக்கும்
இனம் என் தமிழினம்
சதிகளின் மூலம் அழித்தெடுத்தது போக
நரிகளின் வேளையில் துடைத்தெடுத்தது போக
மீதம் இருக்கும் தன்மானம் தளராமல்
தழைக்க வழிதேடும் இனம் என் தமிழினமே
நாகரீகம் சொல்லிக்கொடுத்த எமக்கு
மோகம் பல பிறந்தாலும்
தமிழ் தாகம் தணியாமல்
தரணியில் இருக்கும் இந்த இனம்
என் தமிழினமே
உயிரை விட மானம் பெரிது
என்று மறம் கொண்டு வாழ்ந்த இனம்
மரபு கொஞ்சம் மாறியிருந்தாலும்
இன்னும் மறிக்கவில்லை இனம்
எம் தமிழினம்
ஒற்றுமைக்கு வழியில்லாமல் போக
வேற்றுமை தலைவிரித்தாட
சாதியம், மதம் என்னும்
அடிமை வாழ்வை தகர்த்து
தன் நிலைமையில் மீட்சி காண்கிறது
இந்த இனம் எம் தமிழினம்
மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்
என்னும் குரல் ஒலிக்கிறது ஓயாமல்
கணவாய் இருக்கும் அந்தக் குரல் இப்பொழுது
நிஜமாய் மாறுகிறது, மாற்றுகிறது
இந்த இனம் எம் தமிழினம்
காலச் சுழற்ச்சியில் நாம் மேலேறும் தருணம் இது
என்று தனைத்தானே உணர்ந்து
உயர்த்திக் கொள்கிறது இந்த இனம்
எம் தமிழினம்
எழுத்துபிழைகளை கவனியுங்கள் சகோ. இருப்பினும்,உணர்வூட்டும் கவிதைக்கு நன்றிகள்.
ReplyDelete@ரா.செழியன். - நிச்சயம் கவனத்தில்கொள்கிறேன் சகோ, தவறை சுட்டிகட்டியமைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி
ReplyDelete