மெல்லென மேகம் துளிர்க்க
வில்லென வானம் விரிக்க
அம்பென மழைதான் தெறிக்க
முதல்துளி முகத்தில் விழ
பலதுளி நிலத்தில் விழ
எழும்பியது மண் வசம்
நிரம்பியது என் சுவாசம்
வாடை காற்று வீசும்
இயற்கை என்னோடு பேசும்
மெல்ல துளிகளை பெருக்கும்
அதுவந்து என்னை கரைக்கும்
மனதில் மகிழ்ச்சியை நிறைக்கும்
பூக்களும் என்னோடு தளிர்க்கும்
மதியின் நிலையோ இறக்கும்
மனமோ காற்றில் பறக்கும்
திசையோ முற்றும் திறக்கும்
இசையோ செவியை நிறைக்கும்
பறவைகள் விண்ணில் பறக்கும்
உடல்மட்டும் என்னில் இருக்கும்
என்மேல் துளிகள் கோர்க்கும்
என்னை தழுவி தீர்க்கும்
விண்மேல் கொண்டு சேர்க்கும்
தவிப்பில் எனை ஈர்க்கும் மழையே!!!!!!!!!!!!
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தை நான் அறிய