பால்முகம்தான் மாறாதவன்
கண்களில் ஏனோ கண்ணீர்த்துளி
முகத்திலோ பயத்தின் வலி
ஏனோ அவனுள் ஏக்கம்
பயத்தினால் வந்த தாக்கம்
பலவந்தம்தான் படுத்தப்பட்டான்
பலம்கொண்டுதான் அழுத்தப்பட்டான்
வலியவரால் ஒடுக்கப்பட்டான்
இருப்புக்கரங்களால் அடக்கப்பட்டான்
என்னதான் செய்யும் மலர்பஞ்சு
பலமில்ல கரமோ வெறும்பிஞ்சு
சிறுக சிறுகதான் அறுக்கப்பட
இழக்க இழக்கதான் இறுக்கம் விட
உதடுகள்தான் சுருங்கியது
கண்களும்தான் அடங்கியது
அழுகையும் மறையத்தொடங்கியது
தேம்பலோ நிறையத்தொடங்கியது
அந்த முடித்திருத்தகமே மூழ்கியது சோகத்தில்
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தை நான் அறிய