Wednesday, March 2, 2011

ஆசை...

சில்லென்று
தெறித்துவிழும்
மழைத்துளிகளில்
சடுதியில் இறங்கி

ஊன் கரைந்து
உருவழிந்து
மண்ணோடு மண்ணாக
கரைந்தோடி

செடியாகி
மரமாகி
பூவாகி
வாசம் தந்து

வாடி வதங்கி
மீண்டும்
மண்ணோடு
விழுந்து மக்கி

தூசாகி
துரும்பாகி
காற்றோடு
கலந்து பறந்து

நீர்மங்களில்
படிந்து
கனலோடு
எரிந்து
ஆவியாய் படர்ந்து

குளிரோடு உறைந்து
மேகமாய் மாறி
விண்ணோடு ஓடி
மலையோடு மோதி
மழையாக வேண்டும்

மீண்டும் மனிதனாய் மட்டும்
மாறிவிடாமல்.....

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய