அலைகிறேன்
மழையோடு மல்லுகட்டி
கரைகிறேன் மணல்போல்
இரவும் வந்தது
பகல் எங்கோ
படுக்கை விரித்து படுத்துவிட்டது
சிந்தனையோ சிறகு முளைத்து
பறக்கிறது
விண்மீன்களின் வழியோடி
நிலாவினை சென்றடைய
கடலைபோல் எழுத்தலைகள்
என்னுள் எழும்பி எழும்பி
விழுந்தாலும்
பாலைவனத்தில் மலர்தேடும்
வண்டுபோல் மனம் எதனையோ
தேடிக்கொண்டிருக்க
திக்கித் தவிக்கிறது என்
பேணாமுனை
வரி வரியாய் வார்த்தெடுக்க
வார்த்தைகள் உண்டு
எழுதிக்கொள்ள
எதுகை மோனையும் உண்டு
கருமட்டும் கிடைக்கவில்லை
கவிதை பாட.....
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தை நான் அறிய