Thursday, December 15, 2011

அது மட்டுமே...


அது
அதுவாய் இருக்கிறது


அனைத்தும் அதற்க்குள்ளே
அனைத்தும் அதனாலே


அனைத்தும் அதற்கே
அதுவே அனைத்தும்


அதுவே ஆக்கம்
அதுவே ஆக்கும்
அதுவே அழிக்கும்


அதுவே மாறும்
அதுவே மாற்றும்

அதுவே நிலைக்கும்

அது நமக்கு நன்மை
அதுவே நமக்கு தீமை


அதுவே நமக்கு நேர்மறை
அதுவே நமக்கு எதிர்மறை
அதற்கு அல்ல நன்மை தீமை
அதற்கு அல்ல நேர்மறை எதிர்மறை


நாமும் அதாலே
நாமும் அதனுள்ளே
நாமும் அதுவாய்
அதுவாய் நாமும்


அது மட்டுமே உண்மை

Tuesday, December 13, 2011

மாவீரன் செண்பகராமன்







இந்திய சுதந்திரப் போராட்டம் என்றால் நமக்கு வெகுசிலரை தவிர வேறு யாரும் நினைவுக்கு வருவதில்லை, இதுகூடப் பரவாயில்லை, பலரை யாரென்றே பலருக்கு தெரியவில்லை என்றால் அதுவும் சுபாஷ் சந்திரபோசுக்கு இணையானவர் ஒருவரை பற்றி தெரியாமல் போனதும் அதிலும் அவரர் ஒரு தமிழர் என்பது தெரிந்துகொண்டபின்பு எனக்கு அழுவதா இல்லை சிரிப்பதா என்றே தெரியவில்லை.

அந்த மாவீரனின் பெயர் "செண்பகராமன்"

இவரை "ஜெய்ஹிந்த் செண்பகராமன்" என்றும் அழைப்பார்கள். முதமுதலில் ஜெய் ஹிந்த் என்று முழங்கியவர் இவரே என்னும் காரணத்தால் இப்பெயர் பெற்றார் என்று சொல்லப் படுகிறது

உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோர வைத்தார் அதுவும் எழுத்து வடிவமாக என்பதை அறியும்பொழுது நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் இயலவில்லை.

இதைவிட இன்னும் சுவாரசியம் எம்டன் என்று நாம் சொல்லும், ஹம்டன் கப்பல் சென்னையை தாக்கியபோது அதன் உதவி பொறியாளராக இருந்தவரும் இந்த செண்பகராமன் என்றால் ஆச்சர்யத்தில் மூழ்கிப்போனேன்.

இன்றைய செய்தி நாளிதழ் ஒன்றில் மாவீரன் செண்பகராமன் பற்றிய வரலாற்றை பாடத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை செய்தி வெளியானதை படித்தேன்.



இப்படிப்பட்ட மாவீரனை பற்றிய ஒரு புத்தகம்

யோகா பாலச்சந்திரன் என்னும் ஈழத்து பெண் எழுத்தாளர் வெகு ஆண்டுகளுக்கு முன் எழுதிய "மாவீரன் செண்பகராமன்" புத்தகம் சமீபத்தில் கிடைக்கநேர்ந்தது

படித்த பிறகுதான் தெரிந்தது நாம் எவ்வளவு பெரிய வரலாற்றை இழந்திருக்கிறோம், என்னும் எவ்வளவு மறைக்கப் பட்டுள்ளதோ? என்று எதிர்மறை எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

"போதிதர்மரை" மறந்ததாவது ஒரு கணக்கில் கொள்ளலாம், 1500 வருடங்கள் என்பதால், ஆனால் "செண்பகராமன் வரலாறு" 18-19 ஆம் நூற்றண்டுதானே, இவரை எப்படி மறந்தோம் என்றும் தான் எனக்கு தெரியவில்லை? உண்மையில் தமிழன் எங்கு சென்றுகொண்டிருக்கிறான் என்பதை நினைக்கும்போது வெக்கப் படுவதை தவிர வேறு எதுவும் தோன்ற வில்லை.

 இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

http://www.noolaham.org/wiki/index.php?title=மாவீரன்_செண்பகராமன்

Saturday, December 10, 2011

அரசியல் நயவஞ்சகம்...

 அரசியல் என்னும் வார்த்தையில் ஒளிந்திருக்கும் மறைபொருள் நயவஞ்சகமே. அதிகார வர்கத்தின் அடக்குமுறையும், ஜனநாயம் என்னும் போலி முகமூடியில் ஏமாற்று, பித்தலாட்ட, ஆதிக்க வெறியே மிஞ்சுகிறது.

 காங்கிரசு சென்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்து இலவசங்களி வாரி வழங்கியதன் உள்நோக்கம். தமிழ்ஈழ அழிப்பு. தமிழகத்துக்கு இலவசங்களையும், இலங்கைக்கு ராணுவ உதவிகளையும் வாரி வழங்கி கொன்றொழித்தது தமிழ் இனத்தை.

 கூடங்குளத்தை எதிர்த்து நாம் போராட, திரு. அப்துல் கலாமை ஆயுதமாய் பயன்படுத்தியதோடு இல்லாமல், மதவாதம், வெளிநாட்டு சதி என்று பலவாறு திரிக்க முயல்கிறது.

 கேரளாவில் தனது ஆட்சி என்பதால் முல்லை பெரியாறு பிரச்னையை தூண்டி தமிழக கேரள மக்களிடையே விரோதத்தை வளர்க்கவும், கூடங்குள பிரச்சனையையும், இதையும் ஒப்பிட்டு ஏமாற்றவும், கேரள அரசியல் வாதிகளை தூண்டிவிட்டு அமைதி காக்கிறது.

 இதனுடன் கூட்டணி வைத்திருக்கும்  தி.மு.க, கனிமொழி ஜாமீனில் வெளி வரும் வரை வெறும் அறிக்கையை விட்டு விட்டு ஜாமீன் கிடைத்தவுடன் போராட்டம் என்று அறிவித்ததோடு மட்டும் இல்லாமல், காங்கிரசுடன் கூட்டணி பாதிப்பில்லை என்று வேறு சொல்லிக் கொள்கிறது. மக்களுக்கு எதிராக செயல்படும் கட்சியுடன் என்ன கூட்டணி வேண்டி இருக்கு, இது யாரை ஏமாற்றும் நாடகம்?

2G அலைக்கற்றை ஊழலில் பா.சிதம்பரம் சம்பத்தப் பட்டுள்ளதாக பிரச்சனை எழுந்துள்ள போதும், இன்னும் மொவுனம் காப்பது எதனால்? கூட்டணிக் கட்சியின் ராஜா, கனிமொழி மட்டும் கைது செய்யப் பட்டு சிதம்பரம் பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்? இது யாரை முட்டாளாக நினைக்கும் வேளை?

இவ்வளவு நயவஞ்சகமான செயல்கள் செய்து ஆட்சியை காப்பாற்றி இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? மக்களுக்கு நல்லது செய்யவா? இல்லை இன்னும் கொள்ளையடிக்கவா?

இது எதிர்த்து பிஜேபி குரல் கொடுத்தாலும், இந்த செயல்கள் அவர்களுக்கும் பொருந்தும்.

 என்னதான் தினமலர் முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழர்களுக்கு சாதகமாய் எழுதினாலும், கூடங்குலப் பிரச்சனையைப் பற்றி எழுதி தமிழ் மக்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட விளைவால் ஏற்ப்பட்ட சறுக்கலை சமாளிக்கவே அன்றி தமிழ் மக்கள் மீது உண்மையான பற்றோ அல்லது நடுநிலமையான செய்தியை வழங்கவோ அல்ல என்பது தான் உண்மை. சறுக்கலை சரிகட்ட கொஞ்சநாள் நல்லவிதமாக செய்தி வெளியிட்டுவிட்டு மீண்டும் தன புத்தியை காண்பிப்பது என்பது இந்த பத்திரிக்கைக்கு புதிதல்ல. 

என்னதான் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இந்த அதிமுக தீர்மானங்கள் போட்டாலும் சமச்சீர் கல்வியை தடை செய்ய முயன்றது ஏன்? புதிய தலைமை செயலகத்தை பயன்படுத்தாமல் கிடப்பில் போடுவது ஏன்? சிறந்த ஒரு நூலகத்தை அகற்ற முயல்வது ஏன்?

 அண்ணா ஹோசரேவேன் மசோதாவால் ஊழலை ஒழிக்க முடியாதெனில் அதை ஒழிக்க நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேள்வி கேட்க வழியில்லை. இப்படி சொல்வதே ஒரு அரசியல்வாதி என்னும் பொழுது இவர்களை என்ன செய்தால் தகும்.

என்ன சொன்னாலும் மக்கள் முட்டாளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் அதிலும் மோசமாக இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.      

Friday, December 9, 2011

முகமூடியோடு...

 
மூடி மறைத்த முகத்தோடு ஓடுகிறேன்
என் உண்மை முகத்தைத் தேடி
என்றாவது கண்டுப்பிடித்து விடுவேன்
என்ற முகமூடியோடு
----------------------------------------






கடவுளாய் இருக்க முயற்ச்சித்தேன்
கயவன் என்றது உலகம்


பதறி ஓடினேன்
பைத்தியக்காரன் என்றது அதே உலகம்


எதுவும் தடுக்கவில்லை என் கருணையை
காசைத்தவிர
-----------------------------------------



இறந்தகால நினைவுகளை இழுத்து
நிகழ்காலத்தை இறக்கச் செய்யும்
என் தனிமை
-----------------------------------------




எந்திர வாழ்க்கையில்
சிக்கி சிதையும் பூக்களாய்
மகிழ்ச்சி




நன்றி - படங்கள் Google

Friday, December 2, 2011

மருந்தாகியது... (மீள்பதிவு)

அறியா மனது
மண்டியிட்டக் கால்கள்

செய்யாத் தவறு
அடிவாங்கியக் கைகள்

கோணாத மனம்
குட்டுப்பட்டத் தலை

காதல் வலி
கதறிய நெஞ்சம்

தோல்வியின் தொடர்ச்சி
கலங்கியக் கண்கள்

வெற்றியில் வீழ்ச்சி
ஏங்கிய நெஞ்சம்

உணர்வின் ஏக்கம்
கசிந்தக் கண்ணீர்

அழிந்த இனம்
நரக வேதனை

புரிந்த மனம்
பொய்யான சோதனை

மறைந்த உறவு
உறைந்த தாக்கம்

குலைந்த நட்பு
 விளைந்த நோக்கம்

மருந்தாகியது காலம்...