இதுவரை அனைத்து பிரச்சனைகளிலும் தமிழ் இனத்திற்கும், தமிழ் மக்களுக்கும் எதிராகவே கருத்துக்களை பிரசுரித்துவந்த தினமலர், எல்லை வரம்பையும் மீறி, அநாகரீகமாகவும், தமிழ் மக்களின் அனைவரது மனமும் புண்படும் அளவிற்கு ஒரு கேவலமான செய்தியை பதித்து வக்கிரத்தின் எல்லையைத் தாண்டி இருக்கும் இந்த தினமலர், இன்று ஒட்டுமொத்த தமிழரின் வெறுப்பிற்கு ஆளாகி உள்ளது.
//இந்த வழக்கை, வெறுமனே ஒரு கற்பழிப்பு வழக்காகவோ, கொலை வழக்காகவோ மட்டும் கருதிவிட முடியாது. இது ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான விஷயம் மட்டுமில்லை. இரு இனங்களுக்கு இடையிலான பிரச்னை. இரு மாநிலங்களுக்கு இடையிலான விவகாரம்.//
//கோவிந்தசாமி ஒரு தமிழன். சவுமியா ஒரு கேரளத்துப் பெண். இது ஒன்று போதாதா, விஷயத்தின் வீரியத்தைப் புரிந்து கொள்ள! ஏற்கனவே அவர்களுக்கும் நமக்கும் தண்ணீர் தாவா இருக்கிறது. முல்லைப் பெரியாறு கோபத்தை, அவர்கள் இந்த வழக்கில் காட்டியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இதை உலகுக்கு உணர்த்த, ஒரு தமிழ்க்குடிதாங்கி இல்லையா, இந்த நாட்டில்?//
//கோவிந்தசாமி, சாதாரண தமிழன் மட்டுமில்லை; மாற்றுத் திறனாளியும் கூட. ஆம், அவருக்கு இடது கை கிடையாது. அப்படிப்பட்ட ஒரு பரிதாபத்துக் குரிய ஜீவனுக்கு மரண தண்டனை விதிப்பதா? கொஞ்சம் கூட மனிதாபிமான மில்லாத செயலாக இருக்கிறதே! கோவிந்தசாமி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கூட. //
ஒரு பெண்ணின் கற்பழிப்பை விளம்பரப் படுத்தியதோடு இல்லாமல், அந்த பிரச்சனையை தமிழ் உணர்வாளர்களின், ஒட்டுமொத்த தமிழ் மக்களின் போராட்டத்தோடு கலந்து கேவளப்படுத்தியுள்ளது.
மேலும் தமிழ், மலையாள மக்களிடையே பிரிவினை ஏற்ப்படுத்தும் விதத்தில் வரிகளை சேர்த்து, தமிழ்நாடு மற்றும் கேரள மக்களிடையே கலவரத்தை தூண்ட முறச்சி செய்துள்ளது. இது நாட்டின் முதன்மை பத்திரிகை இவாறு செய்திருப்பதால், இந்திய இறையாண்மைக்கு எதிராக இது பிரசுரிக்கப் பட்டிருப்பதாலும், பத்திரிக்கையை இந்திய அரசாங்கம் தடைசெய்ய வேண்டும்
ஒரு பெண்ணின் அபலத்தை பயன்படுத்தி விளம்பரம் தேட முயன்றதற்க்காகவும்
சாதி பூசலை தூண்ட முயற்சி செய்ததற்க்கும்
தமிழ் மக்களின் உணர்வை கேவலப் படுத்தியதற்க்காகவும்
தமிழர் போராட்டத்தை இழிவு படுத்தியதற்க்காகவும்
தமிழர் மலயாளி என்னும் பிரிவினையை தூண்ட முயற்சி செய்ததற்கும்
நடுநிலை தவறி, பத்திரிகை தர்மத்தை மீறியதர்க்காகவும்
மாற்று திறனாளிகளை கிண்டல் செய்ததற்காகவும்
தினமலர் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இந்திய அரசாங்கம் இதை விசாரித்து இந்த பத்திரிக்கையை தடை செய்ய வேண்டும்.
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தை நான் அறிய