Thursday, November 17, 2011

பிழைத்துப்போ தமிழே!


பிழைத்துப்போ தமிழே! பிழைத்துப்போ!

உன்னை அழிக்க ஆயிரம் அரிவாள்!

அதனை எவர் இங்கே அறிவார்!

ஆயிரம் ஆண்டுகள் கடந்தவள் நீ!

காவிரிக் கரையில் வளர்ந்தவள் நீ!

உன்னை அழிக்க வந்தவர் எவரும்!

பிழைத்ததில்லை என்பதை உலகம் அறியும்!

பிழைத்துப்போ தமிழே! பிழைத்துப்போ!

இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
தழைத்துப்போ!

நம்மினத்தை அழைத்துப்போ!

Tuesday, November 15, 2011

தினமலர் பகிரங்க மன்னிப்பு கேட்குமா?

தினமலர் பகிரங்க மன்னிப்பு கேட்குமா?

இதுவரை அனைத்து பிரச்சனைகளிலும் தமிழ் இனத்திற்கும், தமிழ் மக்களுக்கும் எதிராகவே கருத்துக்களை பிரசுரித்துவந்த தினமலர், எல்லை வரம்பையும் மீறி, அநாகரீகமாகவும், தமிழ் மக்களின் அனைவரது மனமும் புண்படும் அளவிற்கு ஒரு கேவலமான செய்தியை பதித்து வக்கிரத்தின் எல்லையைத் தாண்டி இருக்கும் இந்த தினமலர், இன்று ஒட்டுமொத்த தமிழரின் வெறுப்பிற்கு ஆளாகி உள்ளது.


//இந்த வழக்கை, வெறுமனே ஒரு கற்பழிப்பு வழக்காகவோ, கொலை வழக்காகவோ மட்டும் கருதிவிட முடியாது. இது ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான விஷயம் மட்டுமில்லை. இரு இனங்களுக்கு இடையிலான பிரச்னை. இரு மாநிலங்களுக்கு இடையிலான விவகாரம்.//

//கோவிந்தசாமி ஒரு தமிழன். சவுமியா ஒரு கேரளத்துப் பெண். இது ஒன்று போதாதா, விஷயத்தின் வீரியத்தைப் புரிந்து கொள்ள! ஏற்கனவே அவர்களுக்கும் நமக்கும் தண்ணீர் தாவா இருக்கிறது. முல்லைப் பெரியாறு கோபத்தை, அவர்கள் இந்த வழக்கில் காட்டியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இதை உலகுக்கு உணர்த்த, ஒரு தமிழ்க்குடிதாங்கி இல்லையா, இந்த நாட்டில்?//

//கோவிந்தசாமி, சாதாரண தமிழன் மட்டுமில்லை; மாற்றுத் திறனாளியும் கூட. ஆம், அவருக்கு இடது கை கிடையாது. அப்படிப்பட்ட ஒரு பரிதாபத்துக் குரிய ஜீவனுக்கு மரண தண்டனை விதிப்பதா? கொஞ்சம் கூட மனிதாபிமான மில்லாத செயலாக இருக்கிறதே! கோவிந்தசாமி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கூட. //


ஒரு பெண்ணின் கற்பழிப்பை விளம்பரப் படுத்தியதோடு இல்லாமல், அந்த பிரச்சனையை தமிழ் உணர்வாளர்களின், ஒட்டுமொத்த தமிழ் மக்களின் போராட்டத்தோடு கலந்து கேவளப்படுத்தியுள்ளது.

மேலும் தமிழ், மலையாள மக்களிடையே பிரிவினை ஏற்ப்படுத்தும் விதத்தில் வரிகளை சேர்த்து, தமிழ்நாடு மற்றும் கேரள மக்களிடையே கலவரத்தை தூண்ட முறச்சி செய்துள்ளது. இது நாட்டின் முதன்மை பத்திரிகை இவாறு செய்திருப்பதால், இந்திய இறையாண்மைக்கு எதிராக இது பிரசுரிக்கப் பட்டிருப்பதாலும், பத்திரிக்கையை இந்திய அரசாங்கம் தடைசெய்ய வேண்டும்

ஒரு பெண்ணின் அபலத்தை பயன்படுத்தி விளம்பரம் தேட முயன்றதற்க்காகவும்

சாதி பூசலை தூண்ட முயற்சி செய்ததற்க்கும்

தமிழ் மக்களின் உணர்வை கேவலப் படுத்தியதற்க்காகவும்

தமிழர் போராட்டத்தை இழிவு படுத்தியதற்க்காகவும்

தமிழர் மலயாளி என்னும் பிரிவினையை தூண்ட முயற்சி செய்ததற்கும்

நடுநிலை தவறி, பத்திரிகை தர்மத்தை மீறியதர்க்காகவும்

மாற்று திறனாளிகளை கிண்டல் செய்ததற்காகவும்

தினமலர் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இந்திய அரசாங்கம் இதை விசாரித்து இந்த பத்திரிக்கையை தடை செய்ய வேண்டும்.

Monday, November 14, 2011

செருப்பால் அடித்தாலும் திருந்தாத தினமலர் (தின மலம்)

இன்று "சிறப்பு நிருபர்" என்ற பெயரில் தினமலரில் வெளியாகியிருக்கும் "செந்தமிழர்கள் கொந்தளிக்காதது ஏன்?" என்ற தலைப்பில் ஒரு கற்பழிப்பு வழக்கையும், மூவர் தூக்கு நிறைவேற்றப் படக்கூடாது என்பதற்க்கான ஒட்டுமொத்த தமிழ் மக்களின் போராட்டத்தையும் ஒப்பிட்டு கேவளப்படுத்தி மிகவும் கீழ்த்தனமாய் செய்தி வெளியிட்டுள்ளது

இதே பத்திரிகை சங்கரராமன் கொலை வழக்கையும், காஞ்சிபுர கோவில் பூசாரி காமலீலையின் வழக்கையும், காஞ்சி சங்கரச்சாரியர்களின் காமலீளையும் சொல்வதில் ஏன்?

அதற்காக நான் சில நாட்களுக்கு முன்பு எழுதிய இந்த பதிவை மீள்பதிவு செய்கிறேன்


செருப்பால் அடித்தாலும் திருந்தாத தினமலர் (தின மலம்)


ஒட்டுமொத்த தமிழருக்கு எதிராக தமிழ்நாட்டில் தமிழில் வெளிவரும் தின(மலம்)மலர் பத்திரிக்கையை எதிர்த்து குரல் கொடுப்போம். ஒவ்வொரு முறையும் காரி உமிழும்படி செய்தி பத்திதால் வன்மையாகவும் கேவலமாகவும் கண்டிப்போம்.

எந்த ஒரு பார்ப்பனர் நடத்தும் பத்திரிக்கையை தமிழ்நாட்டில் மதிப்பில்லாமல் ஆக்குவோம். நம்நாட்டில் இருந்துகொண்டு நம்மோடு வாழ்ந்துகொண்டு, நம்மை அண்டி பிழைத்துக்கொண்டு நம்மையே ஆள, காலில் போட்டு மிதித்து நசுக்க முயலும் அந்த வந்தேறி கும்பலுக்கு சரியான படம் கற்ப்பிப்போம்.

உச்சநீதிமன்றமே மரண தண்டனைக்கு தடை விதித்த தவறு என்று உச்சநீதி மன்றத்தை அவமதிப்பு செய்வதோடு மட்டும் இல்லாமல், அவர்களை கொல்லத்துடிக்கும் இந்த பார்ப்பன நாளிதழ் ஒவ்வொரு முறையும் தீவிர வாதிகளை முன்னிறுத்தி செய்தி வெளியிடுவதும்.

பெரியாரைப் பற்றி தவறாக செய்தி வெளியிடுவதும், ஆத்திகம் என்னும் பெயராலும், விடையாட்டு, தொழில் வர்த்தகம், திரைத்துறை என்று எந்த துறையாய் இருந்தாலும் திறமை இருந்தாலும் பார்ப்பனர் அல்லாதவரை பின்னுக்கு தள்ளியும், திறமையே இல்லாத பார்ப்பனராய் இருந்தாலும் அவர்களை முன்னிறுத்தி புகழ்வதும்,

பார்ப்பனர்கள் பற்றிய தவறான செய்திகளை மூடி மறைப்பதும், பார்ப்பனர் அல்லாதவர் பற்றிய புரளி செய்திகளை ஊத்தி பெரிதாக்குவதும் இந்த புல்லுருவி பத்திரிக்கையின் தலையாய வேலை.

தமிழையும், தமிழனையும், தமிழ்ப் பண்பாடு கலாச்சாரத்தை கேவலப் படுத்துவதும். பிறநாட்டு கலாச்சார மோகத்தை ஊக்குவிப்பதும் முழுநேர பணியாகவும் செய்து வருகிறது.

தூக்கு தண்டனையை குறைக்க கூறி தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை குறை சொல்லாமல் இருப்பதும். ஆனால் தூக்கு தண்டனை நிறைவேற்ற சதிவேலை மிக்க செய்திகளை பதிப்பதும். பெரியாரப் பற்றி இழிவு செய்தியை மக்கள் மனதில் உருவாக்குவதும். மோடி, அத்வானி போன்ற திருட்டு கும்பல் செய்யும் நாடகத்திற்கு கூட்டம் அலை மோதியது, அதரவு பெருகுகிறது என்று புரளி செய்தி சொல்லவும்,

பார்ப்பனர் அனைவரும் திறமையானவர்கள், நல்லவர்கள் என்றும் தூய தமிழர்கள் அனைவரும் முட்டாள்கள் திறமை இல்லாதவர்கள் போன்று ஒரு மாயத்திரையை செய்வதும் இதே பத்திரிக்கைதான்.


காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மோடியை விமர்சித்தால் இந்த பத்திரிகை ஏன் அவரை விமசிக்கிறது? நியாயமான பத்திரிகை என்றால் பிஜேபி யை விமர்சித்தால் இந்த பத்திரிகை அவர்களை எதிர்ப்பது ஏன்? திமுக ஆட்சியில் இலவசம் கொடுத்து மக்களை கெடுக்கிறார்கள் என்று கூப்பாடு போட்ட இவர்கள் இப்போது ஜெயலலிதா கொடுக்கும்போது அதை கண்டிக்காமல் தலைப்பு செய்தியாகவும், ஜெயலலிதாவை யாராவது புகழ்ந்தால் அதை முக்கிய செய்தியாகவும் வெளியிடுவது ஏன்? உண்மையின் உரைகல் என்று போட்டுவிட்டு பொய்யாய் புளிகித்தல்லும் புளுகு மூட்டை பத்திரிகை இது.


பாம்பையும் பார்ப்பானையும் ஒரே நேரத்தில் கண்டால் பாம்பை விட்டுவிடு பாப்பானை அடி என்றார் பெரியார். முதலில் நாம் அடிக்க வேண்டியது பாம்பாய் நெளியும் இந்த பார்ப்பன பத்திரிக்கைகளைத்தான்.

உண்மையில் இது தினமலர் இல்லை தினமலம் தான். தூக்கி எறியுங்கள் இந்த குப்பையை. இனி இலவசமாய் கொடுத்தாலும் இந்தப் பத்திர்க்கையை யாரும் வாங்காதிர்கள். வேண்டுமானால் குழந்தைகள் உள்ள வீட்டில் வாங்குகள் கழுவி விடாமல் மலம் துடைக்க பயன்படுத்தலாம் இந்த தின(மலம்)மலரை.

Friday, November 11, 2011

விடுதலை வேட்கை….. (சிறுகதை)

சாலையெங்கும் மக்கள் வெள்ளம், ஆங்காங்கே சிறு சிறு சலசலப்பு, சில ஆரவாரம். சிறைச்சாலை வாயிலில் இருந்து அரண்மனை வாசல் வரை கடலென திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் ஊர்ந்துச் சென்றது ஒரு மாட்டுவண்டி அனைவரது கண்களும் அவன்மேல்.

வண்டியின் மத்தியில் நடப்பட்டக் கம்பத்தில் கட்டப்பட்ட நிலையில் ஓர் இளைஞன், தினவெடுத்த தோள்கள், அகன்ற மார்பு, அழகிய முகம், முறுக்கிய மீசை, உடலெங்கும் காயத்தழும்புகள் அவன் வீரத்தைப் பறைசாற்ற, கோபத்தால் சிவந்த கண்களின் வெறித்தப்பர்வை மட்டும் அரண்மனையை நோக்கியபடியே.

விசாரணை மன்றம் முழுதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது, அரசன் பலபீமனும், முதல் மந்திரியாரும் ஆலோசனையில் இருக்க, பிற மந்திரிகளும் மக்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டதால் மன்றமெங்கும் இளமாறன், இளமாறன் என்ற சலசலப்பு நிறைந்தே இருந்தது.

“இழுத்துவரச் சொல்லுங்கள் இளமாறனை”

என்ற முதல் மந்திரியரின் குரல் அனைவரது பேச்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க எங்கும் அமைதி.

இழுத்துவரப்பட்டான் இளமாறன், அவன்தான் முன்பு கம்பத்துடன் கட்டப்பட்டு, வீதி ஊர்வலம் கொணரப் பட்டவன், இதோ இங்கே இரும்புச் சங்கிலியால் கைகள் பிணைக்கப்பட்டு இழுத்து வரப்படுபவனும் அவன்தான், அதே இளமாறன் தான்.

நிசப்த்தம், எங்கும் நிசப்த்தம் அனைவரது முகமும் ஒரே நிலையில், அனைவரது பார்வையும் அவன்மீதே,

“மன்னருக்கு மரியாதையை செய்”

என்ற மந்திரியின் குரல் இம்முறை அமைதியைக் குலைத்தது
இதழோரம் ஓர் அலட்சியப் புன்னகையை உதிரவிட்டான் இளமாறன்.

அதைக் கண்டும் காணாதது போல் பேசினான் மன்னன் பலபீமன்

"நீ ஏன் இப்படி இங்கு நிறுத்தப்பட்டுல்லாய், தெரியுமா உனக்கு?"

"அதைத் தாங்களே சொல்லிவிடலாமே!" என்றான் இளமாறன்

“கலகம் செய்தாய், அரசுக்கு எதிராக மக்களை தூண்டினாய், புரட்சி செய்ய முயன்றாய்”

என்று இளமாறன் மீது குற்றங்களை அடிக்கினார் முதல் மந்திரி

“என்ன கலகம் செய்தேன்?”

“வரி கொடுக்க முடியாது என்றாய்”

“எம்மினத்தவர் மட்டும் மும்மடங்கு வரி கொடுக்க இயலாது என்றேன்”

"உங்கள் மொழியை மட்டும் ஆட்சி மொழியாக அறிவிக்கச் சொன்னாய்"

"எங்கள் மொழியையும் அறிவிக்கச் சொன்னேன், எங்கள் மொழியை மட்டுமல்ல"

"மன்னருக்கு எதிராக மக்களைத் தூண்டினாய்"

"மக்களைத் தூண்டவில்லை, முறையிட்டேன். மக்களுக்காகத்தான் மன்னன் அந்த மன்னனே உதாசீனப் படுத்தும் பொழுது, மக்களிடம்தான் செல்ல முடியும், அவர்களிடம்தான் முறையிட முடியும்"

"நீ என்ன காரணங்கள் கூறினாலும் சரி உனக்கு தண்டனை உறுதி"

“மரணத்தைப் பற்றி கவலை கொள்ளவில்லை நான், என் கவலையெல்லாம், இந்த நாட்டைப் பற்றித்தான், நட்டுமக்களைப் பற்றித்தான், கேள்விக் குறியாய் இருக்கும் அவர்கள் எதிர்காலம் பற்றித்தான். இனி என்ன? நான் இப்பொழதும் கேட்கிறேன்? கூடியிருக்கும் மக்களே, சகோதரர்களே, நாம் அனைவரும் ஒன்றுதான் மொழியால் இனத்தால் வேருபட்டபோதும் நாமும் மக்கள்தான், உழைக்கும் மக்களின் வர்க்கம் ஒன்றுதான், உழைப்பை உறிஞ்சும்போது வரும் வலி ஒன்றுதான். இப்பொழுது கூறுங்கள் நான் கேட்பது தவறா?, உரிமைகள் மறுக்கப்படுவது அடுக்குமா?, மக்களை அடிமைப் படுத்துவது முறையா? இனத்தை அழிக்க நினைப்பது செயலா? நீங்கள் கூறுங்கள், தீர்ப்பை நீங்களே கூறுங்கள், இப்பொழுதே கூறுங்கள், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பென்று எண்ணி உயிர்த்துரக்கிறேன் நான்"

"வேண்டாம் வேண்டாம்" என்றது சில குரல்

"இளமாறனை விடுதலை செய்"

"இளமாறன் கோரிக்கைகளை நிறைவேற்று"

"இளமாறனை விடுதலை செய்,
இளமாறனை விடுதலை செய்,
இளமாறனை விடுதலை செய்,....................."
"விடுதலை, விடுதலை........................ "

எங்கும் எழுந்த அந்த ஒலி மன்றம் முழுதும் ஒலித்தது, அரண்மனை முழுதும் ஒலித்தது

இந்த ஒலிகளின் நடுவே, திடீர் என்று கதவுகள் திறக்கப்படும் சப்தம் கேட்க்கவே திடுக்கிட்டு விழித்தான் இளமாறன்.

கருங்கல் உத்திரம், குறைந்த வெளிச்சம் நான் இன்னும் சிறைச்சாலையில்தான் இருக்கிறேன், அவையனைத்தும் கனவா?

என்று இளமாறன் நினைக்கையில் மீண்டும் கதவுகள் திறக்கப்படும் சப்தம்

இதோ வந்துவிட்டனர் நீதிமன்றம் அழைத்துச்செல்ல இல்லை இல்லை விசாரணை மன்றம், நீதி கிடைத்தால்தானே நீதி மன்றம்?.

இளமாறன் சிறைக்குள் நுழைந்த வீரர்களில் ஒருவன்

"இம் எழுந்திரு செல்லலாம்" என்று கட்டளையிட்டான்.

எழுந்த நின்ற இளமாறன் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, கைகளில் விலங்குகளால் பூட்டப்பட்டான். இறுதியாக ஒருவன் அவன் கண்களைக் கட்டினான்.

"எதற்கு கண்களை கட்டுகிறாய்?" என்றான் இளமாறன்

"மன்னர் உத்தரவு" என்றான் இளமாறன் கண்களைக் கட்டியவன்.

“நான் கண்ட கனவு நினைவாகப் போகிறது, எம்மினத்திற்கு விடுதலை வெகு தொலைவில் இல்லை, மக்களிடம் முறையிடப்போகிறேன் மக்கள் புரட்சி துளிர்க்கும், நான் நினைத்த முடிவுகள் கிடைக்கும், கண்கள் கட்டப்பட்டால் என்ன? மூடர்களே என் சிந்தனையை கட்டிவிட முடியாதே?, கரங்கள் கட்டப்பட்டால் என்ன? நெஞ்சின் உரம் கட்டுப்பட்டு விடாதே?, இளமாறன் யாரென்று அறியாதவர்கள் அறிந்து கொள்ளட்டும், என்னை இதுவரை தெரியாத மக்கள் தெரிந்து கொள்ளட்டும், என் புரட்ச்சியை புரியாத இந்த அரசு புரிந்து கொள்ளட்டும்”

என்று அவர்களுடன் நடக்கலானான். அவன் சிந்தை முழுதும் விசாரணை மன்றம், பலபீமன், முதல் மந்திரி, மக்கள் என்றே சுழன்றது.

"நில்" என்றது ஒரு குரல் திடீர் என்று

"ஏன்?" என்றான் இளமாறன், பதிலேதும் இல்லை.

இளமாறன் கண்கட்டு அவிழ்க்கப் பட்டது,

கண்களை மெல்லத் திறந்தான், அதிர்ச்சியில் உறைந்தே போனான்.

நீதி மன்றமும் இல்லை, மக்கள் கூட்டமும் இல்லை, மன்னரும் இல்லை, மந்திரியுமில்லை அவன் நின்றது கொலைக்களம்

"உனக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டுவிட்டது
மரியாதையாக மண்டியிடு" என்றான் ஒருவன்

பதறினான் இளமாறன், தவித்தான், துடித்தான்

"அநியாயம், அநீதி அநீதி விசாரணை இல்லாமல் தண்டனையா? கொடுமை, கொடுமை, கொடுமையிலும் கொடுமை......."

அவன் முடிக்கும் முன் அவன் உயிரைக் குடித்தது
ஒரு கொடியவனின் வாள் முனை. மெல்ல மெல்ல அடங்கியது அவன் உயிர் மட்டுமல்ல, அவன் கொண்ட சிந்தனையும், விடுதலையின் வேட்கையும் தான்.

Saturday, October 29, 2011

தமிழின துரோகி பத்திரிகை இந்த தின(மலம்)மலர்

நாட்டுக்காக நல்லது செய்யவும் உண்மையை எடுத்துக் கூறவுமே இந்த பத்திரிகை, ஆனால் பத்திரிகை தர்மம், நீதி, நியாயம் என்று வரைமுறையும் இல்லாமல் ஒரு பத்திரிகை இருக்கிறது புளுகுமூட்டை பத்திரிகை என்றால் அது இந்த தின(மலம்)மலர் தான்.

யார் இந்த ஜெயின்? இந்திய அணுமின் கழகத் தலைவர்தானே, அவர் ஒன்றும் உளவுத்துறை தலைவரோ, உள்துறை மந்திரியோ அல்லவே? அவர் சொல்லிவிட்டாராம் கூடங்குள பிரச்சனையில் வெளிநாட்டின் உதவி இருக்கிறது என்று, அது உண்மையா இல்லை பொய்யா என்றுகூட பாராமல் தலையங்கமாய் சதி? என்று பதித்திர்க்கும் இந்த தின(மலம்)மலரைப் பற்றி சொன்னால் மட்டும் வக்காலத்து வாங்க வந்துவிடும் இரு கூட்டம்

ஒன்று பார்ப்பன கும்பல், இன்னொன்று சுயநலம் பிடித்து சொந்த நாட்டு மக்களையே பணயம் வைக்கும் கும்பல்

அணுமின் கழக தலைவரே சொல்லி இருக்கிறார், "ஹாட் ரன்" எனப்படும் தொழில்நுட்ப பணி முடிந்துவிட்டால், குளிரூட்டும் பணி தொடர்ந்து நடக்க வேண்டும் இல்லை என்றால் அதில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்ப்படும் என்று, சாதாரண அடிப்படை பணிகள் பாதிக்கப் பட்டாலே இவ்வளவு ஆபத்து என்றால் சுனாமி போன்ற இயற்க்கை சீற்ற காலங்களில் இந்த பணிகள் பாதிக்கபடதா என்ன? இன்னும் எவ்வளவு பாதிப்புகள் வரக்கூடும்?

அணுமின் கழக தலைவர் என்றால் அதற்கு என்ன பாதுகாப்பு தருகிறோம், உத்திரவாதம் தருகிறோம் என்றுதான் சொல்லவேண்டுமே தவிர, மக்கள் போராட்டத்தில் வெளிநாடுகளின் தொடர்பு இருக்க இல்லை என்பதெல்லாம் உளவுத்துறைதான் சொல்லவேண்டும், இல்லை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். உங்கள் வேலையை மட்டும் நீங்கள் பாருங்கள் இந்த திரிப்பு வேலைகளை எல்லாம் உங்களுக்கு வேண்டாம்.

அதுபோல் அங்கு அமைதியாக போராட்டம்
நடைபெற்றுக் கொண்டிருக்க, வீண் புரட்டு செய்தியாகவும், புளுகு மூட்டையகவும் இருக்கும் தமிழின துரோகி பார்ப்பன பத்திரிகை தின(மலம்)மலர் அங்கு பெரிய அளவில் சாலை மறியல்கள் நடக்கிறது என்றும், அதனால் மத்திய படையும், கடற்படையும் அங்கு தீவிர கண்காணிப்பில் இருக்கிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது,

இதுநாள் வரையில் தமிழர் மீனவர் பிரச்சனையில் எவ்வளவு போராட்டம் நடத்தி இருப்போம் எதாவது ஒன்றுக்காவது இந்த தினமலர் இப்படி செய்தி வெளியிட்டது உண்டா? மத்திய அரசு இந்த அளவிற்கு கவனத்தில் கொண்டதுண்டா?

தமிழ் நாட்டு மக்களின் உயிரைப் பணயம் வைத்து உங்களுக்கு மின்சாரம் வேண்டும், ஆனால் எங்களது கோரிக்கையை, வேண்டுகோளை நீங்கள் காதில் வாங்கிக்கொள்ள மாட்டீர்கள்? எங்களை யார் அசிங்கப் படுத்தி பேசினாலும் கண்டனம் தெரிவிக்க மாட்டீர்கள்? உங்கள் அரசியல் உள்நோக்கத்துக்காக எங்கள் இனத்தை பலியிடுவீர்கள்? எங்கள் மாநிலத்திற்கு நன்மை செய்வதென்றால் உங்களுக்கு கசப்பாய் தோன்றும் ?

இப்படி பலகேள்விகள் கேட்கலாம், எவ்வளவு கேள்வி கேட்டாலும் இந்த பார்ப்பானும், பார்ப்பன பத்திரிக்கையும் அதற்க்கு வக்காலத்து வாங்குபவர்களும் திருந்தப் போவதில்லை.

அதுசரி வீட்டில் மின்னசாரம் இல்லை என்று நமது மக்களின் உயிரை பணயம் வைப்பது தவறில்லை என்று தமிழனே சுயநலமாய் சிந்திக்கும்போது, இந்த தின(மலம்)மலர் தமிழ் போராட்டம் வெற்றி பெற்று விடக் கூடாது என்னும் பார்ப்பன புத்தியில்தானே செய்கிறது, அவர்களுக்கும் இந்த தின(மலம்)மலருக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.