Monday, August 30, 2010

அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்....

வாழ்க்கையில் சில சம்பவங்களை மறக்க முடியாது, அதிலும் பிறரை கிண்டல் செய்வதிலும்(பார்ரா....), பிறர் கேலிக்கு ஆளாவதிலும்(இப்ப சொல்றியே இது கரெக்ட்....) ஒரு சுகம் இருக்கத்தான் செய்யும். என் நண்பன் ஒருவனுக்கு நான் தினமும் ஒரு பல்பு கொடுக்கவிடில் என் தலை சுக்குநூறாக சிதறிவிடும்(அவன் ஆயிரம் பல்பு குடுப்பான?), என்ன செய்வது நமக்கு வாய்த்த அடிமை அவன் ஒருவன்தான்.

எல்லாவற்றையும் மனதில் வைத்து எத்தனைநாள் திட்டம் போட்டானோ தெரியாது,
வழக்கம்போல் இன்றும் பல்பு கொடுக்கலாம் என்று

"மச்சான் பிசிய?" என்றேன்

"இல்ல ஏண்டா?" என்றவனிடம்

"கொஞ்சம் இங்க வா, ஒரு உதவி பண்ணுடா ரொம்ப முக்கியம்" என்றேன் மூன்று மேசைகள் தள்ளி அமர்ந்திருந்தவனை.

எனக்காக தான் செய்துகொண்டிருந்த வேலையை விட்டு என்னிடம் வந்தவனை
"இல்ல மச்சி இந்த பேப்பரை இந்த குப்பைதொட்டியில போடணும், நீயே கொஞ்சம் போடேன்" என்று சொன்னேன் சிரிக்காமல் கையில் பேப்பருடன் என் அருகில் இருந்த குப்பைத் தொட்டியை சுட்டிக்காட்டியபடி.

அருகில் இருந்த அனைவரும் சிரிக்கும் முன், என்கையிலிருந்த பேப்பரை பிடுங்கி என்தலையில் போட்டுவிட்டு கூலாக சொன்னான் சண்டாளன் "மச்சா குப்பையில போட்டுட்டேன் டா" அப்பொழுது அனைவரின் சிரிப்பைவிட என் காதில் ஒலித்தது சந்தானத்தின் டயலாக் "அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்".

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய