Monday, April 4, 2011

உயிர் குடித்த கவிதை...

கவிதையால் காதல் வரும்
கண்ணீர் வரும், கனம் வரும்
கனவு வரும், மரபு வரும்
மரணம்கூட வருமோ...

கடன் கொடுத்தக் கவிதை
உனக்கு காலனாய் மாறியதே
மனம் பிழிந்து எழுதியது
உன் உயிர்கிழித்துப் போனதே

ஒர்மனமாய் நான் பாடியது
உனக்கு ஒப்பாரியாய் ஆனது
தவமாலையாய் நான் பாடியது
உனக்கு சவமாலையாய் போனது

உனக்காக கவிதை பாடியவனை
இன்று உனைப்பற்றி பாடவிட்டாயடா
கடன்காரா ஏனோ என் கண்மறைந்து
போனாயடா?

எனைமறந்து வாழ்கிறேன் என்றும்
உனைநினைத்து சாகிறேன்

மறக்கவில்லை நான் உன்னையும்
உன் உயிரைக்குடித்த கவிதையையும்

"இன்று என் கண்ணீரை
துடைக்காவிட்டலும் பரவாயில்லை
என்றாவது என்மனமறிந்து
திரும்பிவா அன்று காத்திருக்கும்
என் கல்லறைப்பூகள் கைக்குட்டையாக"

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய