Wednesday, January 4, 2012

அறிவற்ற அரசு இயந்திரம்


 மக்களுக்காக மக்களால் நடத்தடப் படுவதுதான் ஜனநாயகம், அப்படி என்றால் ஜனநாயகம் என்பது  நமக்காக நாமே செய்வதுதான் என்பது நேரடிபொருள்படும் இல்லையா? இதை நாம் முழுதாய் உணர்ந்திருக்கிறோமா? என்றால் இல்லை என்று என்னால் அடித்து சொல்லமுடியும்.

 இங்கு இருக்கும் மக்களும் சரி, மக்களில் இருந்து வந்து ஆட்சி செய்யும் அரசியல்வாதியானாலும் சரி, அதே மக்களில் இருந்து பணியாற்றும் அரசாங்க அதிகரியானாலும் சரி யாருக்குமே இந்த தெளிவு இருப்பதில்லை, அப்படி அது இருக்குமேயானால் இவ்வளவு ஒரு கேவலமான அரசாங்கமோ அரசு எந்திரமோ இருக்காது.


 ஒரு அரசாங்க மருத்துவமனையில் கண்டபடி புலம்பி நின்றார் ஒருவர், சுத்தமில்லை, அக்கறை இல்லை, கவனிப்பு இல்லை, உங்களுக்கு எதுக்கு ஒரு உடுப்பு, மாதா மாதம் சம்பளம், அரசாங்க வசதிகள் என்று பொரிந்து தள்ளினார், நானும் அதேபோல் ஒருமுறை அல்ல பலமுறை கத்தி இருக்கிறேன் இருக்கிறேன், சரி அவரை சமாதனப்படுத்தலாம் என்று நீங்கள் யார்? என்ன நடந்தது? என்று நான் கேட்க அவர் பொதுப்பணித்துறை ஊழியராம் நோயாளியாய் இருந்த அவரது உறவினர் ஒருவரை அவர்கள் சரியாக கவனிக்கவில்லையாம், எனக்கு சிரிப்பதா இல்லை அழுவாத என்று தெரியாமல் விழித்தபடி நின்றதுதான் மிச்சம். ஏன் என்றால் எங்கள் வீதி சாலை கிண்ணம், சாக்கடை சந்தனம்.

  அப்படிப்பட்ட துறையை சேர்ந்த ஒருவர் இன்னொரு துறையை சேர்ந்தவர்களை வசை படுகிறார். இதை என்னவென்று சொல்வது? என்று நினைத்து எனக்குள் நான் நொந்துகொண்டேன்.




 இதுதான் இன்றைய அரசு எந்திரத்தின் நிலைமை, புயல் கரையை கடக்கும் என்று இரண்டு மூன்று  நாட்களாகவே தகவல் வந்தவண்ணம் இருக்க, கடந்து போன பின்னும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என்றால் அப்படி என்னதான் வேலை செய்கிறார்கள் இவர்கள் என்று கேட்கத்தோன்றுகிறது.

 அப்படி யாராவது ஒருவன் பொங்கியெழுந்து கோவத்தில் குதறிவிட்டால்கூட உடனே போராட்டம் வேலை நிறுத்தம், ஏன்? அவனை ஒருவன் அடித்தால் நாளை நம்மை இன்னொருவன அடிப்பானே என்ற பயம். அதற்காக தவறுசெய்வதையோ கடமை தவறுவதை சரி செய்துகொள்வதில்லை, போராட்டம் வேலைநிறுத்தம் செய்து பூசி மொழிகிவிடுவது. நல்லா இருக்கு உங்க நியாயம்.

 ஒருவன் தவறு செய்தால் அதை கேட்டு கண்டிக்கவே
ண்டியவன் அதே தவறுசெய்கிறான், அவனை கண்டிக்க வேண்டியவன் அவனை மிஞ்சி தவறு செய்கிறான் இது ஒரு சங்கிலித்தொடராய் போய்கொண்டே இருக்கிறது, இவர்களுக்கு ஒரு பாதிப்பென்றால் அடுத்தவனை குறை சொல்லும் இவர்கள், அடுத்தவன் இவர்களால் அடையும் பாதிப்பை பற்றி கவலை கொள்வதில்லை பிறகு இவர்கள் மட்டும் எப்படி அடுத்தவரிடம் எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.






 இங்கு யாருமே அவர் அவர் முதுகை பார்க்காமல் அடுத்தவர் முதுகை பார்த்து சிரிப்பவராய் இருக்கும் போது, இது ஒரு அறிவற்ற செயல் என்பது முழுமையாய் நிருபணம் ஆகிறது. இது குறிப்பிட்ட துறைகளில் மட்டும் அல்ல எனது நேரடி அனுபவத்தில் அனைத்து துறைகளிலும் இதே நிலைமைதான்.

டிஸ்கி: இவர்களை தவிர்த்து கண்ணியமாகவும், கடமை உணர்வோடும், நேர்மையாக பணியாற்றும் அரசு அதிகாரிகள் ஒருசிலர் இருக்கவே செய்கிறார்கள் ஆனால் அவர்கள் படும்பாடு வேதனை.  

                         

1 comment:

  1. வணக்கம் நிவாஸ் நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பணிகள்.

    ReplyDelete

உங்கள் கருத்தை நான் அறிய